அனுமான் இலங்கையைத் தகனம் செய்தான் – வானரப்படைத் தலைவன் சுக்ரீவன்

அனுமான் இலங்கையைத் தகனம் செய்தான் – வானரப்படைத் தலைவன் சுக்ரீவன்

 

தீமைகளை நீக்குவதற்காக நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை வலுவான நிலைகள் கொண்டு எடுக்கும்போது நம் உணர்வின் தன்மை எப்படி ஆகின்றது?

(சீதா எண்ணிய) அந்த உணர்வின் தன்மை வரப்படும்போது

1.அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் கணவருக்குத் தூண்டப்பட்டு

2.அதைக் காக்கும் படைகலன்களாக வருகின்றது.

3.ஆகவே இதையெல்லாம் சேர்த்து “வானரப்படை”.

தான் எண்ணிய உணர்வுகள் வலுவாகி அந்த உணர்வின் தன்மை அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தனக்குள் “பாதுகாப்பு” என்ற உணர்வு வருகின்றது.

நமக்குள் அந்த நல்ல குணத்தைச் சேர்க்கச் சேர்க்க நம் ஆன்மாவில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் வானரப்படைகளாகச் சேர்க்கின்றது.

தீமைகளை நீக்கும் நிலையாக தனக்குள் அந்தப் பாதுகாக்கும் நிலைகள் கொண்டு அது போர் செய்து சீதாவை மீட்டும் தன்மை வருகின்றது.

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க

1.தீமைகளை நீக்கும் உணர்வுகள் அசுர உணர்வுடன் இங்கே மனதிலேயே போர் நடக்கின்றது.

2.உடலுக்குள் சென்றபின் அரக்க உணர்வுக்கும் அதற்கும் போர் நடக்கின்றது.

3.சீதா இருக்கும் அந்த நிலையில் இலங்கைக்குள் (உடலுக்குள்) பல உணர்வுகளின் தன்மை கொண்டு நெருப்பு வைத்து ஆஞ்சநேயர் கொளுத்துகின்றார்.

அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் சேர்கின்றது. தீமைகள் அகற்றப்படுகின்றது.

ஆகவே நம் உடலுக்குள் அந்தத் தீமையை நீக்கும் உணர்வைச் செலுத்தப்படும்போது அந்த சீதாவை – சந்தோஷத்தை நாம் மீட்ட முடியும்.

(உயிர் – விஷ்ணு; உயிரின் காந்தம் –  இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; உடலின் இச்சை – இராவணன்; சுவாசம்– அனுமான்; துருவ நட்சத்திரம் – சுக்ரீவன்)

 

Leave a Reply