தியானம் செய்தால் நல்லதாகும்…! என்று சொன்னாலும் காசைச் செலவழித்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள்

Power of dhiyaanam

தியானம் செய்தால் நல்லதாகும்…! என்று சொன்னாலும் காசைச் செலவழித்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள்

நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அனுபவத்தின் தன்மையை ஏராளமான பேரைச் சொல்லலாம்.

இந்த மாதிரி அனுபவத்தை எனக்குக் கொடுத்து, ஒவ்வொரு நிலைகளிலும் உங்களை நீங்கள் நம்புங்கள்…! என்று பலருக்குச் சொல்லி வந்தாலும் கூட என்ன செய்கின்றார்கள்…?

அடுத்தாற்போல் தொல்லை வந்தால்…
1.யாம் சொன்ன பிரகாரம் ஆத்ம சுத்தி செய்வதை விட்டுவிட்டு
2.(இவர்கள் எண்ணி எடுப்பதை விட்டுவிட்டு),
3.ஏதாவது சாமியாரைத் தேடியோ அல்லது ஜோதிடக்காரரிடமோ தான் சென்று விடுகின்றார்கள்.

சாமி (ஞானகுரு) அன்று சொன்னார் நன்றாகியது. இன்று அவர் சொல்வதை எண்ணி, அந்த அருள் உணர்வுகளை எடுத்து நாம் மாற்றி அமைப்போம் என்ற அந்த மனது வருவதில்லை.

மனிதருடைய மனோ நிலை இன்று எப்படி இருக்கிறது..?

தியானத்தை சிரமப்பட்டு எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்குப் பதில் சாமியாரிடமோ, ஜோதிடக்காரரிடமோ சொல்லி காசைக் கொடுத்துவிட்டு மாற்றலாம் என்றுதான் இவர்களின் மன நிலைகள் வருகின்றது.

1.நம் எண்ணத்தால் வரும் தீமைகள் நமக்குள் விளைவதை, நம் எண்ணத்தால் எப்படி மாற்றுவது? என்பதை,
2.அந்த மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை,
3.ஆத்ம சுத்தி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உங்களிடம் கொடுத்தால்,
4.பயன்படுத்தத் தெரியாத நிலைகளில் சோம்பேறித்தனமாக இருப்பதால்தான் இந்த நிலை வருகின்றது.

உங்களை நீங்கள் நம்புங்கள் என்றுதான் சொல்கின்றேன். சாமியாரை நம்புகின்றீர்கள், ஜோதிடத்தை நம்புகின்றீர்கள்.

ஏன் இதையெல்லம் நீங்களே செய்யக்கூடாது?

யாம் சொல்லும் முறைப்படி இந்த அருள் உணர்வுகளை தியானத்தையும், ஆத்ம சுத்தியையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்றால்,
1.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
2.உங்களுக்கு நல்லதாகும் என்பதற்குத்தான் இதையெல்லாம் சொல்கின்றோம்.

Leave a Reply