தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு…!

meditation poses

தியானத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு…!

1.நமது எல்லை – சப்தரிஷி மண்டலம் அடைவதுதான்

காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கும் இவ்வேளையில் நாம் அனைவரும் நம் குருவின் அருளின் துணைகொண்டு மகரிஷிகளின் அருள்சக்தி துணைகொண்டு நமக்குள் அந்த உயர்ந்த ஞானத்தைப் பெறவேண்டும்.

இந்த உடலைவிட்டு நாம் எந்த நிமிடம் அகன்றாலும் நாம் சப்தரிஷிகளின் அருள்வட்டத்தில் இணைந்து என்றும் பிறவியில்லா நிலைபெறும் சக்தி பெறவேண்டும்.

1.நமது எல்லை அதுதான் என்ற நிலைகள் தெளிந்து
2.நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்வோம்.
3.குறைகள் வராதபடி நிறைவாக்குவோம்.

2.அருள் ஞான உபதேச நூல்களை அடிக்கடி படித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்

தியான வழியில் உள்ளோர் அனைவரும் தபோவனத்தில் வெளியிட்ட நூல்களை நாம் அடிக்கடி எடுத்துப் படித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

யாம் கொடுக்கும் இந்த நூல்களை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில்தான் இருக்கவேண்டும். படித்தபின் மீண்டும் பூஜை அறைக்கே சென்றிட வேண்டும்.

வெளியிட்ட நூல்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் அடிக்கடி நாம் படித்து, ஒரு பாரா அல்லது இரண்டு பாரா படித்துவிட்டுத் தியானத்திற்குச் செல்ல வேண்டும்.

அதை நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலையும், கேட்கும் நிலையும் அவர்களுக்குள் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை நாம் ஊட்டப் பழக வேண்டும்.

இதை எல்லாம் நீங்கள் பெறுவதற்காக உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்கள் உடலைச் சிவனாக மதித்து இந்த உடலுக்குள் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று தியானிக்கச் சொல்லுகின்றோம்.

அவ்வழியே தியானிக்கும்போது குரு காட்டிய அருள் வழியில் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் போரொளியும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

3.ஒற்றுமையை வளர்த்திடக் கூட்டுத் தியானங்கள் அமைத்திடல் வேண்டும்

தியானவழி அன்பர்கள் அடிக்கடி கூட்டுத் தியானங்கள் அமைத்திட வேண்டும். அந்தந்தக் குடும்பங்களில் இரண்டு பேர் சேர்த்தால் போதும். தியானம் செய்து குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பழகுதல் வேண்டும்..

இந்த மாதிரி ஒற்றுமையை வளர்ப்பதற்கு குடும்பங்களில் தெளிவான நிலை வருவதற்கு இதைப் போன்று அவசியம் கூட்டுத் தியானங்கள் செய்ய வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடுமபத்திலும் எடுத்துக் காட்டாக இந்த தியானத்தைக் கடைப்பிடித்து உங்கள் அருகில் உள்ளவர்களையும் அந்த உயர்வடையச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

4.உலகில் நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டவுடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

உலக நிலைகளிலே இன்று எடுத்துக் கொண்டால் வேதனை, வெறுப்பு பயம் என்ற நிலைகள் அதிகமாக இன்று மனித உடலில் உருப்பெற்று வெளிப்படுகின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் பயம் இல்லாது எவரும் இல்லை. ஆகவே ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உலகில் நடக்கும் மதம், இனம், மொழி என்ற நிலைகளில் கடும் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் உலகம் முழுவதும் பரவி உள்ளது.

ஒவ்வொரு மனித உடலிலும் வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்திருப்பதும் T.V மூலமாகவும், பத்திரிகைகளில் படிக்கும் போதும் நாம் அறிய நேர்கின்றது.

1.உலகில் ஒவ்வொரு இடத்தில் நடக்கும் விபத்துக்களும் விபரீதச் செயல்களும்,
2.திருட்டு கொலை சம்பத்தப்பட்ட செய்திகளைப் பார்க்கும் பொழுதும், படிக்கும் பொழுதும்
3.மன அதிர்ச்சியும் பயமூட்டும் உணர்வுகளும் நமக்குள் அதிகமாகப் பதிவாக்கி விடுகின்றது.

பயத்தின் உணர்வுகள் அதிகரித்துவிட்டால் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது. சிந்திக்கும் திறன் இழந்தால் ஆத்திரத்தில் நம்மை அறியாது கடும் பிழைகளைச் செய்யும் நிலைகளும் நமக்குள் உருவாகிவிடுகின்றது.

இதைப்போன்ற விபரீத நிலைகளில் இருந்து நாம் மீளவேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் ஆத்மசுத்தி செய்து ஒரு பத்து நிமிடமாவது நமக்குள் செயல்படுத்திடல் வேண்டும்.

5.குறை காணுவதற்குப் பதில் அதை நிவர்த்திக்கும் செயலாக அமைதல் வேண்டும்

இதேபோன்று குறை என்பது அவ்வப்பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிகழ்ச்சி.

தொழில் செய்வோம் என்றால் நாம் ஒன்றைச் செய்து கொண்டு இருப்போம். அடுத்த கணம் இன்னொரு பக்கம் குறை உருவாகும்.

அந்தக் குறை உருவாவதைத் தெரிந்து கொண்டால், உடனே ஆத்ம சுத்தி செய்து அந்தக் குறைகளை நிவர்த்திக்கும் நிலையில் நமது செயலாக்கங்கள் அனைத்தும் அமைதல் வேண்டும்.

குறைகள் எப்பொழுது எவ்வழியில் வர நேர்ந்தாலும் மற்றவர்களின் குறையைச் சுட்டிக் காட்டுவதற்கு மாறாக மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று நாம் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு,
1.மகரிஷிகளின் அருள்சக்தி அவர்கள் பெறவேண்டும்.
2.மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
3.குரு காட்டிய அருள் வழியில் அவர்கள் வளரவேண்டும்.
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும்.
5.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற்று அனைவருக்கும் நற்போதனை கொடுக்கும் நிலைகள் அவர்களில் உருவாக வேண்டும்.
6.அன்பும் பண்பும் பரிவும் பெறும் அந்த அருள்சக்தி அவரில் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இவ்வாறு நாம் அனைவரும் அவ்வழியில் வழி தொடர வேண்டும். பெண்கள் இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பல கோடிகளில் பலவிதமான நிலைகளில் இருப்பினும் குறைகள் காணும்போது நாம் ஆத்மசுத்தி செய்து ஒரு பத்து நிமிடமாவது அதன் நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.

6.குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்றுபட்டு வாழ வேண்டும்

அனைவருடைய குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்தல் வேண்டும். கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து, நாளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ வேண்டும்.

சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு தெளிந்த மனதுடனும் மகிழ்ந்திடும் உணர்வுடனும் வாழ்ந்து அருள்ஞான சக்தி பெற்று தீமையை அடக்கிடும் அருள் ஒளி பெற்று மெய்ப்பொருள் கண்டிடும் அந்த அருள்ஞானம் வளர வேண்டும்.

நம் ஊரில் உள்ளோர் அனைவரும் அதைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். சதா இதை நமக்குள் தியானமாக்க வேண்டும்.

7.குழந்தைகள் அனைவரையும் அருள் ஞானிகளாக வளர்க்க வேண்டும்

நம் குழந்தைகளுக்கும் இதைப் போல மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். அவர்கள் அருள்ஞானம் பெறவேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று அருள் உணர்வுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லி நாம் தியானிக்க வேண்டும்.

குழந்தைகள் உலக ஞானம் பெறவேண்டும். உலகைக் காத்திடும் அருள்ஞானக் குழந்தையாக அவர்கள் உரு பெறவேண்டும். வளர வேண்டும் வளர்ச்சி பெறவேண்டும்.

நம் நாட்டின் பண்புகளைத் தெளிவாக ஞானிகளின் அருள்சக்திகளை எடுத்து அடுத்தவருக்குப் போதிக்கும் நிலை நம் குழந்தைகள் பெறவேண்டும்.

அவர்கள் வெளிப்படுத்தும் சொல் மற்றவரைப் பிணிகளிலிருந்தும், தீமைகளிலிருந்தும் அவர்கள் வறுமையிலிருந்தும் நீக்கிடும் அந்த வலிமை பெறவேண்டும்.

கேட்போர் உணர்வுகள் வலிமை பெற்றுத் தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை ஏற்படுத்தும் நிலை பெறவேண்டும்.

8.கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் வளரும் சிசுக்களுக்கு அகஸ்தியன் அருளைப் பெறச் செய்ய வேண்டும்

அதே போல பெண்கள் கர்ப்பமாக இருந்தால் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து அந்தக் கருவில் வளரும் குழந்தை மகரிஷிகளின் அருள்சக்தியைப் பெறவேண்டும் அருள் ஞான சக்தி பெற வேண்டும்.

1.அகஸ்தியன் பெற்றது போன்று நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற்று,
2.அருள் வழியின் உணர்வைத் தனக்குள் வளர்க்கும் ஆற்றல் பெற்று,
3.உலக இருளை நீக்கிவிட்டு அருள் ஒளிபெறும் தகுதியை கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும்.
4.வானுலக ஆற்றல் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறவேண்டும்.
5.உலக மக்களை இணைத்திடும் அருள்ஞானம் அந்தக் கருவிலே விளைய வேண்டும்.
6.உலகில் நன்மைகள் செய்விக்கும் அகஸ்தியனின் அருள் உணர்வுகள் கருவிலே உருபெற வேண்டும்.
7.உலகைக் காத்திடும் அருள்ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்று

கூட்டுத் தியானங்களில் இதை முறைப்படுத்தி அந்தக் கருவில் வளரும் குழந்தைகளுக்கு நாம் அடிக்கடி இதைச் சொல்லித் தியானமிருக்க வேண்டும்.

கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு நாம் தபோவன நூல்களைப் படித்துக் காட்டிக் கருவில் இருக்கும் அந்தக் குழந்தை அருள் மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் நீங்கள் சொல்லிவிட்டு அடுத்து தியானத்தை நாம் வழிநடத்தும் முறை வரவேண்டும்.

இதைப் பார்த்தபின் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் இதைப் போன்று நாமும் வழிப்படுத்த வேன்டும் என்ற நிலைகளில் அவர்களுக்கும் இந்த உணர்வுகளை ஊட்டுதல் வேண்டும்.

9.மற்றவர்களுக்கு வழி காட்டும் அளவிற்கு நாம் வளர வேண்டும்

தியானவழி அன்பர்கள் என்று நம்மை எடுத்துக் கொண்டால், எல்லாரும் போற்றும் நிலைகளுக்கு,
1,நம்மைப் பார்த்தாலே எப்பொழுதும் மற்றவர்களுக்கு,
2.அவர்களுக்கு நல்வழி காட்டும் நிலை அடைந்திடல் வேண்டும்.
3.ஒருவருகொருவர் அந்தத் தெய்வீகப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4.நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அந்த அளவிற்கு நாம் வளர்ந்தால்தான் அது வரும். அதனால் அதை நீங்கள் பெறுவீர்கள் என்று நினனைக்கிறேன். அதைப் பெறவேண்டும் என்று தியானிக்கிறேன் பெறவேண்டும் என்று தவம் இருக்கிறேன்.

அதை நீங்கள் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். இதை எடுத்துக்காட்டாக வளரவேண்டும். அதை நான் சொல்வதற்குப் பதில்
1.அந்த உயர்வை நீங்கள் உயர்த்திக் காட்டி
2.செயலிலே நீங்கள் வரவேண்டும் பிரார்த்திக்கின்றேன்.

அன்பர்கள் அனைவரும் குரு காட்டிய அருள்வழியைக் கடைப்பிடித்து உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்றி, அனைவரும் அறிந்திடும் நிலையாக அருள் ஞான சக்தி போதித்து, உலக மக்களைத் தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ வைக்கும் அந்தத் திறன் அனைவரும் பெறுதல்வேண்டும்.

நாம் அனைவரும் மாமகரிஷிகளின் அருள்சக்தியை நமக்குள் வளர்த்து நம் தொழிலும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மிடம் தொழில் செய்பவர்கள் அதாவது நம்மிடம் வாடிக்கையாளராக வரும் போது அவர்களுக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வருகிறது.

அப்படி நன்மை ஏற்படும் பொழுது, நம் தொழிலும் சீரடையும்.

10.உங்கள் பார்வையால், சொல்லால், பிறருடைய தீமைகள், நோய்கள் அகல வேண்டும்

உங்கள் பார்வையில் இந்தத் தியானத்தின் பலனால் மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று உங்கள் பார்வையில் “எவரேனும்.., கெட்டது என்று சொன்னாலும்” அடுத்த கணம் நீங்கள் சிறிது நேரம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் நோய் நீங்கி உடல் நலம் பெற்று, அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

எத்தகைய நோய்கள் இருப்பினும் கேட்டறிந்தால் அடுத்து ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் நோய் நீங்கி அருள்ஞான வழியில் அவர்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும் அவர்கள் குடும்பங்கள் மகிழ்ச்சி பெறவேண்டும் என்று எண்ணி அவர்கள் உடல் நலம் பெற
1.நாம் எடுத்த தியானத்தின் பலனால்,
2.நம் சொல்வாக்கின் தன்மை அவருக்குள் பதிவாகி
3.கடும் நோய்களையும் நீக்கும் பலன் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

இதைப் போல அந்த அருள் சக்தியை வளர்த்துப் பேரின்பத்தை ஊட்டும் நிலைகளை உருவாக்க வேண்டும்.

எந்த நிலையிலும் நாம் அனைவரும் அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று யாருக்காவது நோய் வந்தாலும் அதை நீக்க நீங்கள் முற்பட வேண்டும்.

கூட்டுத்தியானமிருந்து மகரிஷிகளின் அருள்சக்தி அவர் உடலிலே படரவேண்டும். அவர் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும். அவர் நோய் நீங்கி நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று நாம் அவர்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லி வழி நடத்துதல் வேண்டும்.

1.அவர்கள் நலம் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
2.நமக்குள்ளும் நலம் பெறும் அணுக்கள் உருவாகின்றது.
3.இந்தச் சொல்லின் தன்மை வெளிப்படும்போது கேட்போர் உணர்விலேயும் நலம் பெறும் சக்தியாக உருப்பெறச் செய்யவும் முடிகின்றது.

இந்தப் பழக்கத்தை நாம் பழக முயல வேண்டும்.

11.விஞ்ஞான அழிவிலிருந்து உலக மக்களைக் காக்கும் நிலையைச் செயல்படுத்த வேண்டும்

இதைப்போல உலகில் மதம் இனம் என்ற அன்னியத் துடிப்பிலிருந்து மக்களை விடுபடச் செய்து அருள் வழித் தொடராக அவர்கள் வாழ்வில் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று
1.நாளை விஞ்ஞான உலகில் வரும் அழிவில் இருந்து
2.அவர்கள் மீளூம் மார்க்கத்தையும் நாம் உபதேசித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நேரத்திலேயும் நீங்கள் சொல்ல முடியவில்லை என்றாலும் இந்த உபதேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதைப் படித்து வாசித்துக் காட்டுங்கள். திரும்பத் திரும்பப் படித்துக் காட்டினால் நமக்குள்ளும் பதிவாகின்றது.

அந்த அருள் உணர்வை நாம் எண்ணிய உணர்வை நம் உயிர் அந்த அருள் சக்தியாக அணுக்களாக நமக்குள் மாற்றுகின்றது. நினைவாற்றலைப் பெருக்குகின்றது.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ வழி வகுக்கும் அந்தத் தகுதியை நமக்குள் அது பெறச் செய்கின்றது.

spiritual-meditation1

Leave a Reply