“எச்சக்தியும் தனித்துச் செயல்பட முடியாது,,,!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ultimate divine power of human

“எச்சக்தியும் தனித்துச் செயல்பட முடியாது,,,!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இச்சரீர அணுத் தன்மை ஒவ்வொன்றுமே மலம் தான்.
2.இச்சரீர சதை அணு மலத்தின் வளர் அணு வளர்ப்பு வார்ப்பு எலும்புகளின் வலுத் தன்மைதான்.
3.ஒளி பெறும் ஆத்ம சக்தியை எண்ணத்தில் எடுக்கும் உயர்ந்த குணத் தன்மையால்
4.சரீரம் வளர்க்கும் ஒவ்வொரு அணுவையுமே
5.ஏற்கனவே எக்குணத்தின் வழித் தொடரில் பழக்கப்பட்டு வழி பெற்றிருந்தாலும்
6.எண்ணத்தால் எடுக்கும் ஞானத்தின் நற்குணத் தொடர்பைக் கொண்டு உடலில் அணு வளர்ந்து
7.அதனின் சமைப்பினால் எலும்புகள் வளர்ந்து
8.காந்த மின் அலை உணர்வுத் தன்மையினால் எலும்புத் தன்மை உறுதி கொள்ளும் வார்ப்பு நிலைக்கொப்ப ஆத்ம வலு கூடுகின்றது.

இச்சரீர பிம்ப அணுக்களின் வளர்ப்பு நிலைக்கொப்பத்தான் இவ் எலும்பின் வளர்ப்பு அமைகின்றது. காந்த மின் சக்தியின் ஈர்ப்பினால் எலும்புகள் உறுதியாகி ஆத்ம வலு கூடுகின்றது.

அப்படிப்பட்ட வலுத் தன்மை பெற்று ஒளி பெறும் உயர்ந்த சக்தியாக்கி விட்டால்… காந்த மின் சக்தியின் வார்ப்பான எலும்பின் வலுத் தொடரைக் கொண்டு
1.ஒளி கொண்ட ஆத்ம சக்தியை எதனிலும் ஊடுருவவிட்டு
2.உயர் தன்மையின் வார்ப்பாக ஆத்ம சக்தியை ஒளி பெறச் செய்யலாம்.

உயர் குண சக்தியால் தன்னைத்தான் நம்பி தன்னுள் வளரும் பல கோடி கோடி உயிரணுக்களையும்
1.உயர் நிலை அணுக்களாக வளர விட்டு
2.அவ்வுயர்வின் வலுவை எலும்புத் தன்மையில் வலுவாக்கி
3.ஆத்ம சக்தியை உயர்த்திக் கொண்டோமோனால்
4.தன் ஆத்மாவைத் தானே பார்க்கவும் பேசவும்
5.ஆத்மாவைக் கொண்டு எச்சக்தியும் பெறவும் உயர்வு ஞான சக்தியால் வழிப்படுத்தவும் முடியும்.

ஆத்ம வலு தான் மனிதனுக்கு அடுத்த தெய்வ சக்தி நிலை…!

ஆத்ம வலுக் கொண்ட தன்மையினால் இவ்வாத்மாவின் ஒளித் தன்மையைக் கொண்டு முன்கூட்டி அறியும் ஞானத்தையும்… உலகச் சுழற்சி தொடர்பு முறையினால்..
1.உலகத் தன்மையில் எங்கெங்கு மாற்று நிலைகள் ஏற்படும் நிலையை அறியவும்
2.ஏற்படக்கூடிய மாற்றத்தின் அபாயத்தை ஆத்ம வலுக் கொண்டு அறியும் தன்மையில் மாற்றியமைக்கவும் முடியும்.

பிற ஈர்ப்பலையில் சிக்கா ஒளி வட்ட ஞானத்தால் ஆத்ம வலுவின் சித்துத் தன்மையில் அறியும் அஷ்டமாசித்து நிலை அனைத்தும் ஆத்ம வலுவில் பெற்றாலும்
1.எவ்வாத்ம வலுவை எவ்வழித் தொடரில் பெறுகின்றோமோ
2.அவ்வலுவுக்குத் தகுந்த உணவு நிலையைப் படைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

உடலுக்கு உணவை உண்ணுகின்றோம். உணர்வுக்குத் தக்க உறக்கம் கொள்கின்றோம். அதைப் போன்றே ஆத்ம வளர்ப்பிற்கு வளர் தொடர் சக்தி நிலைக்கு உணவாக
1.மனித ஆத்ம பிம்பத்தால் பெற்ற ஆத்மாவின் வலுவிற்கு உணவு
2.எவ்வழித் தொடரில் உயர்வு கொண்ட ஆத்ம நிலை பெற்றோமோ
3.அத்தொடர்பு கொண்ட சரீர பிம்ப ஆத்மாக்களின் பால் இருந்து வெளிப்படும்
4.எண்ண உணர்வின் சப்த அலையின் தொடர்பு நிலை சுழற்சி நிலை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தனித்து ஆத்ம சக்தி பெற முடியாது…! ஆணுக்குப் பெண் சக்தியும் பெண்ணிற்கு ஆணின் சக்தியும் கூட்டுச் சக்தியின் போதனைத் தொடர் அலை சக்தியும் அவசியம்.

எண்ணத்தின் உணர்வைக் கொண்டு… அன்பு பாசம் வீரம் சாந்தம் கொண்ட உயர் குணத்தின் வழித் தொடர் வாழ்க்கையில் கலந்துறவாடும்… ஆத்மாக்களின் நம் பால் செலுத்தப்படும் அலை உணர்வின் ஈர்ப்பினால்… நம் ஆத்மாவிற்கு நாம் செலுத்தும் உணவு… நாம் எத்தொடரில் ஞானம் பெற்றோமோ அத்தொடர்பின் உணவாக நமக்குக் கிட்டும்.

Leave a Reply