“ஓ…ம்…” என்ற நாதமாய் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை நம்மை ஆளும் ஆண்டவனாக வணங்க வேண்டும்

Om - ohm

“ஓ…ம்…” என்ற நாதமாய் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை “நம்மை ஆளும் ஆண்டவனாக” வணங்க வேண்டும்

 

நாம் எதையெல்லாம் கேட்டு பார்த்து நுகர்கின்றோமோ (சுவாசிக்கின்றோமோ) நம் உயிரிலே பட்டபின் “ஓ… என்று இயங்கி “ம்…”என்று நம் உடலாக மாற்றுகின்றது.

நாம் எந்த குணத்தின் தன்மை இயக்குகின்றமோ அதன் உணர்வின் இயக்கமாக உயிர் நம்மை ஆளுகின்றது.

நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றமோ அந்த உணர்ச்சியின் இயக்கமாகத்தான் நம் சொல்லும் வருகின்றது. செயலும் செயல்படுகின்றது. அந்த உணர்வுக்கொப்பதான் நம் உடலும் இயக்குகின்றது.

உதாரணமாக நாம் ஒரு குணத்தை எண்ணிச் சுவாசிக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.நம் உடல் ஓர் அரங்கம்
2.இந்த அரங்கத்தில் நாம் நுகரும் உணர்வுகள் நாதம் (உயிரில் பட்டதும்)
3.அதைத் தான் “அரங்கநாதன்…” என்பது.

எதை நுகர்கின்றோமோ அதை நம் உயிர் நாதமாக நம்மை இயக்குகின்றது.

அந்த நாதத்தின் உணர்ச்சியை உதாரணமாகக் கோபமாகச் சொல்லப்படும்போது நீங்கள் கேட்டால் என்னவாகும்…?

அந்தக் கோபத்தின் உணர்வே உங்களை ஆளும். அது தான் “ஆண்டாள்…”

நாம் நுகரும் உணர்வுகள் அதே உணர்ச்சியின் தன்மையாக இயக்கப்பட்டு அந்தச் சொல்லாக சொல்லப்போகும் போது நீங்கள் கேட்டால்
1.அந்த கோபத்தின் உணர்வே உங்களை ஆளும்.
2.அந்தக் கோபத்தின் உணர்வே என்னையும் ஆளும்.
3.கோபத்தின் உணர்வை அடிக்கடி நாம் எடுத்தால் அந்த உணர்வின் தன்மை உடலாக ஆகி விட்டால் “ஆழ்வார்…”

அந்தக் கோபமான உணர்வுகள் உடலுக்குள் அதிகமானால் இரத்தக் கொதிப்பாக ஆகி
1.அந்த இரத்த கொதிப்பு தான் நம்மை ஆளும்.
2.இதைத் தான் ஆழ்வார் என்று ஞானிகள் தெளிவாகக் கூறி உள்ளார்கள்.

நமது வாழ்க்கையில் நாம் எப்படி எண்ண வேண்டும்…?

இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும். நாங்கள் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும். தெளிந்த மனம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் அந்த அருள் உணர்வுகள் நம் உடலுக்குள் அரங்கநாதனாகி கேட்பவர்களையும் அந்த உணர்வுகள் ஆளும். நன்மை செய்யும் உணர்வுகளை நாம் எடுக்கும் போது மற்றவரும் நன்மை செய்பவராக மாறுவர்.

நன்மை செய்யும் உணர்வுகள் நமக்குள் பெருகி நம் உடலுக்குள் நன்மைகள் ஏற்படும். நம் சொல் அடுத்தவர்கள் (இசை) செவிகளில் பட்டு அவர்களையும் நல்லதைச் செய்ய வைக்கும். அதனால் தான்
1.“ஓ…ம்…” என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை
2.எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம் என்று
3.உயிரை வணங்கச் சொல்கிறோம்.

ஆகவே நம்மை ஆள்வது யார்…? நம் உயிர் தான் ஆண்டவனாக ஆள்கின்றது.

எண்ணியதை இயக்குகின்றது.
எண்ணியதை உடலாக்குகின்றது
எண்ணியதை வைத்து இந்த உடலையே ஆள்கின்றது நம் உயிர்…!

Leave a Reply