திருஞான சம்பந்தர் இளம் வயதில் அறிவின் ஞானம் எப்படிப் பெற்றார்?

thirugnana sambandhar thevaaram

திருஞான சம்பந்தர் இளம் வயதில் அறிவின் ஞானம் எப்படிப் பெற்றார்?

 

திருஞான சம்பந்தர் பல அற்புதச் செயல்கள் செய்தார் என்று காவியங்களிலே உண்டு. அவருக்கு அந்த ஆற்றல் எப்படிக் கிடைத்தது?

 

அவருடைய தாய் வெகு நாட்களாகத் தனக்குள் குழந்தை இல்லை என்று ஏங்கியது. அந்த ஏக்கத்தின் பால் சீர்காழி என்ற ஊரில் சிவன் ஆலயத்தில் தாய் ஏங்கி எடுத்த உணர்வே குழந்தை உருவாகக் காரணமாக அமைந்தது.

 

கடல் அருகில் இருப்பதனால் கடல்களில் இருந்து அலைகள் வரும் போது பொங்கி எழும்போது அதிலே சிவனும் பார்வதியும் படகில் வந்து காப்பாற்றினார்கள் என்ற தத்துவங்களை ஸ்தல புராணங்களாக எழுதி வைத்திருக்கின்றனர் அன்றைய அரசர்கள்.

 

ஸ்தல புராணங்களையும் அதற்குண்டான காவியங்களைத் தீட்டி அந்த (அரசர்களால் காட்டப்பட்ட) உண்மையை மக்களுக்கு உபதேசிப்பதற்குப் பல யாக வேள்விகளில் உயிர்களை இணைத்து அந்த உயிரிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தனக்குள் கவர்ந்து மந்திர ஒலிகளை எழுப்பி பல அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் பண்டைய கால அரசர்கள்.

 

அதிலே சீர்காழி என்ற ஊர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

 

அந்த இடத்தில் தான் “தனக்குக் குழந்தை இல்லை” என்ற நிலைகளில் வரம் வேண்டி அந்தச் சிவன் ஆலயங்களுக்குத் தினம் சென்று வருவதும் அங்கே அற்புதக் காட்சிகளைக் கேட்டறிகின்றது அந்தத் தாய்.

 

“இவ்வளவு அற்புதம் செய்தவன்…” எனக்கு ஏன் குழந்தை கொடுக்கக் கூடாது..! என்ற நிலைகளில் சிவனை எண்ணி ஏங்கி இந்த உணர்வின் ஆற்றல்களைத் தன்னுடைய எண்ணத்தால் வளர்த்துக் கொண்டது.

 

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அந்தக் காவிய படைப்பின் பிரகாரம் தங்கள் எண்ணத்தை ஓங்கித் தனக்குள் வளர்க்கச் செய்தார்கள். அங்கே அந்தத் தாய் கருவுருகின்றது.

 

பக்தியின் நிலைகள் கொண்டு அங்கே விநாயகனை முதலில் வணங்குகின்றது அந்தத் தாய்.

 

பின் ஆலயத்திற்குள் சென்று அந்த சிவ தத்துவத்தின் காவியத்தைக் கவிகள் பாடியதைத் தான் படித்துணர்ந்த உணர்வை நினைவு கொண்டு உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மைகள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றது.

 

கருவுற்ற நிலைகளில் விநாயகரை எண்ணும் பொழுது சிவனுக்கு முந்தியவனாக நின்று நீ எல்லாவற்றிலும் முதன்மையாக ஜீவனாக இருந்து இயக்குகின்றாய்…! என்ற அந்தக் காவியத் தத்துவப்படி அந்தத் தாய் விநாயகரை எண்ணிப் பார்க்கின்றது.

 

ஆனால் காவியத்தில் உள்ள மூலம் என்ன என்ற உண்மை தெரியாது.

 

இருப்பினும் காவியப் படைப்பைப் படித்ததன் நினைவு கொண்டு

1.நீ சிவனுக்கு முந்தியவனாக இருக்கின்றாய்.

2.நீ எல்லாவற்றுக்கும் ஜீவன் கொடுப்பவனாக இருக்கின்றாய்.

3.அதே போல என்னுடைய குழந்தைக்கும் கருவிலேயே ஜீவன் கொடுத்தாய்.

4.என் குழந்தை அவன் உன்னுடைய ஞானத்தை அங்கே வளர்க்க வேண்டும் என்று விநாயகரைப் பார்த்து

5.கருவுற்ற அந்தத் தாய் ஏங்கி இந்த உணர்வைச் செலுத்துகின்றார்.

 

ஒவ்வொரு நாளும் இதைப் போன்ற உணர்வின் சக்திகளைத் தனக்குள் சேர்த்துச் சேர்த்து எதையெல்லாம் காவியப் படைப்பில் உயர்ந்த நிலைகள் உணர்த்தினரோ அவையெல்லாம் இந்தத் தாயும் தந்தையும் உற்று நோக்குகின்றார்கள்.

 

அதையே விரதமாக வைத்து வேண்டுகின்றார்கள்.

1.அருள் ஞானக் குழந்தையாக வளரவேண்டும்.

2.சிவனுடைய புத்திரனாக எனக்குள் வளர வேண்டும்.

3.எவர் ஒருவர் எனக்கு இந்த அருள் கொடுத்தனரோ

4.அந்த ஈசனும் சிவனும் இது முன் நின்று வழி நடத்தி

5.அந்த விநாயகனின் தத்துவங்களை எனக்குள் நின்று

6.அந்த அருள் ஞானத்தைப் பொழிந்திட வேண்டும்.

என்னுடைய கருவில் வளரும் ஜீவனுக்கு எனக்குள் வளரும் அந்தச் சிசுவிற்கு உங்கள் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று அந்தப் பத்து மாத காலமும் கடுமையாக ஏங்கி அதையே தியானித்தது அந்தத் தாய்.

 

இவ்வாறு விநாயகரையும் சிவனையும் பார்வதியையும் எண்ணி

1.அதையே தனக்குள் உணவாக எடுத்து கொண்டு

2.அதையே ஞானப்பாலாகக் கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்தத் தாய் ஊட்டியதால்

3.அதன் வழியில் பிறந்த குழந்தையால் அதன் பின் பல அற்புதங்கள் நடந்தது.

 

நஞ்சு தீண்டிய ஒருவனை மந்திரத்தால் நஞ்சை நீக்குகின்றனர். இந்த அற்புதத்தையெல்லாம் அந்த ஆலயத்தில் செய்து காட்டுகின்றார்கள்.

 

இதை உற்றுப் பார்த்த இந்தத் தாய் இதே போல நஞ்சை உட்கொண்டோரையோ அல்லது நஞ்சு தீண்டியவர்களையோ என் குழந்தை பார்க்குமேயென்றால் அவன் பார்வையால் அந்த நஞ்சுகள் நீங்க வேண்டும் என்று ஏங்குகின்றது.

 

இந்தச் சிவனால் கொடுக்கப்பட்ட இந்த விநாயகனால் கொடுக்கப்பட்ட என் குழந்தைக்கு அவர்களாக் உருவாக்கப்பட்ட இந்தக் குழந்தைக்கு அந்த அற்புத நிலைகளெல்லாம் செய்யக்கூடிய ஞானப்பால் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்தது.

 

அந்த உணர்வின் தன்மை கொண்டே குழந்தை பிறக்கின்றது. பிறந்த பின் முதலில் அந்தச் சிசுவை ஆலயத்திற்குள் தரிசனைத்திற்காகக் கொண்டு வருகின்றார்கள்.

 

அப்படிக் கொண்டு வரப்படும் போதே எந்த விநாயகனைப் பார்த்துத் தாய் ஏங்கி எடுத்ததோ அதைப் பார்த்ததும் ஏற்கனவே பார்த்துப் பழகியது போல் விநாயகரிடம் அது தவழ்ந்து சென்று சிரிக்கின்றது.

 

அதே போலச் சிவனை பார்க்கப்படும் போதும் அதனுடைய துடிப்பின் நிலைகள் தவழ்ந்து அங்கே சிவனிடம் அணுகிச் செல்கின்றது.

 

ஏனென்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பம் அது

1.அந்தத் தாய் தன் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கடவுளாக நின்று

2.இந்த உணர்வின் செயலாக உடலில் இயக்கி அந்த உணர்வின் ஆற்றல்கள்

3.கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

 

அதுவே கடவுளாக நின்று தாய் எடுத்துக் கொண்ட உணர்வின் ஞானமே கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

 

அதனின் வழி தொடர் கொண்டுதான் சிறு குழந்தையாக இருந்தாலும் அவனை அறியாமல் ஞானத்தைப் பேசும் திறன் அவனுக்குள் வருகின்றது.

 

அந்தக் குழந்தை தன் வயதுக்கு மிஞ்சிய செயலாக

1.அவர் பேசும் பேச்சினுடைய திறமை கண்டு

2.அவரைக் “கடவுளின் பிள்ளை” என்ற நிலைகளில்

3.திருஞான சம்பந்தர் என்ற நிலையில் பெயரை இடுகின்றார்கள்.

Leave a Reply