இருபத்தியேழு நட்சத்திரங்களின் “சூட்சம சக்தி…!”

27 நட்சத்திரம் 12 ராசி

இருபத்தியேழு நட்சத்திரங்களின் “சூட்சம சக்தி…!”

 

நம் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் தன்மைகள் தூசியாகவும் துகள்களாகவும் வரும் போது அதிலே ஒன்றுக்கொன்று எதிர்நிலையாகி மோதும் போது மின்னலாகப் பரவுகின்றது.

அதிலிருந்து வரும் துகள்களை துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளியின் உணர்வாக இன்றும் வளர்ந்து கொண்டு உள்ளது. 27 நட்சத்திரத்திலிருந்து வருவதைத் தான் அது உணவாக உட்கொள்ளுகின்றது.

நம் உயிரும் 27 நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டது தான். ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டது.

அதே போல் இருபத்தேழு நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் கலந்த நிலைக்கொப்பத்தான் நம் பூமியில் தாவர இனங்கள் விளைகின்றது.

தாவர இனங்களிலிருந்து விளைந்து வருவதை நாம் உணவாக உட்கொள்ளும் போது (தாவரத்தில் கலந்த நட்சத்திரத்தின் இயக்கம்) இயக்கச் சக்தியாகி உடலுக்குள் இது அணுத் தன்மை அடைந்து அதனுடைய மலத்தை உடலாக மாற்றித் தன் இனத்தைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

நாம் நுகர்ந்ததை நமது உயிர் அது ஜீவ அணுவாக மாற்றி அதன் உணர்வின் வரிசையில் அதக் கருவாக்கி அணுவாக்கி விடுகின்றது. அது அணுவாகி விட்டால் அதையே (தாவரத்தில் விளைந்ததை) உணவாக உட்கொள்ளும் நிலையாகின்றது.

எதிர் நிலையான நட்சத்திரங்களின் துடிப்பால் உயிர் எப்படி உருவானதோ இதைப் போல தான் ஒவ்வொரு தாவர இனங்களிலும் கலந்து கொண்ட நட்சத்திரத்தின் ஆற்றலும் நம் உடலுக்குள் வந்தபின் அந்தந்த அணுவின் தன்மை அடைகின்றது.

நம் உயிர் எவ்வாறு உருவாகின்றதோ அதே போல தான் அணுவின் தன்மை அடையப்படும்போது அதற்குள்ளும் உயிர் என்ற நிலை ஆகின்றது.

அப்பொழுது அந்த இயக்கத்திற்குப் பெயர் ஈசன் என்றும் இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் உருவாவதை லெட்சுமி என்றும் அதற்குள் இருக்கும் உணர்வுகளைக் குணங்கள் என்றும் அதனின் மணத்தின் உணர்வைப் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும் ஞானிகள் காரணப் பெயர் வைத்தார்கள்.

எதனின் உணர்வின் தன்மை கொண்டு அணுக்கள் உருப் பெற்றதோ அதன் ஞானத்தின் வழி கொண்டு தன் உணர்வைக் கவர்ந்து அதனின் இனத்தைப் பெருக்கும்.

ஆகவே பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்தோமென்றால் அதை உயிர் நமக்குள் உருவாக்கி இந்த உணர்வின் தன்மை கருவாக்கி வேதனை என்ற உணர்வாக நரகலோகமாக மாற்றுகின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால் நமது உயிரான ஈஸ்வரலோகத்தில் அது கருவாக உருப் பெறுகின்றது.

உடலுக்குள் சென்றபின் இந்திரலோகமாக மாறி அணுவின் தன்மையாகி அதனின் மலம் சிவலோகமாக (உடலாக) மாறினாலும் இருளை அகற்றிடும் தன்மையாக அது சொர்க்கலோகமாக (ஒளிச்சரீரம்) மாறுகின்றது.

1.அந்த அணுத் தன்மை வளர்ந்தால்
2.மின்னல்கள் பல வகையில் பரவினாலும்
3.அந்த மின்னலிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகளைச் சுவாசித்து
4.நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
5.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதை உணவாக்கிடல் வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதனை ஊழ்வினை என்ற வித்தாகப் பதியச் செய்கின்றோம். பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் நுகர்ந்தால்
1.பேரருள் என்ற நிலையைப் பெற முடியும்.
2.பேரருள் என்றால் எதனையுமே தனக்குள் இயக்கச் சக்தியாக மாற்றி
3.ஒளியாக மாற்றிடும் தன்மை பெற்றது.

மனிதனாக இருக்கும் போது துருவ மகரிஷி நஞ்சினை வென்று உணர்வினை எப்படி ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனானோ அந்த நிலையை நாமும் பெற முடியும்.

Leave a Reply