தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் சில “நுண்ணிய” ஆற்றல்களைக் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார் – “அந்த ரிமோட் சக்தியை (REMOTE CONTROL) நீங்களும் பெற முடியும்”

 

Remote power energy

தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் சில “நுண்ணிய” ஆற்றல்களைக் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார் – “அந்த ரிமோட் சக்தியை (REMOTE CONTROL) நீங்களும் பெற முடியும்”

குருநாதர் என்னைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று யானையிடமும் புலியிடமும் பாம்பிடமும் இருந்து தப்பிக்கப் பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

 

அதே போல் எறும்புப் புற்றிலும் கரையான் புற்றிலும் அமரச் செய்து அதனின் இயக்கங்களையும் அனுபவபூர்வமாகக் காணச் செய்தார்.

 

காட்டிற்குள் செல்லும்போது மிருகம் தாக்கும் என்றால் மிருகங்களுடைய செயலாக்கங்களை உணர்த்தி அதிலிந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வைக் குருநாதர் கொடுத்தார்.

 

குருநாதருடைய பரிபாஷையில் இந்த இந்த நிலையிலே நீ இப்படி எடு என்பார்.

1.அவர் சொன்ன முறைப்படிக் கண்ணுற்றுப் பார்த்தோம் என்றால்

2.மிருகங்கள் அமைதியாக இருக்கும். ஒன்றும் செய்யாது.

3.பக்கத்திலேயே அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்.

4.நம்மைப் பார்க்காது.

 

திருப்பதி மலையின் மேலே நாரதர் மன்றம் என்று இருக்கின்றது. அதை விட்டுக் கொஞ்சம் தள்ளிப் போனால் ஒரு காடு. அந்தக் காட்டுக்குள் போகச் சொன்னார் குருநாதர்.

 

அங்கே நான் போய் உட்கார்ந்த உடனே நடுநிசியில் கரடிகள் வருகிறது.

 

ஊ…ம் ஊ..ம் ஊ…ம் என்று ஊறுமிக் கொண்டு வருகிறது.

 

கொஞ்சம் ஏமாந்தோம் என்றால் அவ்வளவு தான் ஆளைக் கொன்றுவிடும். கரடி மாமிசப் பட்சினி தான். தாவர இனத்தையும் சாப்பிடுகிறது. உயிரினங்களையும் உட்கொள்ளுகிறது.

 

அது வந்தது என்றால் “லபக்..” என்று பிடித்து இரத்தத்தை உறிஞ்சி விடும். போட்டுத் தாக்கிடும். மண்டையைப் பிளந்து மூளையை எடுத்துச் சாப்பிடும்.

 

பாக்கி தசைகளை எடுக்காமல் மூளையை எடுத்துச் சாப்பிடும்.
இரத்தத்தைக் குடிக்கும். அதை எல்லாம் எமக்குக் குருநாதர் சொல்லியிருக்கின்றார்.

 

அங்கே உட்கார்ந்திருக்கும் பொழுது 7,8 கரடி வருகிறது. நான் எப்படித் தப்பிப்பது?

 

அப்பொழுது குருநாதர் சொன்ன உணர்வு அந்த “மேக்னட்டார்”. அதாவது எதிர் நிலையான உணர்வுகள் வருகிறது என்றால் உடனே அதைக் கவர்ந்து நமக்கு உணர்த்தி அதிலிருந்து ரிமோட் (நம்மைத் தப்பச்) செய்யும்.

 

குருநாதருடைய துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பாய்ச்சியவுடன் கரடிகள் அமைதியாகப் போகிறது. என்னை ஒன்றும் செய்யவில்லை. அதுவாக விலகிச் செல்கின்றது.

 

குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்த நிலையில் யானைக் கூட்டத்திற்குள்ளும் புலி இருக்கும் இடத்திலேயும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுத்தார்.

 

எறும்புக் கூட்டுக்கு மேல் உட்கார வைத்தும் அனுபவத்தைக் கொடுத்தார். எறும்புக் கூட்டத்திற்குள் இருந்தால் என்னாகும்?

 

முதலில் ஒரு எறும்பு என்னை கடித்தது. அதை நசுக்கினேன். அப்பொழுது என்ன ஆனது?

 

நான் உட்கார்ந்த உடனே எறும்பு வந்து “மொய்…” என்று என்னை மொய்க்கிறது.

1.ஒரு எறும்பு செத்தது.

2.அடுத்து எல்லா எறும்புகளும் என்னைக் கடி கடி என்று கடிக்கிறது.

3.ஒரு நொடிக்குள் அந்தச் செய்தி எல்லா எறும்புகளுக்கும் எப்படிப் போகிறது?

4.அந்த உணர்வு பரிபாஷையில் உணர்வின் எண்ணங்கள் ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பு கொள்கிறது? என்பதை உணர்த்திக் காட்டுகின்றார்.

 

எறும்புக்குள் இருக்கக்கூடிய ஒற்றுமையை நீங்கள் பாருங்கள்.

 

ஒரு இடத்தில் பொருள் இருந்தால் அந்த எறும்புகள் ஒன்றுக்கொன்று சந்தித்தவுடனே அந்தப் பொருளைப் பார்த்த உணர்வுகளைத் தன் “மீசையிலேயே” காட்டுகிறது.

 

டி.வி. ரேடியோவில் வைத்திருக்கும் ஆன்டென்னா… ஏரியல் – அந்த மேக்னட் வயர் என்ன செய்கிறது? அந்தந்தத் திசையிலிருந்து வருவதை ஈர்க்கின்றது. அதன் வழி ஈர்த்துக் கேட்கின்றோம்.

 

சாதாரணமாக எறும்பு தானே என்று நாம் பார்க்கின்றோம்.

1.நீளமான ஏரியல் மாதிரி அந்த எறும்பு தன் மீசைகளை ஆட்டிக் கொண்டே இருக்கும்.

2.அது எந்தப் பக்கம் போகின்றதோ அந்த உணர்வை ஈர்த்து அங்கே நடக்கிறதைச் சொல்கிறது.

3.எடுத்து அந்த திசையைக் கொடுக்கின்றது.

4.எறும்புகள் எல்லாம் அங்கே போகிறது.

 

இன்று விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?

 

ஒரு ரேடியோ வைத்து (TRANSISTOR) என்னென்ன அலைகள் எங்கெங்கே போகிறது என்று தெரிந்து கொள்வதற்காக மிருகங்கள் கழுத்தில் அதைக் கட்டி விட்டு விடுகின்றார்கள். அது காட்டுக்குள்ளே போகிறது.

 

அந்த மிருகம் என்னென்ன திசையில் சென்று மேய்ந்து கொண்டிருக்கின்றது? அது மேயும் போது என்னென்ன அதிசயத்தைப் பார்க்கின்றது? தன் எதிரிகளிடமிருந்து எப்படித் தப்பிக்கின்றது? அதனுடைய குணங்கள் எப்படி இருக்கிறது என்று விஞ்ஞானி அறிகின்றான்.

 

ஒரு மிருகத்தைப் பிடித்துப் பக்குவப்படுத்தி அந்த உடலில் வரும் எதிர் நிலைகளை அறிவதற்காக வேண்டி கழுத்திலேயும் போட்டு அதன் உடலுக்குள்ளும் பதிவு செய்துவிடுகிறார்கள்.

 

உடம்புக்குள் பதிவு செய்து கழுத்தில் வார் (BAND) மாதிரி மாட்டி அதனின் எக்கோ (ECHO) வருவதை அறிவதற்காக ஏரியல் போலக் கட்டி விடுகிறார்கள்.

 

ஏரியல் போலக் கட்டி விட்டவுடனே… எதிரியிடமிருந்து எப்படி இந்த மிருகம் தப்புகின்றது. இதனுடைய குணங்கள் என்ன? எதிரியின் உணர்வுகள் எப்படி ஆகின்றது? இது எந்த நிலைகள் என்று விஞ்ஞானி கண்டறிகின்றான்.

 

காட்டுக்குள்ளே மிருகங்கள் என்னென்ன செய்கிறது என்று “டிவி…க்களில்” இன்று படங்களாகப் பார்க்கிறோம் அல்லவா.

 

காட்டிற்குள் என்னென்ன நடக்கின்றது என்று அறிவதற்காக அந்தந்த மிருகங்களுக்கு இப்படி மாட்டி விடுகிறார்கள். அது பாட்டுக்குக் காட்டுக்குள்ளே விளையாடுகிறது.

 

அப்பொழுது அது அது எங்கெங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்து அதனுடைய செய்திகளை எல்லாம் தெரிந்து கொள்கிறார்கள்.

 

ஒரு எலியாக இருந்தாலும் தன் எதிரியிடமிருந்து அது எப்படி தப்புகின்றது? அதனுடைய குணங்கள் என்ன? எந்த மணத்தை நுகர்கிறது? எதனால் அது மாறுகிறது என்ற வகைகளில் விஞ்ஞானி இதைச் செய்கிறான்.

 

இதே மாதிரித் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

1.அவர் பாய்ச்சிய உணர்வின் தன்மை கொண்டு நான் செல்லப்படும் போது

2.ஒவ்வொரு மிருகங்களுடைய உணர்வுகளும்

3.அதனுடைய தொடர்வரிசை எப்படி இருக்கிறது என்று சொல்லி

4.என்னை அறிய வைத்தார். நான் அறிந்து கொண்டேன்.

 

அதை நீங்களும் அதை அறிய முடியும்.

 

மனிதன் மிருகத்தினுடைய நிலைகளை அறிந்தாலும் பிறிதொரு மனித உடலில் விளையக்கூடிய தீமையின் விளைவுகளை நமக்குள் வராதபடி ரிமோட் செய்யக் கூடிய சக்தி வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் எடுக்கும் போது

1.தீமைகளை நமக்குள் வராதபடி தடுத்து

2.நம்மைப் பாதுகாக்க முடியும்.

3.நமக்கு அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும்.

 

தீமைகளை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத்தான் குருநாதர் எம்மைப் பெறச் செய்தார். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத்தான் உங்களையும் பெறச் செய்கின்றோம்.

Leave a Reply