குழந்தைகள் “மாறு கண்ணுடன்” பிறப்பது… பிறந்த பின் வீட்டிலே “சண்டையும் சச்சரவும்” வருவது… தொழிலில் “மந்தம்” ஏற்படுவது… இதற்கெல்லாம் காரணம் என்ன…?

Mother and child care

குழந்தைகள் “மாறு கண்ணுடன்” பிறப்பது… பிறந்த பின் வீட்டிலே “சண்டையும் சச்சரவும்” வருவது… தொழிலில் “மந்தம்” ஏற்படுவது… இதற்கெல்லாம் காரணம் என்ன…? 

ரோட்டிலே இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கடுமையாகப் பேசுகின்றார்கள்.

இந்த மாதிரிச் சாபவிடுவதைக் கர்ப்பமான தாய் மூன்று மாதத்திற்குள்ளே பார்த்து விட்டார்கள் என்றால் பார்த்த உணர்வுகள் கருவிலே ஆழமாகப் பதிந்து விடும்.

மூன்று மாதங்களுக்கு மேலே போனால் உருவமாகிவிடும்.

ஆனால் கருவுற்றது உரு பெறும் நிலைகளாக இந்த மூன்று மாதங்களுக்குள் இது பதிவு செய்து கொள்ளும்.

இந்த மூன்று மாதத்திற்குள் எதையெல்லாம் அந்தத் தாய் கூர்மையாகப் பதிவாக்குகின்றதோ அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடும்.

இன்று புதிதாக ஒரு செடியை எப்படி உருவாக்குகின்றார்கள்?

1.ஒரு செடியின் வித்துக்களை வைத்து முளை வரும் போது
2.மற்ற செடியோட இரண்டறச் சேர்த்து இழுக்க வைத்து
3.ஒரு புதிய செடியாக – இரண்டு செடியின் சத்தும் சேர்ந்ததாக உருவாக்குகின்றார்கள்.

இதே மாதிரி ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் போதும்.

அந்தச் சாப வினைகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு என்ன செய்கின்றது என்று சொன்னால்
1.தாய் கண்ணுற்றுப் பார்க்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நுகருகின்றது.

சாபமிடுபவர்களைப் பார்த்து “இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அந்தத் தாய் தனக்குத் தெரிந்த நியாயத்திற்குப் பேசுகிறது. ஆனால் நல்ல குணங்களுக்கு இது எதிர் மாறானது.

அப்போது அதைப் பார்த்தவுடனே தாய் என்ன செய்கிறது?

இப்படிப் பேசுகிறதே என்று ஏங்குகின்றது. இந்த உணர்வின் தன்மை கேட்கும் பொழுது “ஸ்..ஸ்ஸ்…, அப்பா…! என்று களைப்பு வருகிறது.

ஏனென்றால் கர்ப்பமாக இருக்கப்படும்போது அந்த ஆரம்பக் காலங்களில் உமட்டலாக அந்தச் சோர்வான நிலைகள் இருக்கும். அப்போது இதைத் தாங்காதபடி… “அப்பா…!” என்று எண்ணும்போது
1.இந்தச் சாபமிட்ட உணர்வுகள் நேராகக் குழந்தைக்குள் இணைந்து
2.நல்ல உணர்வைக் கொன்று
3.இந்த வித்தாக அது இணைத்து விடும்.

உனக்கு கண் தெரியாது… உன் கால் முடமாகும்… உன் குடும்பம் நாசமாகப் போகும்…! என்று சொல்லிச் சாபமிடுவார்கள்.

இதைக் கேட்டவுடனே இந்த உணர்வு அதில் விளைந்த வித்து இந்தக் குழந்தையுடன் இணைந்து விடுகின்றது.

குழந்தையுடன் விளைந்த பிற்பாடு என்னவாகின்றது?

குழந்தை பிறக்கப் போகும் போது இவர்கள் தன்னை அறியாமலே  உலகம் கெட்டுப் போய்விட்டது….! அங்கே இப்படிப் போய்விட்டது…! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

சாபமிட்டவர்கள் “உனக்குக் கண் தெரியாது…!” என்று ஒரு நான்கு தரம் பேசியிருந்தால் அந்தத் தாய் அதை நுகர்ந்திருந்தால் கருவில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின்
1.கருவிழிக்கு வரும் நல்ல உணர்வின் தன்மையை இது தடுக்கும்.
2.குழந்தை பிறந்த பின்னாடி பார்த்தோம் என்றால் குழந்தைக்கு “மாறு கண்ணாக…” இருக்கும்.

சாபமிட்டவர்கள் “உன் குடும்பம் தொலைந்து போகும்…!” என்று பேசியிருந்தார்கள் என்றால் கருவில் பதிவாகி அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து “இப்படி ஆகிப் போய்விட்டதே… இப்படி ஆகிப் போய்விட்டதே…” என்று நினைத்தார்கள் என்றால்
1.இந்தச் சோர்வின் தன்மையால் தொழில் கெடும்
2.சோர்வடையும் போது வீட்டில் சண்டை வரும்.
3.சம்பாதித்து வைத்த காசு இது தன்னாலே ஓடும்.
4.சாபத்தை – சும்மா வேடிக்கையாகப் பார்த்த கர்ப்பிணிக்கு இத்தனை நிலை ஆகிறது.

இதுவெல்லாம் நாம் தவறு செய்யவில்லை. ஆனால் சந்தர்ப்பத்தால் இப்படிப் பதிவாகி நமக்குள் விளைந்துவிடுகிறது.

இதை எல்லாம் நாம் எப்படித் துடைப்பது? நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய ஞானிகள் எதைச் சொன்னார்கள்?
1.நமக்குள் கெட்டது எப்படிச் சூழுகின்றது?
2.அறியாமலே தீமை நமக்குள் எப்படி விளைகிறது?
3.தீமைகளை எப்படி விலக்குவது…? என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை அமைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

ஒரு ஊர் இருந்தாலும் ஒரு கிராமம் இருந்தாலும் பத்து வீடு இருந்தாலும் கோவில் கட்டி வைத்திருக்கின்றோம். விநாயகரைப் பார்க்கிறோம். தினசரி எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

தேங்காய் பழம் வைத்து வணங்குகிறோம். பிள்ளையாரைச் சுற்றி வந்தால் பிள்ளை வரம் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்து அந்தக் கோவிலைச் சுற்றுகின்றோம்.

ஆனால் நம் வாழ்க்கையில் எதை வினையாகச் சேர்க்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றோமா…! ஞானிகள் சொன்ன அந்த நிலையைப் பற்றி ஏதாவது நினைக்கின்றோமா?

ஞானிகள் சொன்ன நிலையை நாம் உணர்வால் எண்ணத்தால் எடுத்துத் தீமையை நீக்க வேண்டும். ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீய வினைகள் அகற்றிடும் சக்தியாக… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக “சரஹணபவா.. குகா..”
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக விண்ணிலே இருக்கின்றான்.

மண்ணுலகில் தீமைகளை வென்று விண்ணுலகில் இருக்கும் அந்த அகஸ்தியன் காட்டியது தான் “விநாயகர் தத்துவம்”.

விநாயகரைப் பார்க்கும்போதெல்லாம் விண்ணிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் தீய வினைகள் சாப வினைகள் அனைத்தையும் அகற்ற முடியும். கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த அகஸ்தியனின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் கருவிலேயே ஞானியாவான்.

நம்மை அறியாமல் வரும் தீய வினைகளை அகற்றி நல் வினைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரை எங்கே பார்த்தாலும் வைத்திருக்கின்றார்கள்.

ஒரு நல்ல வித்தின் தன்மையை நாம் மாற்றி விட்டால் கனியின் தன்மை பலன் கொடுக்குமோ? கொடுக்காது.

ஆகவே நம் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும்
1.தீமைகளிலிருந்து மனிதர்கள் அகல வேண்டும் என்பதற்காகத் தான்
2.குருநாதர் சொன்ன அருள் வழிகளை இங்கே உணர்த்துகின்றோம்.

Leave a Reply