தினசரி நிலநடுக்கம் ஏற்படுகிறது… பனிப் பாறைகள் உருகி கடல்கள் பெருகி ஊர்கள் மூழ்கப் போகின்றது… பூமி வெப்பமாகி விட்டது… என்று கண் கூடாக இன்று பார்க்கின்றோம் – “இதிலிருந்து தப்பிக்கும் மார்க்கம்”

EARTH-MANTLE.jpg

தினசரி நிலநடுக்கம் ஏற்படுகிறது… பனிப் பாறைகள் உருகி கடல்கள் பெருகி ஊர்கள் மூழ்கப் போகின்றது… பூமி வெப்பமாகி விட்டது… என்று கண் கூடாக இன்று பார்க்கின்றோம் – “இதிலிருந்து தப்பிக்கும் மார்க்கம்”

 

 

பூமிக்கடியில் அணுக்கதிரியக்கங்கள் இன்று மிகவும் அதிகமாகி விட்டது. இது வெடித்து மக்கள் இறந்தாலும் தொக்கிய உணர்வுகள் பூமிக்கடியில் அதிகமாகச் சேர்த்துக் கொதிகலனாக மாறி பாறையெல்லாம் குழம்பாக மாறப் போகின்றது.

 

அணு உலைகளில் அந்த எரி பொருளை எரித்தவுடனே வேகமாகச் சூட்டை உண்டாக்குகின்றது. அதைப் போன்ற நிலை நம் பூமியின் நடு மையத்திலும் அதிகமாகிவிட்டது.

 

உதாரணமாக மின்னல்கள் தாக்கப்படும் போது ஒரு நொடிக்குள் எல்லாவற்றையும் பஸ்பமாக்கி விடுகிறது. மின்னல்கள் கடலிலே விழுந்த பின் அடங்கி மணலாக மாற்றிவிடுகின்றது.

 

மணலாக மாற்றியதை யுரேனியமாகப் பிரித்து மீண்டும் வெடிக்கச் செய்கின்றார்கள் விஞ்ஞானிகள். (அணு உலைகள், குண்டுகள், லேசர் இயக்கங்கள், மிகவும் சக்தி வாய்ந்த எலெக்ட்ரானிக் கருவிகள்)

 

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் இயற்கையாக வெளிப்படுத்தும்

2.கதிரியக்க உணர்வுகள் ஒன்றின் வலு அதிகமானதும்

2.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கமும்

4.ஒன்றுடன் ஒன்று மோதும் போது

5.எல்லாவற்றையும் கடினமாகச் சூடாக்கச் செய்கின்றது.

 

(சூரியன் அடிக்கடி நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கின்றது என்று சொல்வார்கள் – SUN FLARE)

 

அது மோதும் இடங்களில் உயிரினங்களையும் கல்லுக்குள் இருப்பதையும் மற்ற எல்லாவற்றையும் மடியும்படிச் செய்கின்றது.

 

அதை வெடித்துப் பரீட்சித்தார்ந்தமாகப் பார்த்தாலும்

1.எல்லாமே பூமியின் சுழற்சியால் நடுமையம் அடைகின்றது.

2.நடு மையத்தில் கொதிகலனாகவும் மாறுகின்றது.

 

அதே சமயம் பூமிக்குப் புறத்திலும் வெடிக்கச் செய்தது சூரியனுக்கும் மற்ற நம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோள்களுக்கும் சென்றுவிட்டது.

 

இந்த விஷத்தின் தன்மைகள் நட்சத்திரங்களிலும் கோள்களிலும் பரவப்பட்டு நமது பிரபஞ்சத்திலும் அதிகமாக விஷத்தன்மை பரவி விட்டது.

 

நமது பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் விஷத் தன்மைகளை வடித்திடும் ஓசான் திரை உண்டு. அதிலே விஷ அடுக்குகள் உண்டு. தன் இனத்தைச் சேர்த்துக் கொள்ளும். பூமிக்குப் பாதுகாப்பு அது.

 

கீழே சுழலும் போது தனக்குத் தேவைப்பட்ட உணர்வு தான் இயக்கத்திற்கு வரும். ஆனால் அதுவும் இன்று என்ன ஆகி விட்டது,

 

பிரபஞ்சத்தில் மனிதனால் செயற்கையால் பரவச் செய்யப்பட்ட அணுக்கதிரியக்கங்கள் துருவப் பகுதி வழியாக மீண்டும் பூமிக்குள் நுழைந்து ஓசோன் திரையும் ஓட்டை ஆக்கிவிட்டது.

 

1.இந்தக் கதிரியக்க உணர்வுகள் அதிகமாகி

2.அது குவிந்து நம் துருவத்தில் வரப்போகும் போது

3அங்கிருக்கும் பனிப்பாறைகள் கரைகின்றது.

4.வட துருவமும் சரி தென் துருவமும் சரி கரைந்து கொண்டேயுள்ளது.

 

ஆனால் அதே சமயத்தில் பூமியின் நடு மையமோ கொதிகலனாக மாறுகின்றது. பூமிக்குள் இவ்வாறு ஆகப் போகும்போது

1.முதலில் கொதிகலன் சிறிதளவு இடத்தில் இருந்தது.

2.அப்புறம் அது கொஞ்சம் பெரிதானது.

3.இப்படிப் பெரிதாகப் பெரிதாகப் பெரிதாகக் கூழ் மாதிரி ஆகிக் கொண்டு  வருகிறது.

 

(ஏற்கனவே) கூழாக மாறியதால் தான் பாறையில் மாற்றமும் நில நடுக்கம் பூகம்பம் நில அதிர்வு மற்ற நிலைகளும் வருகின்றது.

 

நாம் பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு பல சரக்குகளைச் சேர்த்து ஒன்றாக்குவது போல பூமியின் நடு மையத்தில் உணர்வின் தன்மை பல கலவைகள் ஆகின்றது.

 

கொதிகலனாகும் போது கலவையாகிய பின் வெடிப்பாகி மீண்டும் இறங்கி இதனுடைய உணர்வுகள் மாற்றிக் கொண்டே இருக்கும்.

 

துகள்கள் தூசிகள் போவதில்லை. ஆனால் கீழிருந்து உணர்வின் தன்மை மாறினால் மேலே உறைய உறைய உறைய அதன் உணர்வு மாறினாலும்

1.எல்லாம் கலவையாகச் சேர்த்துக் கீழே

2.நம் பூமியின் நடுமையம் “வெப்பத்தால்… உருக்கப்படுகின்றது”.

 

உருகிய நிலைகள் கொண்டு தான் ஆவியாக மாறுகின்றது. ஆவியாக மாற்றப்படும் போது ஒன்று சேர்த்து இருக்கும் போது ஒன்றுமில்லை. வெடித்து விட்டால் இதன் வழி கூடி ஆவியினுடைய சத்துக்கள் வெளி வருகின்றது.

 

சில நேரங்களில் உள் வெடிப்பு இருக்கும். பாறையில் மாற்றம் இருக்கும்.

 

ஆக உள் வெடிப்பு என்று இருக்கப்படும் போது இது சிறுகச் சிறுக மேலே வரும் போது வெடிப்பின் தன்மை அதிகரிக்கும்.

 

1.முதலில் 3,500 மைல் தூரத்தில் (அடியிலிருந்து) மேல் ஓடு இருந்தது என்றால்

2.அது 1,000 மைல் தூரம் ஆகி

3.இப்பொழுது 3,000 – 4,000 அடி தூரத்திற்குப் பக்கத்தில் வந்து விட்டது.

4.அதனால் தான் இன்று அடிக்கடி வெடிப்பின் தன்மை அதிகமாகின்றது.

  1. இன்று இந்தப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது என்று தினசரி நீங்கள் கேள்விப்படலாம்.

 

வெடித்தபின் மேலே எந்தப் பக்கம் அதிகமோ அமிழ்த்துகின்றது. இப்போது இந்தப் பக்கம் அமிழ்த்தினவுடனே இதை அடைத்து விடுகின்றது.

 

இப்படிச் சாய்ந்த பின் இதனுடைய அழுத்தம் அதிகமான பின்

1.உள்ளுக்குள் இருக்கக்கூடிய “சகதி… கூழ்…”

2.எப்படி ஒரு பைப்பிற்குள் போகும் போது ஏதாவது தடுத்தால் சப்தம் வருகின்றதோ

3.அந்த மோதலில் எங்கெல்லாம் தடுப்பாகின்றதோ

4.அந்த மோதலில் அதிர்வு வரும் போதெல்லாம்… போகும் பாதையெல்லாம் (நில) அதிர்வு உண்டாகும்.

 

நம் பூமி வட்டமாக இருப்பதனால் சுற்றி வரப்போகும் போது எதனெதன் திசைகளில் அதிகமாகச் சந்து வருகின்றதோ அதன் நிலைகள் மோதுகின்றது.

 

அப்பொழுது அது மோதும் இடங்களில் கொஞ்சம் மேடான நிலைகள் அதாவது மறைக்கும் இடம் இருந்தால் “மோதி… ஒரு செகண்ட்…” அது அழுத்திய நேரத்தில் அங்கே நில நடுக்கம் வருகின்றது.

 

அது மறுபடியும் மோதி இப்போது மோதிய இடங்கள் எல்லாம்  பூமிக்குள் போகும். உதாரணமாக ஒரு இடத்தில் நடக்கிறது என்றால் இது நகர்ந்து இந்தப் பக்கம் விரிவான இடமாகப் போனால் நடுக்கம் இருக்காது. சப்தம் வரும். (EARTHU QUAKE AFTER SHOCKS என்பார்கள்)

 

இப்படி அது ஓடும் நிலைகள் குறுக்கே வரும் நிலைகளுடன் மோதி அந்த இடத்தில் மோதலில் அழுத்தம் வருகின்றது. அதிகமாக இது ஓட ஓட ஓட அதே சமயத்தில் கரையும் தன்மை ஜாஸ்தியாகின்றது.

 

கதிரியக்கம் அதிமாக ஆக ஆக பூமியின் குழம்பு அதிகமாகி துருவத்தின் வழி வரும் விஷத் தன்மை அதிகமாகி இயக்கத்தின் தன்மை அதிகமாக ஆகி இன்று பனிப்பாறைகள் அனைத்தும் கரைந்து கடல்கள் பெருகுகின்றது.

 

(கடல்கள் மிகப் பெரிய அளவில் பெருகிக் கொண்டுள்ளது என்று உலக விஞ்ஞானிகள் இரண்டாவது எச்சரிக்கையும் செய்துவிட்டார்கள்)

 

கடல் இருக்கின்ற பக்கம் இத்தகைய நிகழ்வானால் கடல் அலைகள் பொங்கி (சுனாமி) நகரை அழிக்கும் தன்மை வருகின்றது. இதைப் போன்று இயற்கையின் சீற்றம் வருகின்றது…. வந்து கொண்டேயிருக்கின்றது.

 

நாம் எந்த உணர்வின் தன்மை பெற்றோமோ அதன்வழியில் நாம் உடலை விட்டுப் போகும் போது

1.எந்த ஆசையை அதிகமாக எடுத்துக் கொண்டோமோ

2.இந்த உயிரிலே கடைசி நிமிடம் எந்த உணர்வு எடுத்தோமோ

3.உயிரால் கவரப்பட்டு அதற்குத்தக்க அடுத்த உடலைப் பெறுகின்றது.

 

அதிலிருந்து மீள நாம் இப்பொழுதிருந்தே தயாராகிக் கொள்ள வேண்டும்.

 

அதிகாலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

 

1.அது நமக்குள் ஒளியான அணுக்களாகப் பெருகப் பெருக

2.எந்த நிமிடத்தில் எது வந்தாலும்

3.நம்முடைய நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்ற உணர்வானால்

4.”அந்த உணர்வு… அந்த நினைவு… அந்தப் பற்று வருமானால்

5.நம் உயிர் நிச்சயமாக அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

 

இத்தகைய நிலையானால் நாம் அந்த எல்லையை அடைகின்றோம்.

 

ஆனால் எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற நிலையாகி பொருளின் பற்றுக்கு வரப்போகும் போது இந்த உணர்வின் தன்மை இந்த உயிரிலே பட்டு கருகும் நிலைக்கே வருகின்றது. பின் அதற்குத்தக்க கருகும் உடலின் தன்மையே பெருகுகின்றது.

 

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வு வரும் போது கருக்கும் தன்மைய இழக்கச் செய்கின்றது, நம் உணர்வு அங்கே செல்கின்றது.

 

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்

1.உங்களுக்குள் பதிவாக்கி விட்டேன்.

2.உங்கள் நினைவு உங்களைக் காக்க வேண்டும்.

3.ஆக எவரும் காக்க மாட்டார்கள்.

 

ஏனென்றால் நீங்கள் எண்ணிய உணர்வை வைத்துதான் உங்கள் உயிர் அந்த வாழ்க்கையை நடத்துகின்றது. உணர்வின் தன்மை உடலாக்குகின்றது. அதன் வழியே உங்கள் உயிர் உங்களை ஆளுகின்றது.

 

இதை மனிதன் தான் அறிந்து கொள்ள முடியும்.

1.எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மனிதன்

2.இந்த நிலையைச் செயல்படுத்தவில்லை என்றால்

3.பின் யாரும் நம்மைக் காக்க மாட்டார்கள்.

 

மீண்டும் இந்த உடல்கள் மாறும். உயிர் என்றுமே அழிவதில்லை.

 

1.அழியாத உயிரின் நிலைகள் கொண்டு

2.நம் உணர்வை அழியாத நிலைகளுக்குக் கொண்டு செல்வது தான்

3.யாம் உபதேசிக்கும் இந்த நிலை.

 

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் வளர்த்தால் “கல்கி”. பிறவியில்லா நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.

Leave a Reply