இன்று உள்ளது நாளை இல்லை…! ஆனால் என்றும் நிலையானது நம் உயிர்…!

இன்று உள்ளது நாளை இல்லை…! ஆனால் என்றும் நிலையானது நம் உயிர்…!

 

இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் அழியப் போகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட அணுக்கதிர் இயக்கங்கள் எந்தப் பக்கம் குண்டுகளைப் போடுகின்றார்களோ அங்கே சூரியனின் ஒளிக்கதிர்கள் விழாது, உறைபனியாகிப் பூமி திரும்பப் போகின்றது.

அது உறைபனியாகி விட்டால் சூரியனின் இயக்கம் இல்லை என்றால் பூமி நகர்ந்து செல்லும் பொழுது குளிர்ச்சி அதிகமாகி இந்த உணர்வுகள் உறையும் பருவம் வருகின்றது.

அதிலிருந்து தப்ப முடியுமா என்றால் முடியாது…?

1.இன்று உள்ளது நாளை இல்லை…!
2.ஆனால் என்றும் நிலையானது உயிர்.
3.தீயிலே குதித்தாலும் உயிர் வேகாது.
4.உடலில் உள்ள உணர்வின் தன்மை உடலில் உள்ள அணுக்களை உயிரைப் போல உருவாக்கிவிட்டால்
5.என்றும் அழியாத நிலை…! இது தான் வேகாநிலை.

மனிதனான பின் அன்பால் பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அறிகின்றோம். வெளியில் நடக்கும் பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும் உடலுக்குள் வலிமையாகின்றது.
1.நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும் இதற்கும் போர் நடக்கின்றது.
2.இதைத்தான் சாஸ்திரங்களில் பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது…! என்று காட்டினார்கள்.

சீதாராமனோ விஷ்ணு தனுசை எடுத்துப் பரசுராமனை வீழ்த்துகின்றான். பரசுராமனோ சிவ தனுசை எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டி இருக்கின்றார்கள்.

வராகனுக்குப்பின் (பன்றி), பரசுராமன், மனிதன் என்ற நிலைகள் ஆனபிறகு எல்லோரும் பேரன்போடு வாழவேண்டும் என்ற ஆசை வருகின்றது.
1.ஆனால் நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத் தெரியவில்லை.
2.நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ அதன் வழிதான் செல்லுகின்றோம்.

ஒரு குழம்பு வைக்கவேண்டும் என்றால் மிளகாய் உப்பு புளி அனைத்தையும் சமமாகச் சேர்த்துச் சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம்.

இதைப்போல வேதனை என்ற உணர்வை நமக்குள் எடுத்துத் தெரிந்து கொண்டாலும், அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குள் வேண்டும். அந்த சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.
1.இதன் மூலம், உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
2.இந்த உயிரின் இயக்கத்தையும் மனிதனான நிலையும் உங்களால் அறிய முடிகின்றது.

1.கோபிப்பது நாமல்ல;
2.வேதனைப்படுவது நாமல்ல;
3.வெறுப்படைவதும நாமல்ல;
4.தற்கொலை செய்யச் சொல்வதும் நாமல்ல,
5.தவறு செய்யச் சொல்வதும் நாமல்ல,
6.நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால் அந்தப் பொருளின் மணம் தான் நுகர்ந்தவரை இயக்குகின்றது. இதைப் போல “நம்முடைய எண்ணம்தான் நம்மை இயக்குகின்றது…”

நமது எண்ணம் கொண்டு வேதனைப்படுவோரை எண்ணினால் கோபப்படுவோரை எண்ணினால் அது “வாலி…”. நமது நல்ல குணங்களை அது அடக்கி நமக்குள் வலிமையானதாக மாறி நம்மை, அதன் வழிகளில் இயக்குகின்றது.

இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால் நமது ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை வென்று ஒளியின் உடல் பெற்ற, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இது வலுவானபின்…
1.நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும்,
3.தெய்வீக குணத்தைப் பெறவேண்டும்
4.தெய்வீக அன்பைப் பெறவேண்டும்
5.தெய்வீக அருளைப் பெறவேண்டும்
6.தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெறவேண்டும்,
7.மலரைப் போல மணம் பெறவெண்டும்,
8.மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

Leave a Reply