அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் எப்படிச் செல்வது…?

agsstyar and saptarishi manddalam

அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் எப்படிச் செல்வது…? 

 

நம் உயிர் குருவாக நின்று… நாம் எண்ணியதை எல்லாம் ஈசனாக இருந்து… அந்த உணர்வுகளை எல்லாம் நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது.

அதே சமயத்தில் அத்தகைய கருவின் தன்மை பெறச் செய்வதற்கு உயிரே குருவாக இருக்கின்றது.

அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இப்பொழுது ஏங்கித் தியானிப்போம். நமது குரு ஈஸ்வரபட்டரின் அருள் சக்தி பெற்று வழியில் இதை நாம் எண்ணி நுகர வேண்டும்.

அப்படி நுகரப்படும் பொழுது…
1.குரு வழியில் அகஸ்தியன் அருளை எளிதில் பெறலாம்.
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான
3.அந்த உணர்வின் வழி நடந்து சென்ற ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சென்ற
4.சப்தரிஷி மண்டலமாக அடையும் நிலையை நீங்கள் பெறலாம்.

அகஸ்தியனைப் பற்றி உபதேசிக்கும் பொழுதும்… பேசும் பொழுதும்…
1.அவன் பெற்ற சக்திகள் உங்கள் அருகிலேயே வந்தது போல் இருக்கும்.
2.அவன் நுகர்ந்த அந்த மகா பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும்.
3.அந்த மணங்கள் உங்கள் உடலுக்குள் புதுமையான நிலைகளில் ஊர்ந்து செல்லும்.

உங்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் வல்லமை பெற்ற சக்தியாக… நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வாக… நீங்கள் நுகரும் தன்மை பெறுகின்றீர்கள். அந்த அணுவின் தன்மையை உடலுக்குள் கருவாக உருப்பெறச் செய்யும் சக்தியும் பெறுகின்றீர்கள்.

கருவுறும் அந்த உணர்வின் கருவிற்கு ஞானிகளின் உணர்வைச் செருகேற்றி… ஞானிகளைப் பற்றி யாம் உபதேசித்த பல கலவைகளையும் சேர்க்கும் பொழுது அதுவும் அணுக்கருக்களாக உங்கள் இரத்தநாளங்களில் கலந்து பரவும்.

இப்படிப்பட்ட அரும் பெரும் சக்திகளை உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து இயக்கிடும் சக்தியாக வருகின்றது.

அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. நினைக்கும் பொழுதெல்லாம் அந்தச் சக்திகளை நீங்கள் பெறலாம்.

அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்பொழுது யாம் (ஞானகுரு) பதிவு செய்த எண்ணத்தால் உருவாக்கப்பட்டது அனைத்தும் உங்களுக்குள் நின்று அது வலுவாக இயக்கும்.

1.அந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது
2.அகஸ்தியனைப் பற்றிய எண்ணங்கள் கண்ணிற்கே நினைவு வருகின்றது.

அதாவது… யாம் சொல்லும் சொல்லின் நிலைகளை உங்கள் கண் பதிவாக்கி அந்த உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது கண்ணால் தான் பதிவாகின்றது.

1.அது தான் ஹரி…! – அறியக் கூடிய அறிவு
2.சூரியனால் இயக்கப்படுகின்றோம் – ஹரி கிருஷ்ணா
3.கிருஷ்.. என்றால் பதிவாக்கக்கூடிய நிலை.

அப்படிப் பதிவான பின் அந்த உணர்வுகள் எண்ணமாகும் பொழுது “ஹரிராமா” அந்த எண்ணத்தை எண்ணி மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வந்தால் “ஹரிகிருஷ்ணா”

1.கண்ணின் நினைவு கொண்டு எண்ணத்தால் உள்ளுக்குள் பதிவாகி
2.மீண்டும் எண்ணத்தில் வரப்படும் பொழுது அந்தப் பதிவின் நிலையே நுகர்ந்து
3.உடலுக்குள் அணுவின் கருவாக மாற்றும் திறன் வருகின்றது.

அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா எனறு ஏங்குங்கள்

உபதேசிக்கும் உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கும் எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கபப்டும் பொழுது கண் வழி அதை நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் அணுவாக மாறி இரத்தநாளங்களிலே கருத்தன்மை அடையும் கருக்களாக அது உருவாக்கப்படுகின்றது.

அந்த அகஸ்தியமாமகரிஷ்யின் அருள் சக்திகளை ஏங்கிப் பெறும் நோக்கத்துடன் தியானிக்க வேண்டும்.
1.தியானம் என்பது வெறும் சொல்லாகச் சொல்லி அப்படியே விட்டிடாது
2.அவருடைய அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.

அந்த அருள் மகரிஷி நஞ்சினை வென்றிடும் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் அணுவின் தன்மையாக விளைந்து
1.அவனின்று வெளிப்பட்ட மூச்சலைகள்…
2.உங்கள் உடலுக்குள் ஊடுருவும் பொழுது
3.உயர்ந்த சக்திகளின் உணர்ச்சிகளை ஊட்டி
4.அதை நுகர்ந்தறியும் அறிவின் ஆற்றலாகப் பெறுவீர்கள்.

அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதையே திரும்பத் திரும்ப ஏங்கி உங்கள் உடலுக்குள் இரத்தநாளங்களில் கருவாக உருவாக்குங்கள்.

உங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.
1.அவன் உணர்வுகள் உங்களுக்குள் படும் பொழுது – அந்த உணர்வின் அலைகள் உங்கள் வாழ்க்கையில்
2.நுகரும் சக்தியும்
3.அறியும் சக்தியும்
4.வளர்க்கும் சக்தியும்
5.வளர்ந்திடும் சக்தியும் கிடைக்கும்.

அந்த அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி உங்கள் அருகிலே சுழன்று… நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்திற்குள் சென்று.. உங்கள் உடலுக்குள் செல்லும் நிலையை இப்பொழுது இந்தச் சந்தர்ப்பம் உருவாக்குகிறது.

அகஸ்தியன் நுகர்ந்த அந்த மணத்தின் தன்மையைக் கவர்ந்து அந்த உணர்வின் ஆக்கச் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அகஸ்தியன் நுகர்ந்த மணத்தை இப்பொழுது நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் கணவனும் மனைவியும் வானுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கி துருவ மகரிஷியாகி அவர்கள் உருவாக்கிய சக்தி இங்கே பரவி இருக்கிறது.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.. அது எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் உள்ள அணுக்களில் மோதும் பொழுது
1.புருவ மத்தியில் அந்த ஒளிக்கதிர்கள் தெரியும்
2.உங்கள் உடலுக்குள் அந்த உணர்வின் ஒளி அலைகள் பாயும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் நினைவனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அதனுடன் தொடர் கொண்டு… அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி அதை இழுத்துக் கவர்ந்து கவர்ந்து சுவாசியுங்கள்… உடலுக்குள் செலுத்துங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்
2.அந்த உணர்வின் அலைகள் உங்களை அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே சேர்க்கும்.

Leave a Reply