“ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்” ஒரு கருவுற்ற தாய் வேதனை சங்கடம் என்று அதிகமாக எண்ணியிருந்தால் பிறக்கும் சிசு ஊனமாகத்தான் பிறக்கும் – நடந்த நிகழ்ச்சி

Mother and child care

“ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்” ஒரு கருவுற்ற தாய் வேதனை சங்கடம் என்று அதிகமாக எண்ணியிருந்தால் பிறக்கும் சிசு ஊனமாகத்தான் பிறக்கும் – நடந்த நிகழ்ச்சி

 

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் கோபம் குரோதம் என்ற நிலைகளில் தாய் எத்தகைய உணர்வை எண்ணுகின்றதோ தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்துடன் கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்குப் பதிவாகிவிடுகின்றது.

 

அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்த பின் தாய் கருவிலிருக்கும் பொழுது வளர்ந்த உணர்வைத்தான் எடுக்கின்றது.

 

தாய் கருவுற்றிருக்கும்போது பிறர் மேல் பாசமும் பரிவும் அன்பும் கொண்டு மற்றவர் நோய்வாய்ப்பட்டதைக் கேட்டுணர்ந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் சென்று இரத்தமாகத்தான் மாறுகின்றது.

 

கருவிலிருக்கும் சிசுவிற்குத் தாய் உடலில் இருக்கும் இரத்தம் தான் ஆகாரம்.

 

தாய் அந்தச் சந்தர்ப்பத்தில் நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் கருவில் இணையப்படும் போழுது பிறந்த பின் பார்த்தால் அது வளர்ச்சி வரும் பொழுது அந்தத் தலை வலி வந்தது மூளை வளர்ச்சி இல்லை கை கால் ஊனமானது என்றெல்லாம் பார்க்கலாம்.

 

ஏனென்றால் கருவுற்ற தாய் “ஒன்றிலிருந்து தொண்ணூறு நாளைக்குள்” ஊனமான நிலையில் உள்ள ஒருவர் மீது பரிதாபப்பட்டு உற்றுப் பார்த்தால் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பதிவாகிவிடுகின்றது.

 

குழ்ந்தை பிறந்த பின் பார்த்தால் அதே குறைபாடுடன் பிறக்கின்றது.

 

இன்று விஞ்ஞான அறிவு வளர்ந்த நிலைகள் கொண்டு ஸ்கேன் வைத்துப் பார்த்தோம் என்றால் கருவிலிருக்கும் குழந்தை ஊனமாக இருப்பதைப் பார்க்கலாம்.

 

இங்கே உள்ள ஒரு அன்பரின் வீட்டில் இது நடந்த நிகழ்ச்சி.

 

கல்யாணமாகி எல்லாம் சந்தோஷமாக இருந்தார்கள். கர்ப்பமான சந்தர்ப்பத்தில் வீட்டிலுள்ளோர் ஒருவருக்கொருவர் சங்கடமான நிலைகளில் வெறுப்பு கொண்டு சண்டை போடுகின்றார்கள். இந்த வீட்டிலும் வேதனை. அவர்கள் வீட்டிலும் வேதனை.

 

கர்ப்பமாக இருப்பதைக் கேள்விப்பட்டு நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். கோபப்படாதீர்கள்… வேதனைப்படாதீர்கள்… சண்டை எதுவும் போட வேண்டாம்… “எல்லோரும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருங்கள்” என்று சொல்லியிருந்தேன்.

 

இருந்தாலும் அவர்கள் வீட்டில் நடக்கும் அந்த நிகழ்ச்சிகளை கர்ப்பமான தாய் உற்றுப் பார்த்துப் பதிவாக்குகின்றார்கள்.

 

வீட்டில் எதற்கெடுத்தாலும் கோபம்… சண்டை… வெறுப்பு… வேதனை…, என்று “எல்லாம்”  நடக்கின்றது. சிறிது நாள் கழித்து ஸ்கேன் வைத்துப் பார்த்தால் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கை கால் “சரியாக உருவாகவில்லை”.

 

உடனே அபார்ஷன் செய்து அதை எடுத்துவிட்டார்கள்.

 

இந்த மாதிரி இயற்கையின் உண்மை நிலைகள் – நாம் நுகரும் உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து

1.உடலுக்குள் அணுக்கள் மாற்றத்திற்குக் காரணமாகின்றது.

2.இதையெல்லாம் தெரிந்து கொண்டபின் இந்த வாழ்க்கையில்

3.“நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்?” என்று சற்றுச் சிந்தியுங்கள்.

 

நாம் வீட்டை அழகாகக் கட்டுகின்றோம். அதில் தூசியாகும் பொழுது துடைக்கின்றோம். ஒரு பாத்திரத்தையோ பொருளையோ அழகாக வைக்கின்றோம். தூசி விழுந்துவிட்டால் துடைக்கின்றோம்.

 

நம் வாழ்க்கையில் பிறர்படும் துயரங்களையோ வேதனைகளையோ நாம் பார்க்கப்படும் பொழுது அந்த வேதனை என்ற விஷங்கள் நம் உடலுக்குள் சென்றுவிட்டால் நல்ல குணங்களைச் செயலற்றதாக்குகின்றது. உடலை நலியச் செய்கின்றது.

 

அதைத் துடைக்க வேண்டுமா வேண்டாமா…! நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தினால் தான் நம் மனம் மகிழ்ச்சியாகும். உடலும் ஆரோக்கியமாகும். நம் செயல்கள் அனைத்தும் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

 

அதற்காக வேண்டித்தான் மெய்ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை  உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

 

பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மெய்ஞானிகளின் அருளை எடுத்து உங்கள் வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் சங்கடங்களையும் வேதனைகளையும் துடைக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

Leave a Reply