“உடல் ஆசை… உயிர் ஆசை…” நமக்கு எந்த ஆசை வேண்டும்…?

Markandaeyan

“உடல் ஆசை… உயிர் ஆசை…” நமக்கு எந்த ஆசை வேண்டும்…?

நாம் இப்போது எதை ஆசைப்படுகின்றோம்…? இந்த உடலில் நான் வளர வேண்டும் என்றும் இதிலே மகிழ்ந்து வாழ வேண்டும் என்று
1.இந்த உடல் ஆசைதான் வருகின்றது.
2.உயிரான ஈசன் நமக்குள் இருந்து நல் வழி காட்டுகின்றான் என்ற நிலையைச் சுத்தமாக மறந்துவிடுகின்றோம்.

ஒருவன் எனக்குத் தவறு செய்தான் என்ற உணர்வை நுகர்ந்தால் அந்தத் தவறு செய்யும் உணர்ச்சி நமக்குள்ளே இயக்கி நம்மையும் தவறு செய்பவனாக மாறுகின்றது.

இந்த உடலின் இச்சைக்குத்தான் மாறுகின்றதே தவிர
1.தீமையான உணர்வுகளை நமக்குள் மாற்றி அமைக்கும் சக்தி இருந்தும்
2.அதைச் செயல்படுத்த முடியாது போய்விடுகின்றது.

அதனால் தான் என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டச் சொல்கின்றம்.

1.நீ ஒளியாக இருந்து…
2.உணர்வின் தன்மை எனக்கு எப்படித் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றாயோ
3.உன்னைப் போல இருளை அகற்றிடும் சக்தியாக
4.மெய்ப் பொருள் காணும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.உடல் ஆசை இல்லாது உயிரான ஆசை தான் எனக்கு வேண்டும்.

இதைத்தான் இராமயாணத்தில் உடலின் ஆசையைச் சிவ தனுசு என்று காட்டியுள்ளார்கள். அதாவது
1.உடலைக் காக்கும் (தன்னைக் காக்க) ஆசையில்
2.உடலில் விளைந்த பிறிதொரு தீமை செய்யும் உணர்வுகளைக் கவர்ந்து
3.நாமும் தீமை செய்து தீமையான உடலாகத் தான் வளர்த்து விடுகின்றோம்.

எதிரி என்றால் வீழ்த்திடும் உணர்வு வருகின்றது.
1.ஆனால் வீழ்த்திடும் உணர்வு வரும் போது
2.அந்தத் தீமையின் உணர்வே… நம் உடலையும் வீழ்த்துகின்றது…! என்பதனை நாம் மறந்து விடுகின்றோம்.
3.இத்தகைய உடல் ஆசை வரப்படும் போது தவறின் தன்மைய வருகின்றது.

ஆனால்…,
1.உயிரான ஈசன் அவன் எனக்குள் இருக்கின்றான்
2.எண்ணியதை அவன் உருவாக்குகின்றான்… இருளை அகற்றுகின்றான்… தெளிந்த மனம் பெறச் செய்கிறான்…
3.அவன் அருளால் அருள் மகரிஷிகளின் உணர்வை என்றுமே நான் பெறுவேன் என்ற
4.இந்த உயிர் ஆசையை நமக்குள் வளர்க்கப்போகும் போது
5.அருள் ஆசை நமக்குள் என்றுமே இருந்து கொண்டே இருக்கும்.

அந்த அருள் ஆசை இருந்தால் நமக்குள் பொருள் அறிந்து செயல்படும் திறனும் பிறவியில்லா நிலை அடையும் ஆற்றல்களையும் பெறுகின்றோம்.

உயிருடன் ஒன்றியே நாம் வாழ்கிறோம். அவனுடன் ஐக்கியமாகும் நிலை பெற்று விட்டால் உயிர் நம்மை (அவனுடன் இணைந்த நிலையில்) நேரடியாக மகரிஷிகள் வாழும் இருப்பிடத்திற்கே அழைத்துச் செல்லும்…!

Leave a Reply