“அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்…”

meditational food

“அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்…”

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.

உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே உயிரை ஈசனாக எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் மனிதனான பின்…
1.இந்த இயற்கையின் உண்மைகளை வானஇயல் புவியியல் உயிரியல் தத்துவப்படி அறிந்தான்.
2.நஞ்சினை வென்றான்.. இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான்…!
3.அவனில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் படர்ந்துள்ளது.
4.அந்த அகஸ்தியன் உணர்வைத் தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

அந்த அகஸ்தியன் நஞ்கினை வென்று இருளை அகற்றி மெய்ப் பொருள் கண்ட அந்த உணர்வுகளை நாம் பெற இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டிக் கண்ணை மூடி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் வேண்டி ஏங்கிக் கேளுங்கள். இப்பொழுது அந்த உணர்வின் சத்தை நீங்கள் நுகர்கின்றீர்கள்.

அப்படி நுகரும் உணர்வுகளை…
1.அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் உணர்வை உங்கள் உயிர்
2.உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.
4.“ஓ…” என்று ஜீவ அணுவாக உருவாகும் கருத் தன்மை அடையச் செய்யும்,

நம் உடலிலே அந்தக் கருக்கள் பெருகி அணுவாக ஆன பின் அந்த அகஸ்தியன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்ச்சியை உந்தும்.

அப்படி உந்தி அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகளையும்… மற்ற நஞ்சுகளையும் நீக்கிடும் ஆற்றலையும்… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியைப் பெறும் தகுதியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி உடல் முழுவதும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருளைப் பரவச் செய்யுங்கள்.
1.அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள் உங்கள் இரத்தங்களிலே கலந்து உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவுகிறது
2.அதை நீங்களும் உணரலாம்… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அது வரும்.

திருமணமான பின் அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்றுத் துருவ மகரிஷியாக ஆனார்கள். அந்தத் துருவ மகரிஷியின் உடலிலிருந்து வெளிப்படுத்திய அந்த அரும்பெரும் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

1.இவை அனைத்தும் புருவ மத்தியிலேயே எண்ணி ஏங்குங்கள்.
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி இப்பொழுது உங்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும்.
3.உடல் முழுவதும் புதுவிதமான உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும்.

துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகியிருப்பதனால் நீங்கள் சுவாசிக்கும் பொழுது…
1.பேரின்பம் பெறும் அருள் மணங்கள் கலக்கப்பட்டு
2.பெரும் மகிழ்ச்சியின் உணர்வின் தன்மையாக உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் வரும்.
3.பற்பலவிதமான நறுமணங்கள் வரும்.
4.நஞ்சினை வென்றிடும் அருள் மணங்கள் கிடைக்கும்.
5.அருளானந்தம் பெறும் அருள் சக்தியும் உங்கள் சுவாசத்தில் கிடைக்கும்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரிடம் வேண்டுங்கள்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்குங்கள்.

இப்பொழுது…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் புருவ மத்தியில் மோதி
2.பேரொளி என்ற நிலைகளக உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.உங்கள் உடலில் உள்ள ஆன்மாவும் இதைப் போல இருளை வென்றிடும் அருள் ஒளியாகப் பெருகும்.

உங்கள் உயிருடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் மோதும் பொழுது.. அருள் ஒளி உங்கள் புருவ மத்தியில் தோன்றும். நீங்கள் இதற்கு முன் சுவாசித்த தீமை என்ற நிலைகளைப் புக விடாது அதை வெளிக் கடத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த பேரருளைப் பெறும் அருள் உலகமாக…
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
2.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளை உங்கள் புருவ மத்தியில் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.

1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் பொழுது
2.மின்னல்கள் எப்படி மின்கற்றைகளாக வருகின்றதோ
3.இதைப் போல் உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி
3.இருளை அகற்றி உங்கள் உடலுக்குள் ஒளியாக உருவாகும்.

உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுத்து இருளை அகற்றிடும் அருள் ஒளி என்ற உணர்வுகளாக உங்கள் ஆன்மாவில் பெருக்கும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கணவன் தன் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதே போல அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி தன் கணவன் உடல் முழுவதும் படர்ந்து கணவனின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் எண்ணி இரு மனமும் ஒன்றி அந்தப் பேரருள் உணர்வினை உருவாக்குங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து தாய் தந்தையர் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவு அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து
2.அந்தச் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.சப்தரிஷி மண்டல அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள்…
1.உங்கள் நினைவுக்கு எத்தனை பேர் வருகின்றனரோ…
2.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
3.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து
4.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ளுங்கள்.

உங்கள் குலதெய்வங்களின் உணர்வுகள் உங்கள் உடலிலே இருப்பதனால்… நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றதனால்… அதனின் வலுவின் துணை கொண்டு உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.

இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தாலும்… இன்னொரு உடலுக்குள் அவர்கள் ஆன்மாக்கள் சென்றிருந்தாலும்… இந்த உணர்வுகளை நாம் பாய்ச்சப் பாய்ச்ச… அந்த உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் ஊடுருவி.. அந்த உடல் மடிந்த பின் உடலை விட்டு வெளியில் வரும் ஆன்மாவை.. தினமும் செய்யும் துருவ தியானத்தின் மூலம் விண் செலுத்தி விடலாம்… அவர்கள் பிறவி இல்லா நிலை அடைவார்கள்…!

நாம் இந்த மாதிரிச் செய்தோம் என்றால் மூதாதைகள் ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் சாப அலைகளோ மற்றதுகள் விடுத்திருந்தாலும்
1.அந்த மரபு அணுக்கள் நம்மை அறியாது நம் உடலுக்குள் இருந்தாலும்
2.அந்த மரபு அணுக்களை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் பெருக்க முடியும்
3.பரம்பரை நோயை அகற்ற முடியும்.

இருளை அகற்றி விட்டுப் பேரருள் என்ற… அருள் ஒளி என்றுமே வளர்ந்து கொண்டே இருக்கும் அந்த உணர்வை அவர்களையும் பெறச் செய்யலாம்.

இவ்வாறு செய்து வந்தால்…
1.உங்கள் குடும்பத்தில் சமீப காலத்தில் உடலை விட்டு யார் பிரிந்திருந்தாலும்…
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.

Leave a Reply