நாம் ஆகாரம் உட்கொள்வது போல் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அகஸ்தியர் உணர்வைப் பெறச் செய்ய வேண்டும்

Spiritual food - Agastya

நாம் ஆகாரம் உட்கொள்வது போல் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அகஸ்தியர் உணர்வைப் பெறச் செய்ய வேண்டும்

 

அகண்ட அண்டத்தில் சூரியன் எத்தனையோ மைல் பரப்பளவு கொண்டது என்று சொன்னாலும் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது நமது நெற்றியில் பொட்டு வைப்பது போன்றுதான் காண முடிகின்றது.

 

ஆனால் நமது பிரபஞ்சத்தில் வியாழன் கோள் மிகவும் பெரிதானது. அதை நாம் பார்க்க முடிகிறதா என்றால் இல்லை.

 

சனிக் கோளைப் பார்க்க முடிகின்றதா என்றால் முடியவில்லை. அது நுகர்ந்து எடுக்கும் உணர்வுகள் அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் வெளி வரும்பொழுது இரண்டும் மோதலில் உறைந்து வளையம் போல் சுழன்று அது தனக்குள் இத்தகைய நிலைகளை உருவாக்கும் நிலைகள் பெற்றது.

 

அது கரைந்து வரும் உணர்வின் நிலைகளைச் சூரியன் காந்தப் புலனறிவு கவர்ந்து மற்ற நட்சத்திரங்களின் உணர்வுகளுடன் கலக்கின்றது.

 

அவ்வாறு இணைந்து இருந்தால்தான் ஒன்றுடன் ஒன்று இணைந்து கலக்கும் சக்தியும் வளரும் பருவமும் உருவாகும் தன்மையும் பெறுகின்றது.

 

சனி அனைத்தையும் பெருக்கும் சக்தி பெற்றது. சனிக்கோள் செயலிழந்து விட்டால் நமது பூமியில் நீர் நிலைகளே இல்லாது போய்விடும். நீர் நிலைகள் இல்லையென்றால் நம் பூமியில் உயிரினங்கள் வாழ முடியாது.

 

வான் வீதியில் மற்ற கோள்களில் நீருடன் கலந்திருக்கும் பொழுது பாறைகள் உருவாகின்றது. அது இணைந்திடும் நிலைகள் கொண்டு நடு மையம் ஏற்படும் வெப்பத்தால் தன் அருகில் இருப்பதை உருக்குகின்றது.

 

அவ்வாறு உருக்குவதும் ஆவியாக மாற்றுவதும் கோள்கள் அதை வெளித் தள்ளுவதும் பல வித்தியாசமான பொருள்கள் உருமாறுவதும் நமது பூமியிலும் சரி மற்ற கோள்களிலும் சரி இவ்வாறு வருகின்றது,

 

இதுவெல்லாம் (அகஸ்தியன்) துருவன் கண்டுணர்ந்தவை அவனில் கண்டுணர்ந்து வெளிப்பட்ட முச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியிலும் பரவியுள்ளது.

 

இதைத்தான் நமது குருநாதர் நுகரும்படி செய்தார்.

 

பிரபஞ்சத்தின் இரகசியமும் பேரண்டத்தின் அகண்ட நிலையையும், உணர்வுப் பூர்வமாக உணர்ச்சிகள் எப்படி இயக்குகின்றது? உணர்ச்சிகள் எப்படி மாறுகின்றது? என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார் நமது குரு.

 

அந்தத் தெளிவான உணர்வின் தன்மையைத்தான் சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

 

“உங்களுடைய நினைவுகள்” அகஸ்தியன்பால்

1.கூர்மையாக நினைவாற்றலைச் செலுத்தும் பொழுது

2.அவரின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாவதும்

3.பதிவான பின் ஈர்க்கும் சக்தி வருவதும்

4.அதை நுகரும் சக்தி பெறுவதும்

5.உயிருடன் ஒன்றி உடலுக்குள் பரப்பும் சக்தி பெறுவதும்

6.இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

 

அதன்வழி உங்களுக்குள் வரும் சக்தியின் நிலைகளை நீங்கள் நுகருவதற்கு உங்களில் பதிவாகி பதிவான உணர்வின் துணை கொண்டு “அகண்ட அண்டத்தின் நிலைகளை” நீங்கள் அறியும் பருவம் பெறுகிறீர்கள்.

 

அகண்ட அண்டத்திலிருந்து வரும் உணர்வுகளைக் கவர்ந்து “என்றும் மரணமில்லாப் பெருவாழ்வு” என்ற நிலையை அடைந்திடும் நிலையும் “ஒளியின் சரீரமாக உருப்பெறும் சக்தியும்” நீங்கள் பெறும் தகுதியை இப்பொழுது உபதேசிக்கும் உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவாக்கப்படுகின்றது.

 

எமது குருநாதர் எமக்கு உருவாக்கியது போன்று உங்களுக்குள்ளும் இதை உருவாக்கி நினைவினை வலுக்கொண்டு நுகரப்படும் பொழுது அதனைப் பெறும் நிலையும் உருவாக்கும் நிலையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

 

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் நாம் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறும் வண்ணம் தியானித்து வருகின்றோம்.

 

தினம் தினம் அதிகாலை 4.00 – 6.00 மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற நீங்கள் தியானித்துப் பழக வேண்டும்.

 

இதை நீங்கள் தலையாயக் கடமையாகப் பழக வேண்டும்.

 

நம் உடலுக்கு நாம் எப்படி ஆகாரத்தைச் சாப்பிடுகின்றோமோ அதைப் போன்று நம் உடலில் உள்ள அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய வேண்டும்.

 

நம் பூமியில் 27 நட்சத்திரங்களில் இருந்து வரும் உணர்வுகள் புவி ஈர்ப்பின் துணை கொண்டு கவர்ந்து அது மின்னலாகப் படருகின்றது.

 

சில நட்சத்திரங்களின் உணர்வுகள் எப்பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ அந்தந்த நட்சத்திரங்களின் குணங்களுக்கு ஒப்ப மண்ணுடன் கலந்து வைரங்களாக விளைகின்றது. இதைப் போன்று

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்

2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுகச் சேர்க்க

3.அந்த ஜீவ அணுக்கள் உயிரைப் போலவே உயிரணுவாக மாறிவிடும்.

 

இந்த உடலில் உள்ள பல கோடிக்கணக்கான ஜீவ அணுக்களையும் உயிரைப் போலவே உயிரணுவாக மாற்றும் பொழுது

1.ஓர் ஒளியின் உடலாகவும்

2.எத்தகைய விஷத்தன்மையும் ஒளியாக மாற்றும் திறனையும்,

3.நமது உயிர் பெறுகின்றது (நாம் பெறுகின்றோம்) என்பதனை அறிதல் வேண்டும்.

Leave a Reply