அகஸ்தியன் வெளிப்படுத்திய மூச்சலைகளைக் கவர்ந்து அகண்ட அண்டத்தை நீங்களும் அறியுங்கள்

Lightning special

“அகஸ்தியன் வெளிப்படுத்திய மூச்சலைகளைக் கவர்ந்து…” அகண்ட அண்டத்தை நீங்களும் அறியுங்கள்

 

இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது அந்த இயல்பால் மின் கதிர்களை அது விலக்கிச் செல்லும் உணர்வுகளைக்

1.சில தாவர இனங்கள் கவர்ந்து கொள்கின்றது,

2.இத்தகைய உணர்வுகள் விளைந்த செடிகளின் விழுதுகளைக் கையில் வைத்துக்கொண்டால்

3.மின்னலின் ஆக்கங்கள் அது நம்மைத் தாக்காது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் தாய் தந்தையர் அத்தகைய செடிகளை அறிந்திருந்தார்கள்.

அகஸ்தியன் கருவில் இருக்கும் பொழுது அந்தத் தாய் அந்த மின்னலைத் தணிக்கும் அத்தகைய விழுதுகளின் மணங்களை நுகர்ந்தது. கர்ப்பிணி அதை நுகரப்படும் போது கருவிலிருக்கும் சிசுவுக்கும் (அகஸ்தியன்) அந்த விழுதுகளின் மணங்கள் இரத்தத்தின் வழி கிடைக்கின்றது.

1.மின்னல் பாயும் பொழுது

2.மின் கதிர்கள் எவ்வளவு தூரம் செல்லுகின்றதோ…

3.அந்த ஆற்றல்களைக் கருவிலிருக்கும் சிசு (அகஸ்தியன்) பெறுகின்றது.

1.ஒவ்வொரு தாவர இனங்களின் இயல்புகளையும்

2.வானஇயல் இயல்புகளையும் பூமி உருவான நிலையும்

3.பூமி உருவாவதற்கு முன் சூரியன் எப்படி உருவானது என்ற நிலையும்

4.வான்வீதி முதலில் எப்படி இருந்தது என்ற நிலையும்

5.கண்டறியக்கூடிய சக்தி அகஸ்தியன் பெற்றதற்குக் காரணமே

6.அவருடைய மூதாதையர் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும்

7.தாய்  கருவிலேயே அவன் பெற்று வளர்ந்தது தான்.

அகஸ்தியனால் காட்டப்பட்ட உண்மையால் தான் மற்ற சூரியக் குடும்பங்களைப் பற்றியும் நம்முடைய சூரிய குடும்பத்தைப் பற்றியும்  இப்படி “எத்தனையோ வகையான எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் இருக்கின்றது…!’ என்று விஞ்ஞான அறிவில் இன்று கண்டு கொண்டுள்ளார்கள்.

அந்த மெய்ஞானியான அகஸ்தியன் ஓர் சூரியன் உருவானதும் அந்த சூரியக் குடும்பத்திற்குள் 27 நட்சத்திரம் உருவானதையும் கண்டுணர்ந்தான்.

அதே சமயத்தில் அந்த 27 நட்சத்திரங்களும் ஒரு காலம் சூரியனாக மாறுகின்றது. அப்பொழுது முதலில் உருவான சூரியன் செயல் இழக்கின்றது என்பதையும் அகஸ்தியன் கண்டுணர்ந்தான்.

ஏனென்றால் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலத்தின் சக்திகளைக் கவரும் பொழுது தான் சூரியனும் சீராக இயங்க முடியும். பிற மண்டலங்களிலிருந்து வரவில்லை என்றால் சூரியனுக்கு உணவில்லை… மடிந்துவிடும்.

1.ஆக சூரியனுக்கு உபகாரமாக இருக்கும் 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறுவதையும்

2.இதைப் போல பல பல சூரிய பிரபஞ்சங்களாக எப்படி மாறி வந்தது என்ற நிலையையும்

3.அகஸ்தியன் தெளிவாகக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தி இருக்கின்றான்.

4.அவன் வெளிவிட்ட அந்த மூச்சலைகளை நீங்களும் நுகரமுடியும்.

அவனில் விளைந்த உணர்வுகள் ஒளியின் உடலாகத் துருவ நட்சத்திரமாக இன்று இருக்கின்றான். அவன் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலிருக்கும் பொழுது பெற்ற உணர்வுகளும் நம் பூமியில் பரவிக் கிடக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் இதைப் பதிவாக்கி அந்த அகஸ்தியன் மூச்சலைகளைக் கவரும் சந்தர்ப்பத்தை உருவாக்கினார்.

குருநாதர் எனக்குப் பதிவாக்கிய அதே உணர்வுப்படி தான் உங்களுக்கும் பதிவாக்கிக் கொண்டுள்ளேன். உங்கள் சந்தர்ப்பத்தால் அதை நீங்கள் கவரும் தகுதி பெறுகின்றீர்கள். அண்டத்தை அறியும் ஆற்றலும் பகைமை உணர்வுகளை அகற்றும் சக்தியும் நீங்கள் பெறுவீர்கள்.

இந்தக் காற்று மண்டலத்தில் பகைமையான உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கும் தீமைகளை அகற்றும் சக்தியும் நீங்களும் பெற வேண்டும்.

1.நான் ஒருவன் கண்டேன் என்றால் அது பத்தாது.

2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது.

3.நீங்கள் எல்லோரும் செயல்படுத்த வேண்டும்.

ஆகவே அந்த அகஸ்தியனின் அருள் சக்திகளை நீங்கள் உங்களுக்குள் பெருக்கிக் கொண்டால் இனி வரும் அசுர உணர்வுகளில்
இருந்து உங்களை மீட்டுக் கொள்ள முடியும்.

இந்த பூமியில் உள்ள விஷத் தன்மைகளை அகற்றும் அருள் ஞானிகளாக நீங்கள் வளர முடியும்.

Leave a Reply