தாய் தந்தையை வணங்கச் சொல்கிறீர்கள்…! ஆனால் அது எப்படி அவர்களை முதல் தெய்வங்கள் என்று சொல்ல முடியும்…? என்று வாதம் செய்கிறார்கள்…!
கார்த்திகை நட்சத்திரம் அதனுடைய வளர்ச்சியின் தன்மை கொண்டு தனிக் குடும்பமாக ஒரு சூரியக் குடும்பமாகப் பிரிந்து செல்கின்றது.
அதாவது நவக் கோள்களும் இருபத்தேழு நட்சத்திரம் ஆவது போல் இருபத்தியேழு நட்சத்திரங்களும் இருபத்தியேழு சூரியக் குடும்பங்களாக வளர்ச்சி அடையும். ஏனென்றால் உணர்வின் பெருக்கமாக இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
குடும்பத்திலுள்ள பிள்ளைகள் வளர்ந்த பின் மூத்த பையன் திருமணமாகிப் பிரிந்து போகிற மாதிரி நம் பிரபஞ்சத்தில் வளர்ச்சி அடைந்த கார்த்திகை நட்சத்திரம் தனக்கென்று ஒரு குடும்பமாகப் பிரிந்து செல்கிறது. (ஏற்கனவே 1998-2000த்திலிருந்து சிறுகச் சிறுக அந்த நிலை ஆகிவிட்டது)
தந்தை முதுமை அடைந்த பின் வீட்டில் உள்ள மூத்த பையன் குடும்பத்தைக் காக்கும் நிலை இருந்தாலும் அவன் குடும்பத்தை விட்டுப் பிரிந்தால் எந்த நிலை ஆகுமோ அது போல் தான் நம் பிரபஞ்சத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரிந்து போய்க் கொண்டு இருக்கிறது.
நம் பிரபஞ்சத்திற்கு அருகில் பல பல புதிய கோள்கள் உருவாகிக் கொண்டுள்ளது…! என்று விஞ்ஞானிகள் அதைப் பார்த்துத் தான் இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வரும் அறிவு இங்கே நம் பிரபஞ்சத்திற்கு கிடைக்காமல் போய்க் கொண்டிருப்பதால்
1.இங்கே பூமியில் வாழ்ந்த மனிதர்களான நாம் முந்தி கொஞ்சம் தெளிவாக இருந்தோம்.
2.இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிவு மங்கிக் கொண்டு இருக்கிறது.
3.இன்று உலகெங்கிலும் நஞ்சின் உணர்வாகத்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றது.
யாராவது தனக்குப் பிடிக்காத நிலைகள் செயல்பட்டால் உடனே அவனைத் தொலைக்க வேண்டும்…! அடுத்த நாட்டுக்காரனை அழிக்க வேண்டும்…! அரசாட்சி செய்வதைத் தடுத்து அவனை வீழ்த்திவிட்டுத் தான் நாட்டை ஆளவேண்டும் என்ற இத்தகைய உணர்வுகள் எல்லோருக்குள்ளும் வளர்ந்து விட்டது.
ஒரு குடும்பத்திற்குள் பார்த்தால் “ரொம்பவும் எனக்கு மீறிப் போய்விட்டார்…!” என்ற நிலையில் அப்பாவையே உதைக்க ஆரம்பிக்கிறோம். அம்மாவையும் உதைக்கின்றோம்.
அப்பாவையும் அம்மாவையும் கொல்கிறவர்களும் இருக்கிறார்கள். நம்மைப் பெற்று வளர்த்தார்களே… நம் தாய் தந்தையர் தான் தெய்வம் என்று யாராவது நினைக்கின்றோமா…?
அம்மாவைக் கடவுள் என்று கும்பிடச் சொல்கிறீர்கள். ஆனால் என் எம்மா ராட்சஷியாக இருக்கின்றாள் அவளை எப்படி நான் கும்பிடுவது…? என்று என்னிடமே (ஞானகுரு) சொல்கிறார்கள்…! கேட்கிறார்கள்…?
அதே சமயத்தில் அப்பாவையும் கடவுள் என்று சொல்லச் சொல்கிறீர்கள். அவர் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்துப் பார்ப்பது போல் வஞ்சகமாகச் செயல்படுகிறார். ராட்சஷன் போன்று நடந்து கொள்கிறார்.
1.இப்படி இருக்கும் அப்பாவையும் அம்மாவையும் நீங்கள் கும்பிடச் சொல்கின்றீர்கள்…!
2.அவர்களை எப்படி நான் கடவுளாக எண்ணுவது…! தெய்வமாக எப்படி எண்ணுவது…? என்று எம்மிடம் வாதிக்க வருகின்றனர்.
ஆனால் இப்படிக் கேட்பவர்கள் சிறிய குழந்தையாக இருக்கும் போது சேட்டை செய்தால் உடனே அந்தத் தாய் தகப்பன் தலையைக் கிள்ளி எறிந்திருந்தால் பேசுவார்களா…! குழந்தைகள் தவறு செய்யும் பொழுதே ஆரம்பத்தில் தலையை கிள்ளி எறிந்து விட்டால் அப்புறம் என்ன செய்யப் போகிறார்கள்..?
தவறு செய்த குழந்தைக்குச் சோறு கொடுக்காமல் ரோட்டில் போய் பிழைத்துப் விட்டுப் போடா என்றால் அப்பொழுது என்ன செய்வார்கள்…! அப்பாவை மதிப்பார்கள் அல்லவா…! அப்புறம் சோற்றுக்கு “அப்பா…!” என்று கெஞ்சித் தானே வர முடியும்.
ஏனென்றால் “தன் பிள்ளை…!” என்ற பாசத்தால் அவன் செய்கின்ற இடர்பாடுகளுக்கெல்லாம் அனுசரித்து அதைச் சகித்துக் கொண்டு தன் பிள்ளைகள் கெட்டுவிடக் கூடாது… நல்லவர்களாக வளர வேண்டும்…! என்ற ஆசையில் பிள்ளை மீது உள்ள பாசத்தால் வளர்க்கின்றார்கள்.
ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பிற்பாடு “நீ அறிவு கெட்டவன்…!” என்ற நிலைகளில் அப்பாவைப் பேசுகின்றவர்களும் அம்மாவைப் பேசுபவர்களும் நிறையப் பேர் இன்று இருக்கிறார்கள்.
ஏனென்றால்
1.நாமெல்லாம் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள்.
2.எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டவர்க்ள்
3.அந்த நல்ல எண்ணத்தில் கோவிலில் இருக்கும் சாமிக்கு அபிஷேகம் செய்வோம். ஆராதனை செய்வோம். யாகத்தையும் செய்வோம்.
4.ஆனால் தன்னைப் பெற்ற தாய் தந்தையை அவமதித்து அனாதையாக்கித் தெருவில் விடும் இந்த நிலையில் தான் கடைசியில் இருக்கிறோம்.
அன்றைய மெய் ஞானிகள் காட்டிய உண்மைகளைத் தன் சுயநலன்களுக்காக என்று எந்த அரசன் மாற்றினானோ அதனின் தீமையின் விளைவே வளர்ந்து வளர்ந்து மனிதன் தன் இனத்தையே தான் அறியாத நிலைகள் கொண்டு (தன் இனத்தையே) கொன்று புசிக்கும் நிலை இன்று வந்து விட்டது.
1.பிள்ளைகள் தன் தாய் தந்தையரைக் கொல்வதும்…
2.பின் அதனின் வளர்ச்சியில் அதே பிள்ளைகள் தாய் தந்தையாக மாறும் பொழுது
3.தன் பிள்ளைகளைக் கொன்றிடும் நிலையாக இன்று நடந்து கொண்டிருக்கின்றது.