அகஸ்தியன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டுணர்ந்த பேருண்மைகளை இன்று நாமும் காண்போம்…!

அகஸ்தியர் - பாபநாசம்

அகஸ்தியன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டுணர்ந்த பேருண்மைகளை இன்று நாமும் காண்போம்…!

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கப்படும் போது நமது பூமி துருவப் பகுதியில் கவர்ந்து வருவதைத் தன் ஐந்தாவது வயதில் கண்டுணர்ந்தான்.
1.வானஇயல் தத்துவம் புவியியலாக மாறுவதைத்
2.தன் தாய் தந்தையிடம் சொல்லிக் கொண்டே இருக்கின்றான்.

அகஸ்தியன் எதைக் கண்டானோ “அந்தச் சொல்… அன்றைய பாஷையில்…!” ஜாடைகளாகச் சொல்லி அந்த உண்மைகளைச் சொல்கின்றான்.

அவன் சொன்ன நிலைகள் என்ன…? மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அதைக் கண்டுணர்ந்து இங்கே எடுத்து அதை வித்தாக வைத்து (கருவாக – மூலதனமாக) வானுலகை நீ எப்படிப் பார்க்க வேண்டும்…? என்று எமக்குக் (ஞானகுரு) காண்பித்தார்.

நம் பிரபஞ்சத்தில் பல பல நிறங்கள் மாறிக் கொண்டே வருகிறது. பூப்பொறிகிற மாதிரி ஒன்றோடு ஒன்று மோதிச் சிதறிச் சிதறி பல நிறங்கள் மாறுகிறது.

அப்படிச் சிதறும் பொழுது ஆவி (VAPOR) மாதிரிப் போய் மேகக் கூட்டமாக ஒரு பக்கத்தில் ஒதுங்குகிறது. அதில் மோதப் போகும் போது ஒரு மத்தாப்பு விட்டால் எப்படி அதிலிருந்து சிதறுகிறதோ அதிலே பல ரூபங்கள் மாறுகிறதோ அதைப் போன்று எத்தனையோ வகையான ரூபங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் மாறுகின்றது. வானஇயலில் இவ்வாறு இது மாறிக் கொண்டே இருக்கின்றது.

அகஸ்தியன் தனக்குள் பார்த்து அவனில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இது. அன்றைக்கு அகஸ்தியன் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இன்றும் இருக்கின்றது.

ஆனால் அன்று ஐந்து வயது நிரம்பிய தன் குழந்தையின் அறிவைக் கண்டு அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் மிகவும் ஆனந்தப்படுகின்றார்கள்.

ஆனந்தப்பட்டாலும் அவர்கள் உடல்களில் பூசிக் கொண்ட பலவிதமான விஷத் தன்மை கொண்ட மூலிகைகள் பச்சிலைகளின் வாசனைகளை நுகரும் பொழுது உடலில் அணுக்களாக மாறி அவர்கள் உடல்களிலே நோயாக மாறுகின்றது.

யார்…? அகஸ்தியருடைய தாய் தந்தையருடைய உடல்களிலே அந்த விஷத் தன்மை பெருகி அவர் மனிதனாக உருவாக்கியதற்கு எதிர் நிலையாகின்றது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் மிருகங்கள் விஷப் பிராணிகளிடமிருந்து தப்பிப்பதற்காகப் பல தாவர இனங்களையும் பச்சிலைகளையும் அரைத்துப் பூசிக் கொண்டார்கள்.

அந்த மணத்தை நுகரும் மிருகங்களும் மற்ற உயிரினங்களும் இவர்கள் பக்கம் வருவதில்லை. அஞ்சி ஓடி விடுகிறது.

ஆனால் அவர்கள் உடலை உருவாக்கிய அணுக்களில் விஷத் தன்மை கொண்ட தாவர இனங்களின் மணங்களைச் (உடலில் பூசியதை) சுவாசிக்கும் பொழுது உடலுக்குள் சென்று
1.எப்படி மிருகங்கள் இந்த வாசனையைக் கண்ட பின் அஞ்சி ஓடுகின்றதோ
2.இதைப் போல இவர்கள் உடல்களிலே அந்த வாசனைகள் சிறுகச் சிறுகப் புகுந்து
3.இவர்கள் உடல்களிலே நோய்களாக மாறுகின்றது.
4.அகஸ்தியனுடைய ஐந்தாவது வயதில் அவர்கள் மடிந்து விடுகின்றார்கள்.

ஆனால் தாயின் கருவிலே முதலில் சிசுவாக இருந்த அகஸ்தியனுக்கோ அந்த விஷத்தின் ஆற்றலை மாற்றி விஷத்தை அடக்கிடும் அணுக்களாக வளர்ச்சி பெற்றது அது அவனின் பூர்வ புண்ணியம்.

அகஸ்தியன் தான் கற்றுணர்ந்த உணர்வுகளைத் தன் அருகிலே மற்ற குழந்தைகளுக்குச் சொல்லால் சொல்லப்படும்போது அவர்களும் செவி கொண்டு கேட்கின்றார்கள்.

அப்படிக் கேட்டுணர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலிலே விளைகின்றது. நேருக்கு நேர் விளைகின்றது. அக்காலத்தில் அவருடன் சூழ்ந்து வாழ்நதவர்களுக்கெல்லாம் இந்தச் சக்தி பெறுகின்றது.

உதாரணமாக தெருவில் ஒரு போக்கிரிப் பையன் இருந்தால் போதும். அவன் செய்யும் சேட்டை எல்லாம் அவன் கூடப் பழகியவர்கள் உணர்வுகளை என்ன செய்யும்…?

அந்தத் தெருவில் இருக்கிற எல்லாப் பையன்களும் போக்கிரியாக மாறிக்கொண்டு இருப்பார்கள். ஒரு பையன் கூட நல்ல பையனாக வர மாட்டார்கள்.

ஏனென்றால் ஆரம்பத்தில் குழந்தைப் பருவத்தில் நல்ல குழந்தையாக இருந்தாலும் ஒரு பையன் ரொம்பச் சேட்டை செய்கின்றான் என்று அதை உணர்வை உற்றுப் பார்த்தால் அந்த உடலில் வருவது எல்லாம் இங்கே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்.

இதைப் போன்று தான் அகஸ்தியன் கூடப் பழகிய அவன் சகாக்களும் அகஸ்தியன் கண்ட உண்மைகளை அறியும் நிலை பெற்றார்கள்.

அக்காலங்களில் அகஸ்தியன் வாழ்ந்த பகுதி அந்தத் தென்னாடு எல்லாம் இப்போது கடலுக்குள் போய்விட்டது. அகஸ்தியன் உரு பெற்ற இடம் கடலுக்குள் மலையாக இருக்கின்றது. அதன் பின் மேவிய நிலைகள் தான் இப்பொழுது நாம் பார்க்கும் இந்தப் பூமி எல்லாம்.

அகஸ்தியன் நீர் வேண்டும் என்று நினைக்கப்படும் போதெல்லாம் எப்பகுதியில் இருந்து எந்தெந்த உணர்வுகளைச் சுவாசித்தானோ வானுலக ஆற்றலை எடுத்ததனால் அந்த உணர்வுகள் அந்தப் பாறையிலே படும்.

மேகங்களைக் குவித்து நீராக வடியும்.

இதுகளெல்லாம் அகஸ்தியன் உணர்வுகள் வெளிப்பட்டு இது வெளிவந்ததை குருநாதர் எம்மை நுகரச் செய்து அவர் கண்ட காட்சிகளைக் காணும்படிச் செய்தார்.

இதைப் பதிவாக்கிக் கொண்டாலே போதும். அந்த மாமகரிஷி கண்ட பேருண்மைகளை நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் காண முடியும்.

அதை இப்பொழுது எதற்காக உங்களிடம் பதிவு செய்கின்றேன் என்றால்
1.விஞ்ஞான அறிவால் வான மண்டலமும் நம் பூமியும் விஷத் தன்மையாக மாறிக் கொண்டு வரக்கூடிய இந்த நேரத்தில்
2.தாயின் கருவில் இருக்கும் போதே விஷத் தன்மை முறித்து
3.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த அகஸ்தியன் உணர்வுகளை
4.நீங்களும் கவர்ந்து உங்களுக்குள் பதிவாக்கி அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்
5..குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவாக்குவது.
6.இப்பொழுது உங்கள் உணர்வுகள் எல்லாம் அந்த அருள் ஞானி அகஸ்தியனுடைய உணர்வுடன் கலக்கின்றது.
7.அகஸ்தியனைப் போன்றே நஞ்சை ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

Leave a Reply