ஆதிசங்கரர் சொன்ன தத்துவம்

sri-adi-shankarar

ஆதிசங்கரர் சொன்ன தத்துவம்

ஆதி சங்கரரிடம் காசியில் இருக்கும் இந்த விநாயகருக்கு யாகங்கள் செய்து வந்தால்தான் உனக்கு நல்லது என்கிறார்கள் துவைதவாதிகள்.

ஆதிசங்கரர் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றும் இந்த உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் உண்டு. அதை எண்ணத்தாலே எடுத்துச் சுவாசிக்கும்போது அதை நான் பெற முடியும்.
1.இந்த உயிரான நிலைகள் அதனின் துடிப்பைக் கூட்டி
2.எண்ணத்தின் வலுவைக் கூட்டுவதற்கு சுவாச நிலைகள் கொண்டு
3.மெய் ஞானியின் அருள் உணர்வைச் சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்.

அப்பொழுது அந்தத் துவைதவாதிகள் அன்றிருக்கக்கூடிய அரசர்கள் இவருக்கு எதிர்ப்பு நிலை ஆகின்றனர். ஜைன மதம் ஒரு பக்கம் தாக்குகிறது. இந்து மதம் ஒரு பக்கம் தாக்குகிறது. இவர் போகும் பக்கமெல்லாம் எதிர்ப்பு.

இவர் இந்த உண்மையை எடுத்துச் சொல்லும்போது எதிர்ப்புதான் அதிகமாகிறது.

இந்த துவைதவாதிகள் அனைவருமே மனித உடலில் விளைந்த இந்த மந்திரத்தை எடுத்து அடுத்து ஒருவனுக்கு வயிற்றுவலி வரவேண்டும் என்றால்
1.வயிற்று வலியுடன் இறந்தவன் எந்த மந்திரத்தாலே இறந்தானோ
2.அந்த உணர்வின் தன்மையை அந்த மந்திரத்தால் அந்த நோயான உணர்வின் தன்மையை எடுத்து
3.அடுத்தவர் உடலில் செருகினால் போதும். அவனுக்கும் வயிற்று வலி வரும்.

வாதம் போன்ற நிலைகளில் வாதநோயால் இறந்தவனுடைய உடலில் இருந்து பிரித்து மற்றொருவனுக்கு செருகினால் அவனுக்கு வாதநோய் வந்துவிடும். இதுதான் ஏவல்.

தெய்வத்திற்குச் சக்தி இருக்கிறது என்ற நிலையில் இங்கே சிலைகள் செய்து உருவங்களாக அமைத்து கதைகள் சொல்ல அவன் எடுத்துக் கொண்ட நிலைகளுக்குச் செயல்படுத்தினார்.

இன்றும் நாம் இன்னென்ன குணங்களுக்கு இன்னென்ன மந்திரத்தை ஜெபித்தால்தான் நல்லது என்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அன்று அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் சொல்லும்போது துவைதவாதிகள் நீ இந்த வேள்விகள் செய்யாவிட்டால் அவஸ்தைப்படுவாய் என்று சொன்னார்கள்.

சொன்னதோடு மட்டுமல்லாது ஏவல் செய்து இவருக்கு வயிற்றுவலி வரவைத்துவிட்டார்கள்.

வயிற்றுவலி வந்தபின் இவர் கடும் நிலைகளில் சுவாசித்து அத்வைத நிலைகளில் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து அந்த தத்துவத்தை தன் நிலையை, நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

வேதியர்கள் அன்று துவைதத்தின் தத்துவத்தை இவரிடத்தில் வாதிட்டு பல நிலைகள் எத்தனையோ வேலைகளைச் செய்தார்கள். அதையெல்லாம் மாற்றித் தன் நிலைகளை அங்கே வெளிப்படுத்தினார்.

ஆதிசங்கரர் அதைச் செயல்படுத்தும்போது அன்றைய அரசர்கள் சிலைகளுக்கு முன்னால் யாகங்கள் வளர்ப்பதும் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும் பால் ஊற்றிப் பிற நிலைகள் செய்வதும்தான் “உண்மையான பக்தி…!” என்ற நிலைகளில் அவர்கள் வாதிட்டனர்.

ஆனால் ஆதிசங்கரர் சொன்னது…!
1.நாம் எண்ணும் சுவாசத்தின் நிலைகள் நம் உயிரான ஈசனிடத்தில் அந்தச் சுவாசங்கள் பட்டு
2.அது உறைந்து… நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகிறோமோ
3.அந்தக் குணமே நம் உயிரில் பட்டு அபிஷேகங்கள் நடக்கின்றது.
4.அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது நம் உடலிலுள்ள நல்ல குணங்களுக்குப் போய்ச் சேருகின்றது
5.நல்ல குணங்களுக்கு அது மகிழ்ச்சி ஊட்டுகின்றது என்று தெளிவாக்கினார்.

ஆதிசங்கரர் சொன்ன தத்துவம் – 2
அன்று ஆதிசங்கரர் சொன்ன அத்வைதத்தின் தத்துவம் அதாவது சூட்சம நிலைகளில் இருப்பதை நாம் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்ப்பதுதான் அந்த நிலை.

சூட்சமத்திற்கு எத்தனை குணமிருக்கின்றதோ நல்ல எண்ணங்கள் எடுத்து நல்லதே செய்ய வேண்டுமென்று ஒருவரைப் பார்த்து எண்ணும் பொழுது அந்த நல்ல குணங்களை நீ சுவாசிக்கின்றாய்.

கோவில்களில் உடல்களில் இருக்கக்கூடிய அந்தக் குணங்களை வடிவமைத்துத்தான் அந்தச் சிலையைக் காட்டியது.
1.கோவிலிலே தெய்வத்தைப் பார்க்கப்படும் பொழுது
2.இந்தத் தெய்வத்தின் குணத்தின் சக்தியை, நாங்கள் பெற வேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்.
3.அந்தத் தெய்வம் எந்த நல்லதைச் செய்கின்றதோ அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்
4.எங்கள் பேச்சும் மூச்சும், அந்தத் தெய்வ நிலைகள் பெற வேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்.

வியாபாரம் செய்யும் பொழுது “எங்களிடம் பொருள் வாங்கிச் செல்வோரும், அவர்களது குடும்பத்தினர் அனைவரும், நலமாக இருக்க வேண்டும்” என்று இந்தச் சுவாசத்தை எடுத்துச் சரக்குகளை எடுத்துக் கொடுத்தால் நன்றாக இருப்பார்கள்.

இப்படி பிறரை வாழ்த்தும் பொழுது இந்த உணர்வின் தன்மை ஏங்கும் பொழுது உடலுக்குள் இருக்கக்கூடிய உயிருக்கு இந்த உணர்வுகள் பட்டு இந்த உணர்வின் தன்மையை அங்கே இயக்கி நன்மையை விளையச் செய்யும்.
1.அங்கே நல்லதாகும் பொழுது
2.அங்கிருந்து வாழ்த்து கிடைக்கும் என்று இப்படிச் சொன்னார் ஆதிசங்கரர்.

ஆனால் இன்றிருக்ககூடிய நிலைகள் “தொடாதே… இதைத் தொடாதே…!” என்று வர்ணாசரமத் தன்மையை ஏற்படுத்தி அதில் தீட்டு வந்துவிட்டால் சக்தி போய்விடும் என்றும் சொல்வார்கள். இவையெல்லாம் மந்திரத்தின் நிலைகள். மனித உணர்வுக்குள் இருக்கக்கூடிய எதிர் சக்தியினுடைய நிலைகள் வரப்படும் பொழுது செயல்படாது.

இதைப் போலத்தான் ஒரு கோவிலில் மந்திரத்தை ஜெபிக்கும் பொழுது, ஒருவன் இறந்துவிட்டால் இவன் செய்த நிலைகளுக்கு அங்கே ஆவிகள் சுற்றும் என்பார்கள். அதற்கென்று ஒரு மந்திரத்தைச் சொல்லி சில நிலைகளை ஜெபிப்பார்கள்.

உலக ரீதியிலே மந்திரமில்லாத மதமில்லை. மனிதனுக்குள் விளைய வைத்த இந்தச் சக்தியைத்தான் ஆண்டவன் என்ற நிலைகள் கொண்டு நாம் மந்திர சக்திகளைச் ஜெபிக்கப்படும் பொழுது அந்த மனிதனுக்குள் விளைய வைத்த ஆற்றலைக் கூட்டியவுடன்
1.எவரொருவர் மந்திரத்தை ஜெபிக்கின்றாரோ
2.அந்த மந்திரத்திற்குள் இது வந்துவிடுகின்றது.

இவைகளெல்லாம் மூல மந்திரத்தினுடைய முறைகள். அந்த மூல மந்திரத்தின் முறைகள் பிரகாரம் துவைதவாதிகள் செய்தார்கள். ஆகையினால் அதற்கென்ற நிலைகளில் சில கருத்தன்மைகளைக் கூட்டி அதற்கென்று குரு நிலைகளைக் காட்டிச் சாஸ்திரங்களை விதித்திருக்கிறார்கள்.

இது தெரியாதபடி உள்ளவர்கள்
1.அந்த மந்திரத்தை ஜெபித்தார்கள் என்றால் திரும்பத் திரும்ப ஜெபித்தார்கள் என்றால்
2.மந்திரப் புத்தகங்களில் எழுதி வைத்ததை ஜெபித்தார்கள் என்றால்
3.முருகனைக் கைவல்யம் பண்ணலாம்… பல நிலைகளைப் பெறலாம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
4.நாம் வாழ்நாள் முழுவதற்கும் இதை ஜெபிப்போம்.

இதைப் போல நாம் மந்திரத்தை ஜெபித்தோமென்றால் நாம் இறந்தபின் இன்னொருவன் இதே போல ஜெபித்தானென்றால் அவன் உடலில் நம் ஆன்மா புகுந்துவிடும்.

அன்று அரசர்கள் காலத்தில் துவைதவாதிகள் என்னன சொன்னார்கள்…?

1.நீ பல வேலைகளில் ஈடுபட்டிருப்பாய்
2.அதனால் எண்ணி எடுப்பதற்கு உனக்கு நேரமில்லை
3.ஆகையினாலே யாகம் செய்ய ஒருவன் இருப்பின் அவனிடம் பொருளையும் காசையும் கொடுத்துவிட்டு
4.அவன் சொல்வதையெல்லாம் ‘உம்…” என்று கேட்டுக் கொண்டு யாகத்தில் எல்லாம் போட்டுவிட்டால்
5.ஆண்டவன் நேராகக் கொடுப்பான் என்று போதித்தனர்.

ஏனென்றால் இங்கே சிலைக்குப் பால் ஊட்டிக் காட்டுவது நெய் மற்றும் பலவற்றை விட்டு வாசனை விட்டுக் காட்டுவது பழ வர்க்கங்களில் அபிஷேகம் செய்வது சிலைக்கு மேல் எதையெல்லாம் போட்டார்களோ அதையெல்லாம் தீயிலிட்டு மந்திரத்தைச் சொல்லி யாகத்தைச் செய்து, அதற்கென்ற மந்திரத்தைச் சொல்லி செயல்படுத்துவார்கள்.

இங்கே யாகத்தைச் செய்தால் நல்லது நடக்கும் என்று யாகக் குழியைத் தோண்டி பலவற்றைப் போட்டுக் கண ஹோமம் அந்த ஹோமம் இந்த ஹோமம் என்று செய்வார்கள்.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய ஆத்திரம், கோபம், சலிப்பு, பயம் போன்ற குணங்கள் நமக்குள் இருந்து வேலை செய்கிறதென்றால் அதை மாற்றுவதற்காக அதைக் காட்டிலும் ஆத்திரமூட்டும் தன்மை பயத்தினால் துடித்துக் கொண்டு, சிந்தனையற்ற நிலையில் இருப்பவர்களை மாற்றுவதற்கு இதே போன்ற யாகக் குழியைத் தோண்டி அங்கே சிலைகளுக்குச் செய்தது போல இந்த மந்திரதைச் ஜெபித்தால் ஆண்டவன் உடனே வந்து அந்த அக்னி பீடத்திலிருந்து இறங்கி, உனக்கு நல்லது செய்வான்…! என்று சொன்னார்கள்.

ஒருவன் எந்த உணர்வாலே சோர்வடைந்திருக்கின்றானோ எந்த நோயினால் சோர்வடைந்திருக்கின்றானோ அதற்கு இந்த மந்திரங்களைச் சொல்லி புஷ்பத்தைப் போட்டு ஜெபித்துக் கொண்டிருப்பார்கள்.

இதே போல மந்திரங்களை ஜெபிக்கும் பொழுது இன்னொரு மனித உடலில் இருக்கும் அந்த அலைகளை எடுத்துச் செயல்படுத்துவார்கள்.
1.ஆனால், கேட்பது மட்டும்தான் கேட்கும்.
2.கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு, இவையெல்லாம் செய்ததனால், எல்லாம் நன்றாகிவிடும் என்ற எண்ணத்தை மட்டும் கொடுத்துவிட்டு
3.காசு வாங்கிச் சென்றுவிடுவார்கள் அந்த மந்திரம் ஜெபிப்பவர்கள்.
4.ஆனால் நாம் யாகத்தையும் செய்தோம்… அப்புறமும் முடியவில்லை என்றால்
5.ஆயுள் ஹோமம் செய்யவேண்டும்” என்று திசை திருப்பிவிடுவார்கள்.
6.இதுதான் துவைதவாதிகள் செய்து கொண்ட நிலைகள்.

அந்தத் துவைதத்தின் தத்துவத்தில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.

adi-shankara

Leave a Reply