உங்களுக்கு யாம் முழு நம்பிக்கையுடன் கொடுக்கும் உன்னதமான சக்தி…!

 

உங்களுக்கு யாம் முழு நம்பிக்கையுடன் கொடுக்கும் உன்னதமான சக்தி…!

1.உலக மக்கள் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற
2.இந்தச் சக்தியை நாம் முதலில் பெற வேண்டும்.

குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் ஆத்ம சுத்தியை அவசியம் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று கணவன் மனைவியை நினைக்க வேண்டும். அதே போல் மனைவி கணவனை நினைக்க வேண்டும்.

இந்த உணர்வின் நிலைகள் இருவருடைய நிலைகள் ஒரு நிலை கொண்டு சரியான முறையில் யாம் சொல்லும் தியானத்தைச் செய்து வந்தால் இதில் நீங்கள் சொர்க்க பூமியைக் காணலாம்.

ஒரு குடும்பத்திற்குள் கணவன் மனைவி இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருந்தால்தான் அது சொர்க்கலோகம். ஆகவே கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமை என்ற நிலைகளை இங்கே உருவாக்க வேண்டும்.

குழந்தைகளிடம் சில குறைபாடுகள் இருப்பினும் அவர்கள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று குழந்தைகளுக்கு இந்த ஆசியை ஊட்ட வேண்டும். நம்முடைய நினைவு அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

1.குழந்தைகள் கல்வியில் சிறந்த திறன் இல்லை என்றாலும்
2.மகரிஷிகளின் அருள் உணர்வு அவன் பெறவேண்டும்
3.கல்வியில் சிறந்தவனாக அவன் வளர வேண்டும் வாழ வேண்டும் என்ற உணர்வை அவன் மேல் கூர்மையாகப் பாய்ச்சி
4.அதைப் போல் அந்தக் குழந்தைகளையும் எண்ணி ஏங்கும்படிச் செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்… நாங்கள் கல்வியில் சிறந்த நிலைகள் பெறவேண்டும் என்று குழந்தைகளை எண்ணச் செய்து அந்த உணர்வை ஒன்று சேர்த்து இணையுங்கள்.

அப்படி இணைக்கக் கற்றுக் கொண்டால் இந்த உணர்வின் சக்தி நிச்சயம் குழந்தைகளுக்குள் கல்வியில் சிறந்த ஞானமாக வளரும். கருத்தறிந்து செயல்படும் திறன் பெறுவார்கள். ஆகவே குழந்தைகள் மீது இப்படித்தான் நாம் பாசம் வைக்க வேண்டும்.

காரணம் இன்று தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான அறிவிலே சிக்குண்ட நாம் ரேடியோ டி.வி. இதைப் போன்ற நிலைகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
1.குறிப்பாகக் கர்ப்பமுற்றிருக்கும் காலங்களில்
2.பகைமை உணர்வுகளையும் குரோத உணர்வுகளையும் மற்ற தீமையின் உணர்வுகளையும் அதிகமாகப் பார்க்க நேர்ந்தால்
3.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் பதிவாக்கி விட்டால்
4.பிறக்கக்கூடிய குழந்தைகள் நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய (டி,வி.மூலம்) நிலைகளைத்தான் செய்யும்.

ஆகவே ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்றால் கர்ப்ப காலங்களில் டி.வி. பார்ப்பது போன்ற நிலைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகள் எல்லாம் என் கருவிலிருக்கும் குழந்தையிடம் வளர வேண்டும்
3.வியாசகர் எப்படி விண்ணுலக ஆற்றலைக் கண்டாரோ அந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைய வேண்டும்
4.இதை எல்லாம் குழந்தை அதை அறியும் ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு வான இயல் புவி இயல் உயிரியலை அறிந்தானோ அந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைய வேண்டும் என்று அதிகாலை துருவ தியான நேரத்தில் விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். கர்ப்பத்தில் இருக்கும் கருவுக்குள்ளும் இதை ஊட்டுங்கள்.
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
2.அந்த உணர்வுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் அது பாயும்.
3.நம் உடலில் வளர்ச்சியாகும் அணுக்களும் இந்தச் சக்தியைப் பெறும்.

நம் கண்ணின் பார்வைக்கு அந்த வீரிய ஆற்றல் (ANTENNA POWER) உண்டு. அது தான் பரமாத்மா என்பது.
1.நம்முடைய நினைவை இந்தப் பிரபஞ்சத்திற்குள் எங்கே செலுத்தினாலும்
2.அதை ஈர்க்கும் சக்தி நம் கண்ணுக்கு உண்டு.
3.அத்தகையை ஈர்க்கும் சக்தியைத்தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்
4.ஆகவே உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) அதைக் கொடுத்ததால்தான் அந்த வலிமை கொண்டு அதைப் பெறும் சக்தியும் அதை அறிந்திடும் உணர்வையும் அதை வளர்த்திடும் உணர்வையும் பெற்றேன்.

அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும்…! என்ற “முழு நம்பிக்கையுடன்…” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஆகவே
1.நாம் அந்த மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெற்று
2.நம்மைச் சார்ந்தோரின் பகைமை உணர்வுகளையும் தீமை உணர்வுகளையும் அகற்றும் சக்திகளைப் பெறுவோம்
3.பேரானந்தப் பெரு நிலை பெறுவோம்.

Leave a Reply