பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

 

நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலிருந்துதான் சுவாசிக்கின்றோம். எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ (பரமான இந்தப் பூமியில்) இந்தப் “பரமாத்மாவிலிருந்து தான்.., நம் ஆன்மா” எடுக்கின்றது.

அந்த அலைகள் நம் நெஞ்சுப் பகுதியின் அருகில் வருகின்றது. மூக்கின் துவாரங்கள் கீழ் நோக்கி இருப்பதால் அதைக் கவர்ந்து சுவாசத்திற்குள் செல்கின்றது.

மூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட உணர்வுகள் “கவன ஈர்ப்பு நரம்பு” கவரும் புருவ மத்தியில் உள்ள நம் “உயிரிலே” மோதுகின்றது.

உயிரிலே மோதியபின் “ஒ…ம்”…, வேதனைப்பட்ட உணர்வலைகளைச் சுவாசித்தால் வேதனையை நமக்குள் ஊட்டும் உணர்ச்சிகளை உயிர் ஊட்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நுகர்ந்து உடலுக்குள் சென்றபின் ஜீவான்மாவாக மாறுகின்றது. அதாவது உடலுக்குள் நுண்ணணுக்கள் விளைந்து வேதனைப்படும் அணுவாக ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது.

இப்படி எந்தெந்த குணங்களை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ அதையெல்லாம் உயிர் ஜீவ அணுக்களாக ஜீவான்மாவாக உடலாக நம் உயிர் விளைய வைக்கின்றது.

இந்த ஜீவான்மாவில் விளைந்ததைத்தான் “உயிரான்மா” எடுக்கின்றது. பாலிலிருந்து வெண்ணையைப் பிரிப்பது போல் நம் உடலுக்குள் விளைந்த சத்தை உயிர் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

உயிரான்மாவில் இருக்கும் சத்துக்கொப்பத்தான் நாம் அடுத்த உடல் பெறமுடியும்.

வெளியில் இருப்பது பரமாத்மா

எண்ணி எடுத்தால் ஆத்மா

உடலுக்குள் சென்றால் ஜீவாத்மா

உயிருடன் இணைந்துவிட்டால் உயிராத்மா

Leave a Reply