பாம்பின் காட்சி ஏன் வருகிறது..?

Bluish violet Poari rays

பாம்பின் காட்சி ஏன் வருகிறது..? 

ஒரு அன்பருக்குத் தியானத்தில் கிடைத்த காட்சி:
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நான் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது பல பாம்புகள் எனக்குள் செல்வது போல் தெரிகின்றது.

பாம்புகள் உள்ளே சென்று அனைத்தும் தன் வாயிலிருந்து நாகரத்தினங்களை உமிழ்கின்றன. ஒளியாகத் தெரிகிறது. இதற்கு ஞானகுருவின் விளக்கம் தேவை.

ஞானகுருவின் விளக்கம்:
அவருக்குக் கிடைத்த காட்சிப் பிரகாரம் தன் உடலுக்குள் பலவிதமான பாம்புகள் செல்கிறது என்றால்… உடலுக்குள் பல விதமான விஷத் தன்மைகள் ஊடுருவுகின்றது. அப்படி ஊடுருவும் பொழுது என்ன நடக்கிறது..?

நாகப் பாம்பின் உடலுக்குள் பல விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத் தன்மைகள் நமக்குள் சென்றாலும் உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலால் அதை எல்லாம் எப்படி ஒளியாக மாற்றுகின்றது என்ற நிலைதான் அவருக்குக் காட்சியாகக் கிடைத்தது.
1.ஏனென்றால் நாம் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும்
2.விஷம் இல்லாத உணர்வின் இயக்கமே கிடையாது.

ஆகவே தான் நமக்குள் பல விஷத் தன்மைகள் (எதிர் நிலையான உணர்வுகள்) சென்றாலும் நமக்குள் அந்தப் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து இது அனைத்தும் ஒருக்கிணைந்து ஒளியின் சக்தியாக மாற்றிடல் வேண்டும்.

ஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது. கட்டுவீரியன் உடலில் விளைந்தது என்றால் அது வேறு விதமாக இருக்கும்.

நாகம் பல உயிரினங்களின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அந்த உடல்களின் விஷத்தைத் தனக்குள் சேமித்து அதன் விஷங்கள் கூடிக் கூடி நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ அதே போல் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்றும் காட்சிகளைத் தான் பாம்பினமாக அவர் காண முடிந்தது.
1.ஏனென்றால் உருவ அமைப்பில் பாம்பு என்றாலும்
2.அதன் உணர்வின் சக்தி விஷம்…! என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.

சாஸ்திரங்களில் ஆமையை வைத்துக் கூர்மை அவதாரத்தைக் காட்டுகின்றனர். பன்றியை வைத்து வராக அவதாரத்தைக் காட்டுகின்றனர்.

ஆகவே நமது வாழ்க்கையில் எந்தெந்த உணர்வுகளை நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோமோ அதனின் உணர்வுகள் வளர்ச்சி அடைந்து அடைந்து அதற்குத் தக்க பரிணாம வளர்ச்சி அடைந்தோம்.

கூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றது பன்றி என்றும்… ஆக தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும்… சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்த நறுமணங்களை நுகர்கின்றது…! என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான்…
1.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
2.அந்தத் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை.

இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத் தன்மையான நிலையையும் நாம் மாற்றியமைத்து உயிருடன் ஒன்றி ஒளியான நிலைகள் பெற வேண்டும்…! என்பது தான் சாஸ்திரங்களின் மூலக் கருத்து.

அந்தக் காட்சியின் தன்மையைத்தான் அவர் பார்க்க நேர்ந்தது.

ஏனென்றால் இதனின் விளக்க உரைகளை இப்பொழுது யாம் (ஞானகுரு) கொடுத்தபின் தியானத்தில் உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தால்
1.மீண்டும் எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின் உண்மையின் உணர்வு எது…? என்று நீங்கள் அறியும் உணர்வைச் செலுத்தினால்
3.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து
4.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் எது..? என்பதை அறிந்திட முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுது அதிலிருக்கும் உண்மைகளை உங்களால் உணர முடியும். அதன் மூலம் ஒரு தெளிவான உணர்வை உங்களுக்குள் எப்படி உருவாக்குகிறது..? என்ற நிலையையும் பார்க்கலாம்.

ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகள் உதாரணமாக ஒரு வெறுப்படைந்ததாகவோ அல்லது ஒரு புலமை பெற்ற மனிதனின் உணர்வாகவோ இருந்தால்
1.அவரின் உணர்வுகள் மடிந்த பின் அந்த உணர்வுகளை நாம் பெற்றால்
2.அந்த மனித உடலில் உருவான கற்பனை உணர்வுகள் இங்கே வரும்.

ஆனால் அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளோ இருளை அகற்றி ஒளியின் தன்மையாக மாற்றிடும் உணர்வுகள் கொண்டது. அது நமக்குள் வரும் பொழுது இருளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

1.சூரியன் எப்படி ஒளிக் கதிராக மாற்றுகின்றதோ…
2.நாகம் எப்படி அந்த நாகரத்தினமாக மாற்றுகின்றதோ…
3.அந்தப் பாம்பு இறந்தாலும் அதிலே விளைந்த ஒளிகள் எப்படிக் கூடுகின்றதோ…
4.இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் என்றும் பிரகாச ஒளியாக நின்று
5.தீமைகள் நமக்குள் புகாது… இருள் சூழாது… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக அது நமக்குள் உருப்பெறும் என்பதை நீங்கள் உணர முடியும்.

எல்லோரும் தெளிவாக உணரக்கூடிய அருளை நீங்கள் காட்சியாக வெளிப்படுத்தினீர்கள்… இது எல்லோருக்கும் நன்மை பயக்கும்…! என்று கருதுகின்றேன். அனைவரும் அந்த அருள் ஞானத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்… எமது அருளாசிகள்..!

Leave a Reply