செல்வத்தைச் சேர்த்துப் புகழைச் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய மனிதனுக்கு உள்ளது

CRICKET

செல்வத்தைச் சேர்த்துப் புகழைச் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய மனிதனுக்கு உள்ளது

பித்த சுரப்பிகள் ஒரு சிலருக்கு அதிகமாக உமிழ்த்தப்படும் பொழுது மாமிசங்களை அதிகமாக உட்கொள்வார்கள். அதை உணர்வாக்கப்படும் பொழுது அவர்களுடைய தசைகள் வலுக் கொண்டதாக மாறுகின்றது.

அதே சமயத்தில் அதனுடைய வளர்ச்சியில் பித்த சுரப்பிகளின் சுரப்பும் அதிகமாகின்றது. அதனால் விஷத் தன்மை கொண்ட அரக்கத்தனமும் வருகின்றது… சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.

புலியோ யானையோ மற்ற மிருகங்கள் முரட்டுத்தனமாகத் தாக்குவது போன்று அசுர குணம் கொண்ட வளர்ச்சி அடைகின்றது. இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

விஞ்ஞான அறிவு வளர்ந்த இந்தக் காலத்திலேயும் தன் நாட்டிற்குப் புகழ் தேட அசுர உணர்வு கொண்ட மனிதனை உருவாக்குகின்றார்கள். அவன் புகழ் பெறுகின்றான்… கோடிக்கணக்கில் பணம் பெறுகின்றான்…! ஆகையினால் அந்த ஆசையில் அங்கே செல்கின்றார்கள்.

1.தன் நாட்டிற்குப் புகழ் பெறவேண்டும் என்று அசுரத்தனமான செயல்களைச் செய்து சிந்திக்கும் செயல் இழந்து
2.கிரிக்கெட் போன்ற விளையாட்டுத் தன்மைகளும் கொண்டு வருகின்றார்கள்.

அசுரத்தனமான நிலைகளில் தாக்கப்பட்டு அதிலே பொருளை ஈட்டிப் புகழ் பெறும் நிலைகளை உருவாக்குகின்றார்கள்.
1.அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை உற்றுப் பார்த்த பின்
2.அந்த ஆசையை நமக்குள் ஏற்று நம் வாழ்க்கையையும் கெடுத்துவிடுகின்றோம்.

இந்த விளையாட்டை விளையாண்டால் அதன் உணர்வுகள் முன்னணியில் வந்தால் எனக்குச் செல்வம் வரும்… செருக்கு வரும்…! என்று தான் வருகின்றோம்.
1.இதைப் போன்று தன் வாழ்க்கையில் புகழ் தேடி பொருள் தேடும் நிலைகளே
2.இன்றைய விஞ்ஞான அறிவால் உருவாகின்றது.

நம் நாட்டில் மட்டுமல்ல… இந்த உலகம் முழுவதும் நடக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இந்த உலகம் குறுகிக் கொண்டு வருகின்றது. இந்த மனித வாழ்க்கையே நமக்குச் சதமானது அல்ல. சதமாக்கப்பட வேண்டியது எது என்றால் இந்த உடலிலிருந்தே நாம் உயர்ந்த சக்திகளைப் பெறவேண்டும்.

உயர்ந்த சக்திகளை நாம் பெறவேண்டும் என்றால்… “அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்…!” என்ற எண்ணத்தை உயர்த்த வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
4.எங்கள் இரத்தநாளங்கள் முழுவதும் அந்தச் சக்திகள் பெருக வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே சமயத்தில் நம் அருகிலே இருப்போருக்கும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்றும் அவர்களும் உயர வேண்டும் என்று எண்ணினால்
1.நமக்குள்ளும் உயரும் சக்தி வருகின்றது.
2.எதிரியல்லாத நிலைகள் நமக்குள் வளர்க்கப்படுகின்றது,

இப்படி நாம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பாதுகாக்கும் நிலைகள் வருகின்றது. நமக்குள் விளையும் உயர்ந்த உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாற்ற உதவுகின்றது.

Leave a Reply