எங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா…! உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…!

lord-eswara-lingam

எங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா…! உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…!

 

என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் உடலின் உணர்வின் ஆசை இல்லாது என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு “ஈஸ்வரா….”

 

இந்த உடலின் உணர்வின் ஆசை எனக்குள் வளர்ந்திடாது

1.“உயிரான… உன்” ஒளியான நிலைகள் கொண்டு

2.அந்த உணர்வின் நினைவாக எனக்குள் என்றும் நீ இருந்துவிட வேண்டும் “ஈஸ்வரா…”

3.உன் நினைவாகவே நாம் இருக்க நீ அருள் புரியவேண்டும் “ஈஸ்வரா…” என்று வேண்டினால்

4.நமக்குள் குருவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஈசனின் அருளை நிச்சயம் பெறுவோம்.

 

இதனின் துணை கொண்டு நாம் செல்வோம் என்றால் “நான்…!” என்பது ஏது..? அவனுடன் ஒன்றிய இயக்கமே நான் ஆகின்றது.

 

நான் தவறு செய்தாலும் நான் ஆகின்றது. அவனுடன் ஒன்றிய நிலைகள் தவறின் நிலைகள் நமக்குள் வேதனை தரும் பொழுது அவனுக்கும் வேதனை தருகின்றது. அப்பொழுது நமக்குள்ளும் வேதனையை உணர்த்துகின்றான்.

 

வேதனைகளிலிருந்து அகற்றிட

1.அவனின் ஒளி கொண்டு

2.இருளை அகற்றிடும்… இருளைப் போக்கிடும் நிலையாக…

3.ஒவ்வொரு உணர்வையும் “பிளந்து காட்டுகின்றான்”

4.உணர்வின் செயலை உணர்த்துகின்றான்.

 

நமக்குள் அறியாது வந்த தீமைகளைப் பிளந்திடும் ஆற்றல் பெற்ற… அறிந்திடும் ஆற்றல் பெற்ற… “அவனின் நினைவு” எப்பொழுதும் நமக்கு வந்து கொண்டேயிருக்க வேண்டும்.

 

அறிந்திடும் ஆற்றலைக் கொடுக்கும் உயிரின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அறிவின் ஆற்றலை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

விண் சென்ற ஞானிகள் அனைவரும் உயிருடன் ஒன்றியே ஒளியின் சரீரம் பெற்றார்கள். உயிரைக் கடவுள் என்று உரைத்தனர். ஆகவே

1.என்றுமே ஒளியாக இருக்கும் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு

2.அந்த ஈசனைப் பற்றுடன் பற்றி

3.குருவாக இருந்து வழி காட்டும் நிலைகள் கொண்ட

4.அவனின் அருளை நாம் அனைவரும் பெற வேண்டுவோம்.

 

அவனுடன் அவனாக… அவனாகவே…, “நாம் அனைவரும் ஆவோம்”.

Leave a Reply