மனித உடலுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும் சக்தியையும் நாம் தெரிந்து கொள்வது நல்லது…!

powers-of-human

மனித உடலுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும் சக்தியையும் நாம் தெரிந்து கொள்வது நல்லது…!

இன்று விஞ்ஞான அறிவில் எங்கிருந்தோ ஒலி/ஒளிபரப்பக் கூடிய அந்த உணர்வின் காந்த அலையை அந்த உணர்வு கொண்டு இங்கே சுவிட்சைப் போட்டவுடன் TV RADIO காற்றிலிருந்து இழுத்து நமக்குக் காட்டுகின்றது.

இது யார் செய்தது..? மனிதன் தான்.

1.இந்த காந்த இயக்கத்தின் சக்தியினுடைய தன்மையை
2.நாம் உணர்ந்தறிந்து செயல்படும்… உரு பெறும்… உருவாக்கச் செய்யும்…
3.ஆறாவது அறிவின் தன்மை அது நம் உடலுக்குள் நின்று தசைகளை இயக்கினாலும்
4.நாம் எண்ணக்கூடிய உணர்வுகளைச் சுவாசித்தவுடன்
5.நம் உயிரிலே பட்டு – அந்த எண்ணங்களுக்குத் தக்கவாறு (நம்) உடலை இயக்குகின்றோம்.
6. அந்த உணர்வின் ஆற்றல் வலுவானது…! அதை நாம் பயன்படுத்தும் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

நான் படிக்கவில்லை…
1.சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கிறார்…! என்று விரக்தியாக இருக்க வேண்டாம்
2.சாமி சொல்வது “அர்த்தமாகவில்லையே…!” என்று எண்ண வேண்டாம்
3.சாமி சொல்வதைப் “புரிந்து கொள்ள வேண்டும்…!” என்ற ஏக்கத்தில் இருந்தால் போதும்
4.இந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

டேப் செய்யப் பயன்படும் “ஒலி நாடா” ஒன்றுமே அறியாதது. ஆனால் அந்த நாடாவில் பதிவு செய்து மீண்டும் அதை இயக்கினால் அந்த ஆனந்தமான பாடல்களைக் கேட்டு இரசிக்கின்றோம்.

அபூர்வமான படங்களையோ மற்ற எத்தனையோ ஆச்சரியத்தக்க அளவில் பல நிலைகளை நாம் கண்டு மகிழ்கிறோம்.

அதைப்போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கக்கூடிய காந்த சக்தியினுடைய நிலைகள் எந்த உணர்வை நாம் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ அது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கிக் கொள்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க நிலைகளை இந்த உபதேசத்தின் மூலமாகப் பதிவாக்குகின்றோம்.

இதைப் படிக்கும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு மகரிஷிகளின் உணர்வைச் சுவாசிக்க நேர்கின்றது. அது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சத்தாக மாறுகின்றது.

நெருப்புடன் ஒரு கட்டையைப் போட்டவுடன் அந்தக் கட்டையில் இருக்கக் கூடிய சத்தை மாற்றி அதை ஒளியாக மாற்றுகின்றது.

நம் உயிர் ஒளியாக நின்று உடலுக்குள் அணுவின் திசுவை இயக்கி அந்த உணர்வின் சக்தியை அறியச் செய்து அந்த அறிவின் நிலையில் இயக்குகின்றது. ஆகவே நம் உணர்வுகளை உயிரைப் போன்றே ஒளியாக மாற்ற வேண்டும்.

நாம் கட்டைகளை எரித்து அதன் சக்தியை மற்ற ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தி இரும்பையோ மற்றவைகளையோ உருக்குகின்றோம். அதைப் போன்று
1.நம் உடலை உருவாக்கிய இந்த உணர்வைக் கட்டையாக வைத்து,
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிச்
3.சிறுகச் சிறுக இந்த உணர்வின் சக்தியை உயிராத்மாவில் மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றிய பின் விண்ணிலே தோன்றக் கூடிய கடும் விஷமானாலும் அதனின் சக்தியை ஒளியாகத் தனக்குள் கூட்டி ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்றடைவது தான் “மனிதனின் கடைசி நிலை….!”

இந்த மனித உடலுக்குள் நின்று அந்த உணர்வின் சக்தியை நாம் சிருஷ்டிக்கும் வலிமை மிக்கதாக நாம் செயலாக்க வேண்டும். அவ்வாறு செயலாக்கப்படச் செய்வதற்குத்தான் இந்தத் தியானத்தின் வழி.

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்து வாழ்க்கையிலே மகிழச் செய்யும் இந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

விஞ்ஞானிகள் ஒரு பொருளின் தன்மையை உருவாக்கி இராக்கெட் மூலம் விண்ணிலே செல்லக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார்கள்.

அன்று மகரிஷிகளோ விண்ணை நோக்கி ஏகி விண்ணின் ஆற்றலைத் தான் இருந்த இடத்திலிருந்தே பெற்றுத் தனக்குள் அதைக் கூட்டி அந்த உணர்வின் சத்தை ஜீரணிக்கச் செய்து உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்ட மெய் உணர்வுகளைத்தான் இராமாயணம், மகாபாரதம் கந்தபுராணம் சிவபுராணம் என்று தோற்றுவித்து அதைத் சாதாரண மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாகக் காவியமாகப் படைத்துச் சென்றார்கள்.

மகரிஷிகளின் உணர்வுடன் அவைகளை மீண்டும் படித்துப் பார்த்தால் அதற்குள் மறைந்த மூலங்களை அறிய முடியும்.
1.இந்த உடலில் வாழும் இக்காலத்திலேயே
2.ஒளியின் சரீரம் பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

Leave a Reply