நம் குடும்பத்தில் இறந்தவர்களைப் பற்றி நாம் எண்ண வேண்டிய முறை எது…?

big-dipper-kalki

நம் குடும்பத்தில் இறந்தவர்களைப் பற்றி நாம் எண்ண வேண்டிய முறை எது…?

 

நம் குடும்பத்திலோ உறவினர்களின் குடும்பத்திலோ அல்லது நண்பர்களின் குடும்பத்திலோ யாராவது உடலை விட்டுப் பிரிந்தர்கள் என்றால் அதற்குப் பின் வருடா வருடம் அவர்களை நினைத்து “நினைவு நாள்…!” என்று வைத்துக் கும்பிடுகின்றோம்.

நினைவு நாள் அன்று எதை எல்லாம் நினைக்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

யாருடைய நினைவு நாளோ அவரின் நினைவு வரப்படும் போதெல்லாம்
1.நல்ல மனிதர்… இப்படி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாரே..! என்று எண்ணும் போது
2.அவர் உடலிலே இருந்த நோயின் உணர்வுகள் நமக்குள் அது பெருகத் தொடங்கும்.
3.அவருக்கு ஆகாரம் வைத்து நினைவு நாளில் கும்பிட்டால்
4.அவர் உணர்வுடன் பங்கு கொண்ட அந்த ஆன்மா நமக்குள் வந்து விடுகின்றது.

இதுபோன்ற நிலைகளை நாம் தடைபடுத்த நினைவு நாளில் எப்படி எண்ண வேண்டும்..?

கூட்டுத் தியானங்கள் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளி உடல் பெறச் செய்து விடுகின்றோம்.

அந்த ஒளியின் உடல் பெற்ற அவரின் உணர்வுகள் நமக்குள் இருக்கும் பொழுது
1.அந்தப் பேரருள் நம் உடலுக்குள்ளும் பரவி
2.நஞ்சினை நீக்கிடும் அருள் சக்தியை நாம் பெற்று
3.நம் உடலில் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.
4.இது தான் நினைவு நாள் என்பது.

ஆகவே ஒளியின் உடல் பெற்ற உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் போது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நம் உடலிலே படர வேண்டும் என்று எண்ணினாலே போதும்.

நினைவு நாள் அன்று இவ்வாறு எண்ணினால் அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்ததனால் அவரின் உணர்வுகள் நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து இருப்பினும் நம் உடல்களிலும் இருளை நீக்குகிறது. அதாவது
1.அவருடன் வாழ்ந்த காலத்தில் நம் உடலில் இருந்த உணர்வுகளுக்கு
2.அருள் உணர்வைக் கொடுத்து இருளை நீக்கும் நிலை பெறுகின்றது.

ஏனென்றால் அவர் ஒளியின் உடல் பெற்று விட்டார்…!
1.நமக்குள் இருக்கும் அவரைப் பற்றிய அணுவின் தன்மையும்
2.இருளை அகற்றிடும் அருள் ஒளி பெறும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்பது தான் இதன் உட்பொருள்.

இப்படிச் செய்யாமல் இன்று சாதாரண வழக்கத்தில் உள்ளது போல இறந்தவரின் நினைவு நாளில் அமாவாசை அன்று அந்த இருள் சூழ்ந்த நாளில் அவர் உணவாக உட்கொள்ளும் உணவினைப் படைத்து விட்டு அவரைப் பற்றி எண்ணி…
1.என்னுடன் எப்படி எல்லாம் வாழ்ந்தார்…! என்று
2.அதையெல்லாம் நாம் நினைவு படுத்தும் போது
3.அவர் வாழ்ந்த காலத்தில் அவர் உடலில் பட்ட அந்தக் கஷ்ட நஷ்டம் எல்லாமே
4.நம் உடல்களில் அதிகமாகப் புகுந்து பரம்பரை நோய் என்றோ பரம்பரை குணங்கள் என்றோ
5.அவர் அடைந்த வெறுப்பின் தன்மை அனைத்தும் இங்கே நமக்குள் விளைந்தே தான் தீரும். (யாரும் இதிலிருந்து தப்ப முடியாது)

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குத் தான் நமது தியானத்தின் வலிமையால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை ஒவ்வொரு நாளுமே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் சொல்கிறோம்.

அவ்வாறு செய்யும் போது இந்த உடல் பெற்ற விஷத்தின் தன்மைகள் அனைத்தும் அங்கே கரைந்து விடுகின்றது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை அவர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.
2.ஒளியின் உடலாக இருக்கின்றனர்.
3.ஆகவே இதற்கு அப்புறம் அவர்களுக்குப் பிறவி இல்லை.

நினைவு நாள் கொண்டாடும் பொழுதெல்லாம் இப்படி எண்ணினோம் என்றால் நமது உணர்வுகளும் வலுப் பெற்று இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மை நம் உயிர் எளிதில் அழைத்துச் செல்லும்.

நினைவு நாளை நாம் இப்படித்தான் நினைவுபடுத்தும்படி ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

Leave a Reply