நன்மை பயக்கும் சக்தியை உங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றோம்…?

power of meditation

நன்மை பயக்கும் சக்தியை உங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றோம்…?

 

ஒருவன் தீமையை செய்கிறான் என்றால் அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில் தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார், நமது குருநாதர்.

1.தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும்,
2.மனிதன் அவைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன்.

அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்து விட்டால் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்.

மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கித் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி, அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றி தம்முள் நல்லுணர்வினை வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.

அவர்களைப் போன்று நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது
1.ஒருவன், நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும்
2.அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.
3.மகரிஷிகளின் அருளுணர்வுகளை நமது உடலில் கலக்கப்படும் பொழுது
4.நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும் அவைகளை
5.நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச் சக்தியாக மாறுகின்றது.
1.எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ
2.அந்த விஷம் ஊடுருவி,
3.நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச் செலுத்தும் பொழுது மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை எடுத்துச் சென்று உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி வேதனையை உருவாக்கும் அணுக்களை, வளர விடாமல் தடுக்கச் செய்கின்றது “மருந்துடன் கலந்துள்ள விஷம்…!”

இதைப் போன்று
1.நாம் எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ
2.அப்பொழுது மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தி நாம் பெற வேண்டும் எனும் உணர்வினை இணைத்து
3.நமது உடலுக்குள் செலுத்தி விட்டால்
4.அருள் ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு,
5.நமக்குள் வலு கொண்ட நிலையாக மாறுகின்றது.

Leave a Reply