குருநாதர் கொடுத்த சக்தி “சரியா… தப்பா…?” என்று எல்லாம் அறிந்து தெரிந்த பிற்பாடு தான் உங்களுக்கும் அதைக் கொடுக்கின்றோம்…!

Agastyar ultimate power

குருநாதர் கொடுத்த சக்தி சரியா… தப்பா…? என்று எல்லாம் அறிந்து தெரிந்த பிற்பாடு தான் உங்களுக்கும் அதைக் கொடுக்கின்றோம்…!

 

சூட்சம நிலைகள் கொண்டு எல்லாவற்றையும் அறிவதற்காகத்தான் இந்தியா முழுவதும் எல்லா இடங்களுக்கும் (ஞானகுரு) போய்ப் பார்த்து வந்தேன்.

குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) கொடுத்த சக்தி “சரியா… தப்பா…?” என்று அவர் என்னிடம் சொல்லியது தான்.
1.உண்மையை நீ முதலில் தெரிந்து கொள்…
2.அதைத் தெரிந்து கொள்ளாதபடி எங்கேயும் நீ வெளியிடாதே…! என்று சொல்லி விட்டார்.

அப்புறம் தான் அது எல்லாவற்றையும் எடுத்துப் பல இடங்களையும் சுற்றிய பிற்பாடு அந்த உயர்ந்த சக்தியை ஒவ்வொருவருக்கும் எப்படி கிடைக்கச் செய்வது…? என்று தெரிந்து கொண்டேன். அதன் வழியில் தான் இப்போது உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நீங்கள் என்னைப் போற்ற வேண்டும்… புகழ வேண்டும்…! என்று சொன்னால் எதை வேண்டும் என்றாலும் செய்யலாம். அப்படி நான் செய்தேன் என்றால் “அடேயப்பா…!” என்று நான் (ஞானகுரு) இருக்கிற பக்கம் கூட்டம் வந்து கொண்டே இருக்கும்.

இப்பவும் கூட்டம் வருகிறது. ஆனால் அதைக் கழித்து விட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.
1.ஏனென்றால் உண்மையான நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்திலுள்ளவர்கள் தங்கி இருப்பார்கள்.
2.இந்த உடல் இச்சைக்கு என்று கேட்டு வருகிறவர்கள் கொஞ்சம் குறைத்தே தான் இருக்கும்.
3.அருள் வழியில் வருகிறவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த சத்தை ஏற்றிக் கொண்டே இருப்பேன்.
4.முழுமையாக இந்த உடலுக்குத் தான் வேண்டும்… இந்த வாழ்க்கைக்குத் தான் வேண்டும்… என்ற ஆசையில் வருபவர்களை
5.கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்து விட்டு விடுவேன்.

உடலை வைத்துத் தான் நாம் அருள் சக்திகளை எடுக்க வேண்டும். ஆனாலும் அந்த உடலை வைத்து அருள் ஞானத்தை நமக்குள் பெருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவர்களையும் பெறச் செய்யலாம்.

நீங்கள் வளர்ந்தால்தான் அந்த நிலை பெறச் செய்ய முடியும். நான் ஒருவன் என்ன செய்ய முடியும்…? என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது.
1.நான் யானையைப் பண்ணுவேன் பூனையைப் பண்ணுவேன் என்று நினைத்தேன் என்றால்
2.அதெல்லாம் திமிர் தான்…! அப்படி ஒன்றும் எதுவும் செய்ய முடியாது…!

ஒரு நெல்லை வைத்துப் பல நெல்களை உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு சமப்படுத்த வேண்டும். அந்த உணர்வு வலு கொடுத்துத் தான் எல்லாச் சக்தியையும் பெருக்க முடியும்.

குருநாதர் எனக்கு அப்படித்தான் சக்தியைக் கொடுத்த்தார். அதையே தான் உங்களையும் யாம் செய்யச் சொல்வது.
1.நான் அதைச் செய்வேன்… என்று
2.“அந்த நான்…!” என்று வந்து விட்டது என்றால் அதற்குப் பின் வளர்ச்சி இல்லை… எல்லாம் தீர்ந்தது.
3.அதனால் நீங்கள் வளர வேண்டும்… என்று நான் நினைக்க வேண்டும்.
4.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும்… உங்கள் பார்வை எல்லரையாம் நல்லதாக்க வேண்டும் என்ற
5.அந்த எண்ணம் என்றைக்கு நான் கொள்கிறேனோ நீங்களும் வளர்கின்றீர்கள்… நானும் வளர்கிறேன்… உலக மக்களையும் வளர்க்க முடிகிறது.

ஆகவே ஒன்றின் துணை கொண்டு தான் இன்று வளர முடியும். சூரியன் தானாகப் பிரகாசிப்பதில்லை.

சூரியக் குடும்பத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் (மற்ற சூரியக் குடும்பங்களில்) இருந்து எடுத்து அலைகளாக மாற்றுகின்றது. அதைக் கோள்கள் உணவாக எடுக்கின்றது. கோள்களிலிருந்து வருவதை சூரியன் எடுத்து அதிலுள்ள நஞ்சைப் பிரித்து ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை மாற்றுகிறது.

இந்தக் கூட்டமைப்பு இல்லை என்றால் சூரியன் செயலிழந்துவிடும்… மங்கிவிடும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பிற அண்டத்திலிருந்து வந்த உணர்வுகள் நம் பிரபஞ்சத்தில் சேர்த்து இந்தப் பிண்டத்தில் நம் உடலிலும் இருக்கிறது.
1.அந்த உணர்வுகளை உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றிவிட்டோம் என்றால்
2.இந்த அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையில் நாம் எங்கு வேண்டும் என்றாலும் போகலாம்.
3.அது வேகா நிலை… எதிலேயும் வேகாது…!
4.இரண்டாயிரம் சூரிய குடும்பத்தை முதலில் வட்டம் இடும்.
5.பின் இதைக் கடந்து அகண்ட அண்டத்திற்குப் போகும் – இப்படி அடைந்த ஒரு கூட்டமைப்பாகப் போகும்.

அப்படி அகண்ட கூட்டமைப்பாகப் போவது தான் ஆதியில் எப்படி இருண்ட உலகமாக இருந்ததோ அது மாறி அகண்ட அண்டமே ஒளியின் சிகரமாக விளைகின்றது. அவ்வாறு ஆக எத்தனையோ கோடி வருடங்கள் ஆகும்.

எல்லாம் பூரணமாக ஒளியாக மாறிவிட்டது என்றால் அதற்கப்புறம் மனித இனங்களை இது ஒவ்வொன்றாகச் சீக்கிரமாக ஒளியாக மாற்றும் நிலை வரும்.
1.அப்பறம் அது ஒளியின் சுடராக ஒளிக்குள் இது எல்லாம் மாறும்.
2.இப்படி எத்தனையோ ஆண்டுகள் இது உருவாகும்.

அந்த நிலைக்கு எல்லோரையும் அழைத்துச் செல்லும் நிலைக்குத்தான் இந்த உபதேசமே…!

Leave a Reply