வாழ்க்கையில் வந்த கஷ்டத்தை எண்ணாமல் கொடுக்கும் “உயர்ந்த ஆற்றல்களை” எடுத்துக் கொள்ளுங்கள்

Spiritual power and energy

வாழ்க்கையில் வந்த கஷ்டத்தை எண்ணாமல் கொடுக்கும் “உயர்ந்த ஆற்றல்களை” எடுத்துக் கொள்ளுங்கள்  “

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் அறிவிற்குத் தக்கவாறுதான் நம்முடைய சொல்கள் வெளிப்படும்.
1.அது மற்றவர்களுக்குள்ளும் பதிவாகும்
2.அந்தப் பதிவிற்குத் தக்கவாறு தான் நண்பனாக்குவதோ
3.நண்பனை உயர்த்துவதோ பகைவனாக்குவதோ இதுதான்.

நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தின் வேகம் நம்மைத் தடைப்படுத்தும். அந்த சந்த்ர்ப்பங்களில் அந்த மகரிஷிகளை எண்ணி நாம் இதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இதற்குத்தான் கோவிலை வைத்தார்கள்.

ஒருவர் மேல் சந்தர்ப்பத்தில் பகைமை ஆகிவிட்டால் கோவிலில் தீப ஆராதனை காட்டும்போது பொருளறிந்து செயல்படும் இச்சக்தி கிடைக்க வேண்டும்.

இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும், என்று அந்த உணர்வை ஒளியாக்க வேண்டும்.

அந்த அறிவு இல்லையென்றால் “இப்படிச் செய்கின்றார்களே” என்ற இந்த அறிவு தான் நம்மை இயக்கும்.

இதுவும் அறிவு தான் அதுவும் அறிவு தான்.

ஆகவே எதன் உணர்வு எதனுடன் இயக்குகின்றதோ அதன் அறிவின் இயக்கமாக உயிர் நம்மை இயக்கும்.

1.உயிரின் இயக்கத்தைச் செயல்படுத்துவதற்குத்தான்
2.ஆலயங்களில் “இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…” என்று கதைகளை எழுதினார்கள்.

அந்தத்  தெய்வ குணத்தை எடுத்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்து இந்தத் தெய்வகுணம் நாங்கள் பெற வேண்டும்.

எங்களைப் பார்ப்போரெல்லாம் அந்த தெய்வநிலை பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த தெய்வநிலை பெறவேண்டும். அவர்கள் குடும்பமெல்லாம் அந்த நிலையாக வளரவேண்டும் என்ற  இந்த உணர்வை நமக்குள் வளர்க்கச் சொல்லுகிறார்கள்.

ஏனென்றால் “குருநாதர் எனக்கு எவ்வளவு கொடுத்தாரோ” அதைக் காட்டிலும் பன்மடங்கு உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்… கொடுக்கின்றேன்… “அந்தச் சக்தியின் துணை கொண்டு” நீங்கள் எடுக்க வேண்டும்.

சாமி சொல்கின்றார்… ஆனால் “நான் படுகின்ற இம்சை எனக்குத்தான் தெரியும்” என்று இதைக் கலந்து விட்டால் இதைப் பெற முடியாது.

குரு சொன்னதைச் செய்தால் நாம் அனைவரும் அதைப் பெறமுடியும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் எண்ணங்களாக்கி மணங்கள் வந்துவிடும்.

குருநாதர் கொடுத்த இந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை இங்கு பதிவு செய்யப்படும் பொழுது இதை எடுக்கச் சொல்லுகின்றோம்.

உங்களிடம் உபதேசத்தின் வாயிலாக அருள் உணர்வுகளைப் பதியச் செய்துவிடுகின்றோம். “நீங்கள் பெறவேண்டும்” என்ற உயர்ந்த எண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றோம்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து இந்த உணர்வை உங்களிடம் பதிவு செய்கின்றோம். இதை நீங்கள் வலுவாக்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளை அறியும் ஆற்றல் பெறுவீர்கள்.

 

Leave a Reply