மகரிஷிகளின் மெய் ஞான வித்து
ஒரு உணர்வுக்கு ஒரு வித்தைக் கொடுக்கின்றோம். அந்தச் செடி வளர்ந்தால்தான்
1.அந்த வித்தின் ரூபம்
2.மலரின் தன்மை,
3.மணத்தின் தன்மை தெரியும்.
இப்பொழுது, இங்கு ஒரு ஞானவித்தை யாம் உங்களுக்குக் கொடுக்கிறோம். அப்படியென்றால் உங்களுக்குள் பதிவு செய்து, ஈர்க்கக் கூடிய சக்தியைக் கொடுக்கிறோம்.
அப்பொழுது அதில் நாம் ஒன்றியிருக்க எத்தனையோ கஷ்டங்களும் நஷ்டங்களும் இருக்கும். இதையெல்லாம் பிளந்துவிட்டு உள்ளுக்குள் கொண்டு போக வேண்டும். அந்த உணர்வை நமக்குள் வளர்க்கக் கூடிய சக்தி நமக்குள் உண்டு.
1.நாம் வளர்ந்தோம் என்றால் அடுத்தவர்ளையும் வளர்க்கலாம்.
2.அடுத்தவர்களின் வேதனை வளர்ந்தால் அதைக் கேட்டோம் என்றால் நாமும் அந்த வளர்ந்த வேதனையை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.
3.இப்பொழுது எது தேவை…? சிந்தியுங்கள்..!
அதனாலே சில உண்மையின் உணர்வுகள் உங்களுக்குள் வரும் பொழுது, ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் தொடர்ந்து இந்த உணர்வுகளை உங்களுக்குள் எடுத்து வளருங்கள்.
ஒரு வித்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டால் அதைப் பாதுகாக்கும் உணர்வுக்குச் செலுத்த வேண்டுமா…! இல்லையா..? அந்த ஞானத்தின் வித்தின் தன்மை… அது அடர்த்தியானது அந்த “ஆதிசக்தியினுடைய உணர்வுகள்”.
அகண்ட அண்டம் எப்படி இருக்கிறது…? என்று “வட்ட வட்டமாக”, “மோதி…மோதி, மோதி…மோதி” எப்படிப் பல நிலைகள் மாறுகிறது என்று நன்றாகத் தெரியும். அதை நாம் நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்வது.
1.ஒரு கண்ணாடி சுத்தமாக இருந்தால் நம் உருவத்தைத் தெளிவாகக் காட்டும்.
2.அதில் கொஞ்சம் அழுக்குப் பட்டால் அதில் உருவத்தைத் தெளிவாகக் காணமுடியாது.
3.அந்த அழுக்கைத் துடைத்தால்தான் சரியாக வரும்.
அந்த அழுக்கைத் துடைக்கக் கூடிய உணர்வைத்தான், யாம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம். நம் ஆன்மாவில் இதைப் போன்ற அழுக்குகள் இருக்கின்றது. இதன் வழி கொண்டுதான் நாம் பார்க்க முடியும்.
அதில் அழுக்குப் பட்டிருக்கும் பொழுது
1.அழுக்குப் படவில்லை என்று நாம் சொன்னால் என்ன செய்யும்?
2.அந்த அழுக்குகள் ஒன்று ஒன்றாகக் கூடிக் கொண்டேதான் இருக்கும்.
3.இந்த அழுக்குகளை நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும். அப்பொழுது, நிச்சயம் இந்தத் தெளிவை அடைகின்றோம்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?