குரு வாக்கை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவம்

Guru Eswarapattar

குரு வாக்கை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவம்

 

மகரிஷியின் அருளாற்றல் நாங்கள் பெற வேண்டும், எங்கள் பார்வையால் அனைத்தும் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை இணைத்து விட்டால் இந்த உணர்வுகள் பிரம்மம் ஆகின்றது.
1.அது கருவாகின்றது உருவாகின்றது.
2.தீமை என்ற உணர்வின் சக்தி, நமக்குள் வராதபடி பாதுகாப்பாகின்றது.
3.அதற்குக் குரு பலம் வேண்டும்.

நமது குருநாதர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார். அவரின் உணர்வை நுகர்ந்தேன். நுகர்ந்த உணர்வை எனக்குள் வளர்த்தேன். வளர்ந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

பதிவானதை மறந்து ஆசையின் நிலைகளை உங்களுக்குள் கூட்டினால் இந்த அரும்பெரும் சக்தியை நாம் இழந்து ஆசையின் உணர்வுகள் வளர்க்கப்பட்டு கொடுத்த வாக்கினை இழக்கும் தன்மை வரும்.

அருள் ஒளி பெறும் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது, ஆசையின் நிமித்தம் இதில் கூட்டப்படும் பொழுது, யாம் கொடுக்கும் வாக்கும் உங்களுக்குள் சீராக இயங்காது.

யாம் கொடுக்கும் வாக்கின் உணர்வுகள் அது கருவாகி, அணுவாக விளைந்தாலும், அதை வளரவிடாது உங்களின் ஆசையின் உணர்வுகள் தடுக்கும். குரு கொடுத்த வாக்கின் தன்மையையும் இழக்க நேரிடும்.

1.எங்கே சென்றாலும் குரு பெற்ற உணர்வினை, நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது,
2.பகைமையான உணர்வுகளை அகற்றிடும் வல்லமை பெறுகின்றோம்.

நாம் பெற்ற உணர்வின் தன்மையே நமக்குள் தெய்வமாகின்றது. நாம் எண்ணிய எண்ணங்களை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் செயல் எக்குணமோ அந்தத் தெய்வமாகின்றது.

இதைப் போன்று, அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்கினால் மற்றவைகளை அதனின் வலுவை இழக்கச் செய்து சிந்திக்கும் தன்மையைக் கொடுக்கும்.

1.குருவின் வலிமை கொண்டு மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்தான் உண்டு.
2.குருவின் நிலைகளில் ஏமாற்றிப் பிழைப்போர் நிலைகளில் கடைசி நிமிடம் உயிர் எதையுமே மறக்காது.
3.அந்த உணர்வுகள் கொண்டு உயிர் அதை வளர்த்தேதான் தீரும்.
4.அந்த வினைகளை அனுபவித்தேதான் ஆகவேண்டும்.

குரு பலம் கொண்டு குருவினை நினைத்தால் தீமையின் உணர்வுகள் தனக்குள் வராது தடுக்கலாம். இதை மறந்திடலாகாது.

குருவை எவரொருவர் நிந்திக்கின்றனரோ அருளொளி காட்டும் உணர்வை எவர் இருளச் செய்கின்றனரோ அவர்கள் வாழ்க்கையில் குருவின் தன்மையை இழந்து இருளின் தன்மை அடைவர். வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில் சிந்திக்கும் தன்மை வந்தாலும், எதுவும் வலிமை பெறாது.

1.குருவின் வலுவை எவ்வாறு இயக்க வேண்டுமென்றும்,
2.குருவின் தன்மை கொண்டு நம்மை அறியாது வந்த இருளை எப்படி நீக்குதல் வேண்டுமென்றும்…?
3.அதைச் செயலாக்குதல் வேண்டும்.
4.எனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் குருவையே மறக்கச் செய்யும்.

நண்பர்கள்பால் நண்பன் என்ற நிலைகள் இருப்பினும் அவன் தவறு செய்கின்றான் என்ற நிலைகள் வரும்பொழுது,
1.தவறென்ற நிலைகளில் குருவின் தன்மை கொண்டு தவறைத் திருத்தத் தவறினால்
2.தவறுக்கே உதவி செய்தால் தவறின் உணர்வின் அலைகள் சிறிது காலம் நிலைக்கும்.
3.பின் அவர் வாழ்க்கையே சீர்கெடுக்கச் செய்யும் என்பதை மறந்திடலாகாது.

மற்றவர்களிடம் குறைகள் இருப்பினும், குருவின் துணை கொண்டு குறைகளைக் களைய வேண்டும்.

புகழ் பாடும் நிலைகள் கொண்டு ஆகா…! உன்னுடைய வலுகள் என்ன…! என்று போற்றுவோர் நிலைகளுடன் இணைந்துவிட்டால், அதன் உணர்வின் நிலைகளை, சிறிது காலத்தில் உயிர் அதனுடைய உணர்வை உணர்த்தியே தீரும்.

உயிரிடமிருந்து எவரும் தப்ப முடியாது.

குரு வாக்கை வாங்கினால் அந்த குருவினுடைய நிலைகள் எளிதில் இருக்கலாம்.
1.ஆனால் குரு வாக்கின் பலன் மிக சக்தி வாய்ந்தது.
2.அதில் எவரொருவர் தவறுகின்றனரோ அந்தத் தவறின் நிலைகள் நிச்சயம் இயக்கிக் காட்டும்.

Leave a Reply