தீமைகள் வரும் பொழுது “புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி” மூடிப் பழக வேண்டும்

third-eye breathing

தீமைகள் வரும் பொழுது “புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி” மூடிப் பழக வேண்டும்

 

பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய “துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும்” அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

1.அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நமது கண்களின் நினைவிற்கு கொண்டு வரவேண்டும்.

2.பின் புருவ மத்திக்குக் கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும்.

3.நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாகக் கண் வழி கவர்ந்து இதை நமக்குள் இணைக்கின்றோம்.

4.இது வலிமையான பின் உணர்வின் பிராணயாமம்.

5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம். இது தான் முருகு – மாற்றி அமைக்கும் சக்தி.

 

தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உயிரிலே இணைத்தபின் தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது உடலைச் சுற்றியே நிற்கும்.

 

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று வலுவெற்ற வேண்டும்.

 

ஒரு நிமிடம் வலுவானபின் அந்தச் சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும்போது உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள் நம்மைவிட்டு அகலும்.

 

துணியில் அழுக்குப்பட்டால் எப்படிச் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ அதைப் போல துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி அதை வலுவாக்கித் தீமைகளை நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அகன்று செல்லச் செய்கின்றோம்.

 

ஒரு நோயாளியைப் பார்த்திருந்தால் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்று உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால் அவரும் நலம் பெறுவார்.

 

இராமனின் பக்தன் ஆஞ்சனேயன் சுவைக்கொப்ப எண்ணங்கள் சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம் அது சீதாராம். அந்த ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன் சுக்ரீவனின் மந்திரி.

 

சுக்ரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்) நமக்குள் வலுப் பெற்று மற்றவர்கள் பெறவேண்டும் என்று சொல்லும்போது அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்) வாயுவாகச் சென்று மற்றவர்களையும் பெறச் செய்யும்.

 

மற்றவர்களின் வேதனையை நுகர்ந்தால் அது வாலி. நம் நல்ல குணங்களை அடக்குகின்றது. உடலுக்குள் சென்றால் இராவணன். நல்ல குணங்களைக் கொல்கின்றது.

 

வாலியை உள்ளுக்குள் செல்ல விடாமல் இராமன் பாறையைப் போட்டு மூடி விடுகின்றான்.

1நமது உயிரின் துணை கொண்டு

2.நமக்கு மேல் இருக்கின்ற அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி புருவ மத்தியில் மூடிப் பழக வேண்டும்.

3.மூடிப் பழகிவிட்டால் நாம் நுகர்ந்த உணர்வின் செயலாக்கம் குறைந்துவிடும் என்பதற்காக

4.இராமாயணக் காவியத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

 

நமது உடலுக்குள் தீமை புகாது தடுத்து நிறுத்தி நாம் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது நமது சொல் வெளிப்பட்டு பிறர் செவிகளில் படுகின்றது.

 

அவருடைய கண் நம்மைப் பார்த்து உணர்வை நுகர்கின்றது. உயிரிலே பட்டு வாயுவாக மாறுகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே இணைகின்றது.

 

மற்றவர்களும் தீமைகளிலிருந்து விடுபடும் சந்தர்ப்பம் உருவாகின்றது. இதுதான் இராமனின் பக்தன் ஆஞ்சனேயன். சுக்ரீவனின் மந்திரி என்று இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

Leave a Reply