“குழந்தைப் பாக்கியமே இல்லை…” என்று வந்த தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்த நிகழ்ச்சி

thirugnana-sambandhar-thevaaram.jpg

“குழந்தைப் பாக்கியமே இல்லை…” என்று வந்த ஒரு தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்த நிகழ்ச்சி

மதுரை வெங்கட்ராமன் வீட்டிற்கு நான் (ஞானகுரு) வரப்போகும் பொழுது இது நடந்த நிகழ்ச்சி. அவர்கள் வீட்டிற்கு அருகிலே அவர்கள் சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள்.

அதிலே ஒரு கணவன் மனைவிக்குக் குழந்தை இல்லை என்று எம்மைச் சந்தித்து ஆசீர்வாதம் செய்த பின் அவர்களுக்குக் குழந்தை கிடைத்தது.

அந்தக் குழந்தைக்குப் பேர் வைக்க வேண்டும் என்ற நிலையில் மீண்டும் நான் வெங்கட்ராமன் வீட்டிற்கு வந்த சமயம் என்னைச் சந்திக்க வந்தார்கள்.

அந்த நேரத்தில் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அங்கே வருகின்றனர். அவர்களுக்கும் குழந்தை இல்லை. அது மட்டுமல்ல..! “குழந்தை பாக்கியமே இல்லை..” என்ற ஏக்கம். விபரம் கேட்கும் பொழுது
1.குழந்தை இல்லை என்று ஏற்கனவே நாங்கள் சாமியைச் சந்தித்தோம்
2.அவர் ஆசியால் எங்களுக்குக் குழந்தை கிடைத்தது.
சாமியிடம் சென்று இன்றைக்குத்தான் குழந்தைக்குப் பேர் வைக்கப் போகிறோம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

அதைக் கேட்டதும் அல்லி நகரத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஆசை.

சாமியிடம் போனால் உங்களுக்கும் குழந்தை கிடைக்கும் என்றார்கள். அப்பொழுது இவர்கள் தன் குழந்தைக்குப் பேர் வைக்கும் பொழுது அல்லி நகரத்தைச் சேர்ந்தவர்களும் கூட வருகின்றார்கள் எம்மைச் சந்திக்க…!

1.இந்த உணர்வு வேகம் அலைகள் எப்படி வருகின்றது…! என்று சொல்கிறேன்.
2.அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.அதைக் கேட்டதும்… இந்தத் தம்பதியருக்குத் தங்களுக்கும் குழந்தை வேண்டும் என்ற அந்த உணர்ச்சிகள் வருகின்றது.

அந்த உணர்வைச் சுவாசித்ததும் என்ன நடக்கிறது…?
1.குழந்தை இல்லை என்று இவர்களுக்குக் கிடைத்தது.
2.குழந்தை கிடைத்த அந்த உணர்வை வாக்காலே சொல்லப்படும் பொழுது
3.அந்த ஒலி அலைகள் பட்டவுடன் உற்றுப் பார்த்து அந்த உணர்வுகளைச் சுவாசிக்கின்றனர்
4.அந்தக் கரு உருவாகும் பருவம் அப்பொழுது உருப் பெறுகின்றது.

இது நடந்த நிகழ்ச்சி…!

சாமி எங்களுக்கு எல்லாம் இருக்கிறது… நிறைய மருத்துவர்களையும் பார்த்து விட்டோம்.
1.எங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டும்…! என்று
2.அவர்கள் சொல்லிக் கொடுத்த மாதிரியே “வேண்டும்” என்று எம்மிடம் கேட்கிறார்கள்.
3.”இல்லை…!” என்ற அந்தக் குறையான சொல்லே அவர்கள் வாயிலிருந்து வரவில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் மனைவி இருவரும் பெறுவீர்கள்…! என்று ஆசீர்வாதம் கொடுத்தேன். பேர் வைக்கக் குழந்தையை எடுத்து வாருங்கள்..! என்று சொல்லி அனுப்பினேன்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் எண்ண வேண்டும்.
3.புத்திர பாக்கியம் பெறும் அணுக்கள் எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் ஈஸ்வரா என்று
4.கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நெற்றியைப் பார்த்து எண்ணுங்கள்..! என்று சொன்னேன்.

ஒரு ஒன்றரை வருடம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் வந்தேன். அந்தக் கணவன் மனைவிக்குக் குழந்தைப் பாக்கியமே இல்லை என்று பரிசோதித்த டாக்டரும் அங்கே வந்திருந்தார்.

அந்த டாக்டர் என்னிடம் சில விபரங்கள் கேட்க வேண்டும் என்று வந்தார்,
1.குழந்தை கிடைக்கும்..! என்று நீங்கள் ஆசீர்வாதம் கொடுத்தவர்களுக்குக் குழந்தை கிடைத்திருக்கின்றது.
2.இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..? என்று எனக்குத் தெரிய வேண்டும்.
3.மருத்துவத் துறையில் நாங்கள் நிறையப் படித்திருக்கின்றோம்.
4.இவர்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்திருக்கின்றார்கள்.
5.குழந்தைக்கு வாய்ப்பு இல்லாத ஒரு சூழ்நிலையில் இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..?
6.வழக்கமாகக் கர்ப்பப் பையில் தான் குழந்தை உருவாகியிருக்கும்.
7.ஆனால் இவர்களுக்குக் கர்ப்பப் பைக்கு வெளியே குழந்தை எப்படி உருவானது,..?
8.கர்ப்பப் பை சிறுத்திருக்கின்றது… ஒன்றும் செய்ய முடியாது… என்று நாங்கள் சொன்னோம்.
9.ஆனால் நீங்கள் மருந்தும் கொடுக்கவில்லை. ஒன்றும் செய்யவில்லை…! எப்படிக் குழந்தை உருவானது…?

குழந்தையைப் பேர் வைக்க எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று தான் சொன்னீர்கள்…! என்னால் இது நம்ப முடியவில்லை. யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்…! நான் நேரடியாகப் பார்த்த அனுபவம்.

இவர்களுக்குப் பிரசவமும் நானே தான் பார்த்தேன். ஆபரேஷன் செய்து தான் குழந்தையை வெளியில் எடுத்தோம். ஆனால் குழந்தை கர்ப்பப்பைக்கு வெளியில் இருக்கின்றது. இது எப்படிச் சாத்தியமாகும்…? என்று அந்த டாக்டர் என்னிடம் (ஞானகுரு) கேள்வியைக் கேட்டார்.

அப்பொழுது நான் சொன்னேன்…! அவர்கள் எண்ணி ஏங்கி எடுத்துக் கொண்ட உணர்வின் இந்த அணு செல்கள் வெளியில் வரப்படும் பொழுது
1.கர்ப்பப்பைக்கு அருகிலேயே அதனுடைய ஜீவ அணுக்கள் துடிப்புக்குக் கொண்டு வரும்.
2.அப்பொழுது புதுக் கருப்பை அதிலிருந்து உருவாகிறது. அதற்குள் குழந்தை உருவானது.

ஆனால் பிறக்கும் பாதை வழியாக வர முடியாது ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும். ஒரே குழந்தைதான், அதற்குப் பிறகு வராது என்று முழு விபரத்தையும் டாக்டரிடம் சொன்னேன்.

இது அல்லி நகரத்தில் நடந்த நிகழ்ச்சி இது. ஏனென்றால் இந்தத் தியானம் என்றால் என்ன…? என்ற நிலையில் அந்த மகரிஷிகளைப் பற்றிய எண்ணங்களை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

Leave a Reply