முழு முதல் கடவுள் யார்…?

ganesha

முழு முதல் கடவுள் யார்…?

 

ஆதிமூலம் என்ற உயிர் இந்த மனிதனாக ஆன பிறகு முழு முதற் கடவுள் என்று அன்றே ஞானிகள் தெளிவாக்கியிருக்கிறார்கள். அந்த விநாயகருக்கு அங்குசத்தையும் போட்டுக் காட்டியுள்ளார்கள். ஏன்…?

யானையை அங்குசத்தை வைத்து அடக்குவார்கள். அது போல் இந்த உலகில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது இந்த மனித உடல் என்று காட்டுவதற்காக அங்குசத்தை விநாயகருக்குக் காட்டியுள்ளார்கள்.

1.மனிதன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகிவிட்டால்
2.இந்த அண்டத்தில் இருக்கிறது எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்.
3.அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஆனால் இவர்கள் என்ன செய்து விட்டார்கள் என்றால் “சிவனுக்கு முந்தியவன் விநாயகன்… அதனால் விநாயகர் முழு முதல் கடவுள்…!” என்று இப்படிச் சொல்வார்கள்.

சிவனுக்கு முந்தியவன் வினை தான். அந்த உணர்வின் தன்மை “ஓ…!” என்று பிரணவமாகி இந்த உடலாகும் போது சிவன். உடலாகும் போது சிவன். சிவனின் பிள்ளை விநாயகன். ஆகவே பிரணவத்திற்குரியவன். எது…?

இந்த வினை.

ஒரு உயிரணுவிற்குள் எந்தச் செடியின் சத்து மோதுகிறதோ அது பிரணவம். ஜீவ அணுவாக மாற்றும் சக்தி பெற்றது உயிர். (உயிரணுவிற்குள் துடிப்பும் அதனால் வெப்பமும் உருவாகிறது)
1.செடியின் சத்தை அந்த உயிரணு நுகர்ந்தால் பிரணவமாகிறது.
2.ஆகவே அந்தச் சத்து வினையாகிறது.
3.அதனால்தான் அந்த வினை உயிருடன் சேர்க்கப்படும் போது “விநாயகா…!” என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.
4.இந்த மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு செடியின் சத்தை நுகர்ந்தால் அது வினை. அதனால் தான் சிவனுக்கு முந்தியவன் விநாயகன். செடியின் சத்தை அது நுகர்ந்தபின் “ஓ…!” என்று பிரணவமாகி “ம்…!” என்று உடலாகும் போது விநாயகன். (சிவம் என்பது திடப்பொருள்)

எந்தச் செடியின் சத்தை உயிரணு நுகர்ந்ததோ மூஷிக வாகனா…!
1.அதாவது அந்த மணமே இயக்கி
2.அந்தச் செடி இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும் இயக்கச் சக்தியாக மாறுகிறது.
3.இது தான் விநாயகன்.

ஆனால் முழு முதற் கடவுள் என்று சொல்லும் பொழுது
1.பல கோடி வினைகளைச் சேர்த்து மனிதனாக ஆன பின் கணங்களுக்கு அதிபதி
2.எல்லாவற்றையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெற்றது…!
3.அதனால் தான் அங்குசத்தை வைத்துக் காட்டியது.

மனித உடலில் முழு முதற் கடவுள் என்ற நிலையில் எண்ணத்தால் எண்ணி நாம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். பிரணவத்தைத் தெரிந்து கொண்டவன் தான் மனிதன்.
1.இந்த உயிரின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவனும்
2.தன்னை அறிதல் என்ற நிலையிலே கண்டுணர்ந்தவனும் ஆதியிலே அகஸ்தியன் தான்.
3.அதாவது இயற்கையின் இயக்கச் சக்தியை உணர்ந்து கொண்டவன்… பிரணவத்தை உணர்ந்து கொண்டவன் அந்த அகஸ்தியன்.
4.ஆகையினால் தான் விநாயகரை முழு முதற் கடவுள் என்றும் நாம் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள் என்றும் சொல்வது.

அதே சமயத்தில் மனித உடலின் ஆறாவது அறிவாக வரக்கூடிய மணம் முருகன். பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்றால் நம் உடலுக்குள் அந்த உருவாக்கும் திறன் உண்டு
1.அதை வைத்து உருவாக்கக் கூடிய நிலையும்
2.உலகில் வரக்கூடியதை அடக்கும் சக்தி பெற்றது என்றும் ஞானிகள் கொடுக்கிறார்கள்.
3.இந்த வினையைச் சேர்த்துக் கொண்டவர்கள் அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் போகலாம்.

ஆனால் இப்போது இந்த உடலிலிருந்தே இந்த உணர்வுகளை அடக்கினால் தான் உண்டு. இதைச் செய்யத் தவறி விட்டோம் என்றால் மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகத்தான் போய்விடுவோம்

ஆகவே மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை நழுவ விடாது அந்த அகஸ்தியமாமகரிஷி சென்ற அருள் வழியில் நாம் செல்வோம். அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்வோம்.

Leave a Reply