அரசர்கள் உருவாக்கிய ஐதீகங்களில் தான் இன்றும் உள்ளோம்…! ஞானிகள் கொடுத்த மெய் வழியில் நாம் செல்லவேண்டும்…!

wisdom-light
அரசர்கள் உருவாக்கிய ஐதீகங்களில் தான் இன்றும் உள்ளோம்…! ஞானிகள் கொடுத்த மெய் வழியில் நாம் செல்லவேண்டும்…!

 

இயற்கையின் செயல் ஆற்றல்கள் எவ்வாறு இயங்குகின்றது என்ற உண்மையின் நிலைகளை அருள் ஞானமாக அதைத் தெளிவுற நமக்கு எடுத்துரைத்தவர்கள் அன்றைய மகா ஞானிகள்.

அவர்கள் கண்டுணர்ந்ததைச் சாதாரண பாமரனும் அறிவதற்காகவும் அந்த ஆற்றல்களைப் பெறுவதற்காகவும் ஒவ்வொரு மாதமும் விழாக்களாக நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
1.அதை நாம் உணரவும் முடியவில்லை
2.அதை அறியவும் எந்த முயற்சி எடுக்கவில்லை
3.இது தான் இன்றைய நிலை.

ஏனென்றால் பிற்காலத்தில் வந்த அரசர்கள் அந்த மஹா ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த நிலைகளை “ஐதீகம்…!” என்ற நிலைகளில் உரு மாற்றி விட்டார்கள்.

ஆனால் அதே சமயம்
1.இயற்கையில் உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் எவ்வாறு உருவானது…?
1.மனித உடலுக்குள் எத்தகைய பேருண்மைகள் நிகழ்கின்றன…?
2.ஒவ்வொரு குணங்களின் செயல்களும் எவ்வாறு இயக்குகிறது…?
3.சேர்த்துக் கொண்ட குணங்களுக்கொப்ப உயிர் அந்த உணர்வின் இயக்கமாக உடலாகவும்
4.அந்த உணர்வின் இயக்கமாக அறிந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளுதலும்
5.நுகரும் (சுவாசிக்கும்) மணத்தால் தன்னைப் பாதுகாக்கும் நிலையும்
6.உணர்வால் தன்னை இயக்கித் தன்னை வளர்த்துக் கொள்வதும்
7.அது எவ்வாறு என்ற உண்மைகளைத் தன்னைத்தானே அறிந்திடும் நிலைகளுக்கு
7.மகரிஷிகளால் தெளிவாக மக்களுக்கு உணர்த்தப்பட்டது

இவையெல்லாம் ஞானிகள் வெளிப்படுத்தியிருந்தாலும் தன்னைத்தானே அறியாத நிலைகள் தடைப்படுத்தப்பட்டு
1.அரசர்களின் உருவாக்கிய ஐதீகப்படித்தான்…
2.அரசர்ளின் வழிகளில் தான் நாம் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றோம்.
3.ஞானிகள் சொன்ன வழியில் நாம் செல்லவில்லை.

ஆறாவது அறிவை “முருகன்…” என்று ஞானிகள் சொன்னால் அதனை ஓர் அரசன் முருகனே எனக்குக் குலதெய்வம் என்றும் முருகனல்லாது வேறு யாரையும் வணங்குவதில்லை தனித்துப் பிரித்து கொண்டான்.

முருகன் யார்…? என்று தத்துவ ஞானிள் நமக்குத் தெளிவுற எடுத்து உரைத்திருந்தாலும் அதனை அந்த அரசனுக்கு கீழ் இருக்கும் குடிமக்கள் அறிய முடியாத நிலைகளில் தடைப்படுத்தப்பட்டது. அறிய முடியாத நிலைமை ஆகிவிட்டது.

அந்த அரசனுக்குக் குலதெய்வம் என்ற நிலைகளில் ஸ்தல புராணத்தை வடித்து யாகங்கள் வேள்விகள் செய்து அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றினார்கள்.

நம் குலதெய்வம் இட்ட நிலைகளில் இந்த அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி அந்த சட்டத்தின் அடிப்படையில் மதம் என்ற நிலைகளை இயக்கிவிட்டார்கள்.

விஷ்ணு மதம் சிவ மதம் முருகன் மதம் விநாயகன் மதம் என்று இப்படிப் பல மதங்களாக இயக்கப்பட்டுவிட்டது.
1.உலகில் எண்ணிலடங்காத மதங்கள் உண்டு
2.எண்ணிலடங்காத இனங்கள் உண்டு

இலட்சுமி தான் எங்கள் குலதெய்வம் என்று செல்வமும் மற்ற பொருள்களையும் வைத்து அதை ஒரு அரசன் கடைபிடித்து அந்தச் சட்டத்தை இயற்றி அந்தக் குடிமக்களைத் தன் கீழ் கொண்டு வந்து விட்டான்.

இதே மாதிரி சரஸ்வதியை எடுத்துக் கொண்டால் “சாரதாதேவி…!” என்று அதற்கு மறு பெயரிட்டு அதை எனது குலதெய்வம் என்று ஒரு அரசன் கூறி ஒரு மதத்தை உருவாக்கித் தனது குடிமக்களை ஆட்சி புரியும் நிலைகளுக்குக் கொண்டு வந்து விட்டான்.

விநாயகர் தத்துவத்தை எடுத்துக் கொண்டால் விநாயகன் எங்கள் குலதெய்வம் என்ற நிலைகளில் “அவனே முதல் கடவுள்..!” என்று ஒரு சாரார் அதை எடுத்துக் கொண்டனர்.

அந்த மதத்தின் அடிப்படையில் எங்கள் விநாயகர்… கணபதி எங்கள் குலதெய்வம்…! என்ற நிலைகளுக்கு அவர்கள் இயற்றிய சட்டத்தின் கீழ் அந்தக் குடிமக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.

இன்று அந்த விநாயகர் தத்துவத்தையே நாம் அறிய முடியாத நிலைகளாகி காலத்தால் மறைந்தே போய் விட்டது.

விஷ்ணு எங்கள் குலதெய்வம் என்று அதை ஒரு மதம் என்ற நிலைகள் இயக்கப்பட்டு
1.அதிலே வடகலை தென்கலை என்ற நிலைகளில்
2.நாமம் இடுவதிலும் முத்திரை இடுவதிலும் தனக்குள் போர் செய்து கொண்டு
3.உண்மை நிலைகளை அறிய முடியாத நிலைகளில் விரயமாகி விட்டது.

“அரங்கநாதன்…!” எங்கள் குலதெய்வம் என்று அதை ஒரு சாரார் ஒரு அரசன் கடைப்பிடித்து அதன் வழிகளிலே போதனை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதே போன்று “பெருமாள்…” தான் எங்கள் குலதெய்வம் என்றும் அவன் கையிலே தான் எங்கள் உயிரும் எங்கள் இயக்கமும் என்று அதை ஒரு அரசன் கடைபிடித்து அவன் ஒரு தத்துவத்தை எடுத்துக் கொடுத்தான்.

அந்தப் பெருமாள் யார் என்றும்… அந்த அரங்கநாதன் யார் என்ற நிலைகளையும் அறிய முடியாத நிலை ஆகிவிட்டது. அதே சமயம் விஷ்ணு யார்…? என்று இன்றும் கேள்விக் குறியையே எழுப்பிக் கொண்டுள்ளோம். இது அல்லாது
1.“சாமுண்டீஸ்வரி… அழகு நாச்சி… துர்கா தேவி…!” என்றும்
2.அதை அவரவர்கள் குணங்களுக்கொப்ப அரசன் அதைக் கடைபிடித்து
3.எங்கள் குலதெய்வம் இது தான் என்று மதங்களை வளர்த்து
4.அரசன் தன்னைப் பாதுகாக்கும் நிலைகளுக்குக் குலதெய்வமாக உருவாக்கிக் கொண்டான்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான்.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் வீற்றிருந்து ஒளி சுடர் வீசிக் கொண்டிருப்பது அந்தத் துருவ மகரிஷி.

1.துருவ மகரிஷி என்றாலும்
2.அவன் ஒளிச் சுடராகத் துருவ நட்சத்திரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்
3.மனிதனுக்கு அறிவின் ஞானத்தைப் புகட்டிக் கொண்டிருக்கின்றான்.

அவனின்று வெளிப்படும் உணர்வின் சத்துக்கள் அனைத்தும் நாரதன் என்றும்… அவன் கலகப் பிரியன் என்றும் பின் வந்த ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

நமக்குள் அறியாது வரும் தீமைகளை நீக்க நாரதன் என்ற அந்த அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்தால்
1.நமக்குள் இருக்கும் தீமைகள் அகன்று
2.மெய் ஒளியின் உணர்வுகளைக் காணும் நிலையை
3.நாம் அடைவோம் என்ற தத்துவத்தைத்தான் அன்று காட்டினார்கள்.

Leave a Reply