தியானம் செய்ய விரும்புவர்கள் “முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது…!”

telepathy meditation

தியானம் செய்ய விரும்புவர்கள் “முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது…!”

 

தியானத்தில் உட்கார்ந்ததும்,
1.இது முடியவில்லை…!
2.அது முடியவில்லை…!
3.உட்கார முடியவில்லை…! என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்தால் இதுதான் வளரும்.

எப்படியும் ம்கரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெறும் பொழுது உங்களைச் சும்மா இருக்க விடாது.

அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும். இந்த உணர்வு வரும் பொழுது பிறருடைய தீமைகளை அகற்றும் வலிமையினைப் பெறுகின்றோம். தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

மனிதர்களான நாம் இந்தச் சரீரத்திற்குப் பின், இனி ஒரு பிறவியில்லை என்ற நிலையில் முழுமை பெறவேண்டும்.

முழுமை பெறும் நிலையாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில்
1.“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்”
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வுகளை மட்டும்,
3.நீங்கள் கூட்டி வளர்த்துக் கொண்டால் போதும்,

அகண்ட அண்டத்தையும், இந்தப் பிண்டத்தையும் இவைகளின் இயக்கத்தின் உண்மைகளையும் அறியும் தன்மை வரும். தீமைகளை அகற்றும் சக்தியும் வரும்.

நமது உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ, அதன் உணர்வை வளர்த்து அதன் உணர்ச்சியின் தன்மை கொண்டுதான் இந்த உடலை இயக்குகின்றது.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் நுகரப்படும்போது தீமையின் நிலைகளில் அந்த அணுக்கள் நமது உடலில் வளர்ந்து விட்டால் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அது தன் இனத்தைப் பெருக்குகின்றது.

தீமைகளை வென்ற அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி விட்டால் அதன் தன்மை கொண்டு தீமைகள் வராது காக்கும் நிலையினை நம்முள் உருவாக்குகின்றது.

Leave a Reply