“ஒரே எரிச்சலாக இருக்கின்றது…!” என்கிறோம் – எரிச்சலை நீக்கும் வழிமுறை

“ஒரே எரிச்சலாக இருக்கின்றது…!” என்கிறோம் – எரிச்சலை நீக்கும் வழிமுறை

 

நினைத்தவுடன் நமக்குக் கோப உணர்வு வருகிறது. கடுமையான நிலைகளும் வருகின்றது. அதைக் குறைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. அதிலே நல்ல தண்ணீரை ஊற்றினால் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அழுக்கின் நிலை மாறத் தொடங்கும்.

அதே போல நம்முடைய முந்தைய வாழ்க்கையின் நிலையில் நாம் சேர்த்துக் கொண்ட அழுக்குகள் உடலுக்குள்ளும் நம் ஆன்மாவிலும் நிறைய இருக்கிறது.

அவையெலாம் நாம் அறியாமல் சேர்த்தவை.

நாம் உண்ணும் உணவில் தனித்துக் காரத்தைச் சாப்பிடும் பொழுது “ஆ…” என்று அலறுகின்றோம். வாய் வயிறு எல்லாம் எரிச்சலாகின்றது.

அதே போல் நாம் எடுத்துக் கொள்ளும் கோபமான உணர்வுகள் உயிரான ஈசனிடம் படும் பொழுது அந்த அணு சிசுக்களில் பட்டவுடன் ஆத்திரமான அலைகள் வீசத் தொடங்குகின்றது.

அப்பொழுது நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையும் “ஆ…” என்று அலறச் செய்கின்றது.

1.அந்த அலைகள் உடலுக்குள் பட்டவுடன் எரிகின்றது
2.நம் எண்ணங்கள் மாறி எரிச்சலுடன் பேசச் சொல்கின்றது
3.நம் பார்வையும் எரிச்சலுடன் பார்க்கச் செய்கின்றது
4.நாம் செயல்கள் அனைத்தையும் தடைப்படுத்தச் செய்கின்றது.

உதாரணமாக ஒரு நச்சுத் தன்மை கொண்ட புகையை எழுப்பியபின் அது படர்ந்து காற்றிலே கலந்து பூமிக்குள் படர்கின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது புகையின் உணர்வு பிராணவாயுவுடன் கலந்து உடலுக்குள் ஊடுருவி காந்தத்துடன் இணைந்து உடல் முழுவதற்கும் இயக்கச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்று தான் நல்ல குணங்களுடன் இருந்தாலும் எரிச்சலூட்டும் செயல்களை நாம் பார்த்தவுடன்
1.எண்ணத்திலே எரிச்சல்
2.செயலிலே எரிச்சல்
3,சுவாசத்திலே எரிச்சல்
4.கண்ணின் பார்வையிலே எரிச்சலாகின்றது.

இந்த எரிச்சலான உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலுக்குள் சென்று நம் ஆகாரத்துடன் நஞ்சாகக் கலந்து உறுப்புகளுக்குள் தேங்கி நம் உடலை அதனின் இருப்பிடமாக்கித் தன் இனத்தை வளர்க்கத் தொடங்கி விடுகின்றது.

நல்ல குணங்களை நம்மைச்  சிந்திக்க விடாதபடி தடைப்படுத்திக் கொன்டே இருக்கின்றது. உடலில் நோய் வரக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைப்பதற்குத் தான் உங்கள் அனைவரது உள்ளங்களிலும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படர்ந்து உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படரவேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் மணங்கள் உமிநீராக மாறி
2.நல்ல அணுக்களாக உருவாகின்றது.
3.உடலில் உருவான நஞ்சான அணுக்களின் வீரியத்தை அடக்கி
4.அதைச் செயலற்றதாக ஆக்குகின்றது.
5.மகிழ்ச்சியான ஏற்படுகின்றது உடல் நலம் மன பலம் பெறுகின்றோம்.

அப்பொழுது நாம் சந்திக்கும் அனைவரது நிலைகளிலும் நாம் எடுக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் படர்கின்றது. நாம் கலந்து உறவாடும் அனைவருமே நம்மால் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

அவர்களிடம் மற்ற குறைகள் இருந்தாலும்
1.அந்தக் குறைகள் நீங்கி நிவர்த்தியாக வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது
2.நம்முடைய சொல்லாலும் மூச்சாலும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது
3.எல்லோரும் நலம் பெறும் சந்தர்ப்பமாகின்றது.

அதனால் தான் மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று அடிக்கடி நினைவை மகரிஷிகளின் பால் செலுத்தும்படி சொல்கின்றோம்.

Leave a Reply