“சிவ சக்தி” என்ற படைக்கும் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

RISHI PATHNI

“சிவ சக்தி” என்ற படைக்கும் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நீர் சக்தி இல்லை என்றால்… நெருப்பு எரிய சக்தி இல்லை. நெருப்பாக ஆவி கொண்டு (உஷ்ண அலை) நீர் நிலை பெறாவிட்டால்… நீருக்கும் வளர்ச்சி இல்லை.

தனித்த சக்தி.. தனி அணு… தனித்த ஒன்றுக்கு… எப்படிச் செயல் இல்லையோ அதைப் போன்று ஆத்ம சக்தியின் சித்து வளர்ப்பிற்கு ஆண் பெண் இயக்கத் தொடர்பு ஆத்மக் கூட்டு நிலை செயல் கொள்ளும் வளர்ப்பு நிலை அவசியம் வேண்டும்.

ரிஷிபத்தினி… ரிஷி சக்தி… என்ற கூட்டு ஐக்கிய ஆத்ம தொடர் சித்து பெறும் தம்பதியின் வழித் தொடரினால் தான்
1.உணர்வின் எண்ணத்தால் செயல் கொள்ளும் படைப்புத் தொடர் ஆத்ம அணு வளர்ப்பின் தொடர் அலையை
2.இன்று நம் பூமியில் உள்ள மனித சக்தியைப் போன்ற தொடர் அலையை வழிப்படுத்தும் வளர் நிலைக்கு
3.பிறிதொரு மண்டலத்தில் இதைப் போன்று வளர வேண்டிய நிலை ஏற்பட வேண்டிய தொடருக்கே
4.இத்தொடர் நிலை கொண்ட சக்தி நிலை ரிஷித் தன்மை செயல்பட வேண்டும்.

படர்ந்து கொண்டேயுள்ள ஆவி அமிலம் திடம் கொண்டு அண்டசராசர அனைத்துக் கோடி சுழற்சியிலும் மாறிக் கொண்டே வழித் தொடர் கொள்ளும் ஒவ்வொன்றின் நிலை அனைத்திற்குமே வளர்நிலை தொடர் வளர்ச்சிக்கு “ரிஷித் தன்மை கொண்ட அலைத் தொடர் வளர்ப்பு தேவை…!”

அந்த வளர்ப்பைக் கொண்டு எச்சக்தி நிலையையும் உயர்வுபடுத்திச் செயலாக்கும் வளர் சக்தியின் சக்தியே ஆண் பெண் என்ற எண்ண சக்தியில் மனித வளர்ப்பு வார்ப்பில் உருவாக்கும் தொடர் அலையில் தான்

நாம் வாழும் இந்தப் பூமியே “சிவ சக்தி” என்ற இரண்டு ஆத்மாக்களின் தொடர்பில் உருவாகிப் பல கோடி ஆண்டுகளாகத் தன் உருவின் உருக்களை வளர்த்துக் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட உருவின் உருவைக் கொள்ளும்
1.உயர் ஆத்ம தொடர்பு – ஆண் பெண் ரிஷித் தன்மையின்
2.வழித் தொடர் ஆத்மாக்களை வளர் கொள்ளும் செயல் தன்மை
3.அரிதிலும் அரிதாகத்தான் இன்று வரை செயல்பட்டுள்ளது.

இதைப் படிப்போர் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் தொடர்பு ஆத்ம தியான சித்தைப் பெற்று… வாழ்க்கையுடன் ஒன்றிய கூட்டு ஐக்கிய தியான வளர்ச்சியால்…. இந்தப் பூமியின் சக்தியைப் போன்று.. நம் சூரியக் குடும்பத்தின் சுழல் கொண்டு மிதந்து ஓடும் மண்டல சுழற்சி ஒவ்வொன்றிலுமே… அதன் சக்தி நிலைக்கொப்ப “அதன் வளர் சக்தியின் வளர்ப்பிற்கு வழி செய்யலாம்…!”

நம் பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தில் வளர்ந்த மஏஏஅ மண்டலங்கள் விஷத் தன்மை கொண்டதாகத்தான் இன்றைய நிலையில் உள்ளது.

இதே சுழற்சி நீடித்து நம் பூமியும் இன்றுள்ள விஷத் தன்மையில் (செயற்கை என்ற காந்த மின் சக்தியைப் பிரித்தெடுத்ததன் விஷத்தால்) சுழன்றது என்றால்
1.இக்கலி மாற்றத்தில் வரப் போகும் கல்கியில்
2.தன் ஞானம் மிஞ்சாது விஞ்ஞானம் எஞ்சி நிற்கும்.

ஆகவே ஒவ்வொரு ஆத்மாவுமே தன்னுள் உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

 

Leave a Reply