தீவிரவாத உணர்வுகளை நம் மூச்சலைகளால் அகன்று செல்ல வைக்க முடியும்

Comets

தீவிரவாத உணர்வுகளை “நம் மூச்சலைகளால்..” அகன்று செல்ல வைக்க முடியும்

 

நம் பிரபஞ்சததில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றது.

அந்த உணர்வுகள் நம் பூமியிலே கலந்து கொண்டு இருக்கும்போது ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் சேரவில்லை என்றால் ஒதுக்கப்பட்டுச் சுழிக்காற்றுகள் வருகின்றது.

கடல்களிலும் இதே போன்றுதான் எதிர் நிலையான நட்சத்திர அலைகள் தாக்கப்படும் போது அது புயலாக மாறுகின்றது.

மனிதனான நமக்குள்ளும் அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருக்கப்பட்டுள்ளது. அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் இருந்தாலும்

1.எதிர் நிலையான நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றதோ

2.அதன் உணர்வு வழிப்படிதான் நம் உடலுக்குள் மற்ற உணர்வுகளை அடிமைப்படுத்துவதும்

3.அதன் நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் உண்டு.

அகண்ட பேரண்டத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று துணை கொண்டு ஓடி அது வாழ்ந்து கொண்டு சுழன்று கொண்டு இருக்கின்றது.

இருப்பினும் 2000 சூரியக் குடும்பங்களிலிருந்து வரக்கூடிய தூசி மண்டலங்கள் வால் நட்சத்திரமாக அது தனித்துத் தனித்து ஒதுங்கி இருக்கின்றது.

2000 சூரியக் குடும்பங்களுக்கும் நேர்ப்பாதையில் அத்தகைய தூசி மண்டலம் வரும் போது இதைக் கவர்ந்து மீண்டும் சூரியன் அந்தக் கொடிய விஷத் தன்மைகளை மாற்றிவிடுகின்றது.

சூரியனுக்குப் போகும் பாதையில் நமது பூமியின் ஈர்ப்பிற்குள் (வால் நட்சத்திரம்) வந்துவிட்டால்

1.பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இந்தத் தூசி மண்டலங்கள் மோதும் போது நெருப்பாகி

2.அதனின் விஷத் தன்மைகள் நம் பூமிக்குள் பரவுகின்றது.

3.எந்தப் பகுதியில் பரவுகின்றதோ அங்கெல்லாம் விஷத்தன்மை பரவுகின்றது.

4.தாவர இனங்களானாலும் மற்ற எதுவானாலும் விஷத்தன்மை பரவுகின்றது.

(இப்பொழுது பல வால் நட்சத்திரங்கள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது. பூமிக்குள்ளும் வந்து கொண்டிருக்கின்றது. பத்திரிக்கைகளிலும் டி.வி,யிலும் பார்ப்பீர்கள்)

இத்தகைய விஷத் தன்மைகள் பூமிக்குள் வந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் மனிதருக்குள் கொடூர அசுர உணர்வுகள் ஒவ்வொரு மனித உடலில் தீவிரவாதம் என்ற நிலையில் பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து தப்ப குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை அதிகமாகப் பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அருள் வட்டமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவான பின்

1.நாம் விடும் மூச்சலைகளால் இந்த விஷத் தன்மையான தீமையான உணர்வுகள்

2.அது ஒதுங்கி ஓடத் தொடங்கும்.

ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்து வெளிப்படும் நிலையில் ஒதுங்கிய அந்த விஷமான உணர்வுகள் மற்ற எதனின் ஈர்ப்பிற்கும் செல்லாதபடி சூரியனால் ஈர்க்கப்பட்டுவிடும்.

அவைகளைச் சூரியன் கவர்ந்து சென்று அந்த விஷத்தைப் பூராம் கருக்கி விடுகின்றது. எதிர் நிலையான உணர்வுகள் அனைத்தும் மாற்றப்படுவதை நாளடைவில் நீங்கள் இதை உணர முடியும்.

சூரியன் அந்த விஷத் தன்மைகளை எப்படிக் கவர்கின்றது..? எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைக் குருநாதர் என்னை எப்படிக் காண வைத்தாரோ அதைப் போல நீங்களும் பார்த்திட முடியும்.

அந்த நிகழ்ச்சிகளை உங்களிலே அறிந்திடவும் முடியும்.

Leave a Reply