அகஸ்தியன் நுகர்ந்த மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து தீமைகளை அடக்கும் வழி

Agastyar meditation

அகஸ்தியன் நுகர்ந்த மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து தீமைகளை அடக்கும் வழி

 

அகஸ்தியன் நஞ்சினை வென்றிட்ட அந்தப் பேரருள் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து இந்த உணர்வினை நுகர்ந்து, உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

அகஸ்தியன் பெற்ற பேரருள் எங்கள் அனைவரது உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களின் கலந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று இந்த உணர்வின் தன்மையும், உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர் பெற்ற அந்தத் தாவர இனத்தின் மணங்களை நீங்கள் இப்பொழுது உங்களுக்குள் நுகரும் சக்தி பெறுங்கள்.
1.உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுகள் செல்லச் செல்ல
2.ஒரு வித்தியாசமான உணர்ச்சிகள், உங்கள் உடலிலே தோற்றுவிக்கும்
3,நுகரும் மணத்தில் வித்தியாசமான மணங்கள் வரும்.
4.இப்பொழுது நம் வாழ்க்கையில் காணும் மணத்தைக் காட்டிலும் இந்த மணங்கள் வித்தியாசமாக வரும்.

சில உடல்களில், நோய்களின் தன்மை இருந்தால், இந்த உணர்வுகளை நுகரும் பொழுது
1.அது ஓடி ஒடுங்குவதை உங்கள் உடல்களில் பார்க்கலாம். உணரலாம்.
2.இப்பொழுது பல பல மணங்கள் வரும்.

உங்கள் உடலில், இதற்கு முந்திய எதிர்நிலையான அணுக்களுக்கு மாறாக, இப்பொழுது நாம் சுவாசிக்கும் மணங்கள் எதிர் நிலைகளை அதை ஒடுக்கும்.

அகஸ்தியனின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது உங்கள் உடல்களில் பலவிதமான வித்தியாசமான நல்ல உணர்வுகளும், அந்தத் தாவர இனத்தின் மணமும் உங்களுக்குள் கடும் வெறுப்போ, வேதனையோ, இதைப் போல அவைகளை அடக்கும் உணர்ச்சிகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவும்.

இப்பொழுது, அகஸ்தியனின் உணர்வுகள் உங்களுக்குள் பட்டபின், யாம் இதற்கு முன்னாடி சொன்ன “ஆதிசக்தியின் உணர்வின் தன்மையை”,
1.அந்த உயர்ந்த உணர்வினை அறிந்திடும் உணர்வும் ஆனந்த நிலையும் பெருவீர்கள்.
2.அருள் உணர்வுகள் உங்களுக்குள் உருவாகும் கருவாக இப்பொழுது உருவாகின்றது.

இப்பொழுது இந்தக் காற்றிலும், ஒரு அற்புதமான, ஒரு தென்றலின் மணம் வரும். அகஸ்தியன் காலத்தில் நுகர்ந்த, அந்த மூலிகையின் மணங்கள் இப்பொழுது உங்களின் சுவாசத்திற்கு வரும்.

இது உங்கள் உடலில் படரப்படும் பொழுது, பல வித்தியாசமான உணர்வுகள் தோன்றும். வெறுப்பு, சலிப்பு, சஞ்சலம், என்ற நிலையை அடக்கும். சிந்திக்கும் ஆற்றலை ஊட்டும்.

யாம் இந்நேரம் வரையில் சொன்ன அகண்ட உணர்வுகளுக்கு உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள். அகஸ்தியன் அறிந்த பேருண்மையை, நீங்கள் அறியும் ஆற்றலை இப்பொழுது பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.

1.இப்பொழுது உங்களைச் சுற்றி ஒரு ஒளி வரும்.
2.இப்பொழுது பதிவு செய்த உணர்வுகள் அனைத்தும் அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்கின்றோம்.

Leave a Reply