குருநாதர் எனக்குச் செய்து கொடுத்த அற்புதங்களை நீங்களும் பெற வேண்டும்

Eswarapattar spiritual language

குருநாதர் எனக்குச் செய்து கொடுத்த அற்புதங்களை நீங்களும் பெற வேண்டும்

 

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கே நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் காணும்படிச் செய்கிறார்.

(1).காட்டு விலங்குகள் எப்படி வாழ்க்கை வாழ்கின்றது..? ஒவ்வொன்றும் மற்ற மிருகத்திடமிருந்து தப்பிக்க எத்தனை முயற்சிகளைச் செய்கிறது..?

(2).அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அகஸ்தியன் காட்டிலே எப்படி வாழ்ந்தான்..? அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளும் இங்கே இருக்கின்றது.

(3).அதே போல் அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்த மனிதர்களும் உண்டு. அவர்கள் விட்ட மூச்சலைகளும் இங்கே இருக்கின்றது.

1.இதை எல்லாம் நீ பருகுவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று
2.அந்த உணர்ச்சிகளைத் தூண்டித் தூண்டித் தூண்டித் தூண்டி அதை எடுக்கச் சொல்கிறார் குருநாதர்.
3.அவர் சொன்ன முறைப்படி நுகரும் பொழுது மகிழ்ச்சி வருகிறது.

இங்கே நான் உபதேசிக்கும் பொழுது இந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் உடலில் “நிச்சயமாக” நல்ல மாற்றங்கள் வருவதைப் பார்க்கலாம்.

1.குருநாதர் எனக்குச் செய்த அற்புதங்களை எல்லாம்
2.அந்த உணர்வுகள் சொல்லாக வெளி வருவதை நீங்கள் கேட்கும் பொழுது நுகரும் சக்தி கிடைக்கின்றது.
3.இந்த உண்மையின் உணர்வின் தன்மையை அறிய முடிகின்றது.

இப்படி அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் வாழ்க்கையில் பகைமையான உணர்வுகளை நுகர்ந்தாலும் அதை மாற்றி மகிழ்ந்து வாழ முடியும்.

ஈஸ்வரா..! என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் தீமைகளையோ துன்பங்களையோ பகைமைகளையோ குறைத்து அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் கூட்ட இது உதவும்.

அதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

Leave a Reply