இராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு

rameswaram - ramanatha saamigal

இராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு

 

நம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான்  “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள்.

 

நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி இந்த உடலான பரத்தை உருவாக்கியது உயிர். இதுதான் இராமேஸ்வரம்,

 

இதை ஸ்தல புராணமாக உருவாக்கி இதே எண்ணத்தால் ஒளி என்ற உணர்வு பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்வதற்கு  இராமேஸ்வரத்தை அமைத்தார்கள்.

 

அங்கு அதிகாலை 4.00 மணியில் இருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பதற்காகக் கடலுக்கருகில் கோவிலை அமைத்தார்கள்.

 

அதன் உணர்வை ஒரு மண்டலம் (48 நாட்கள்) வளர்த்துக் கொண்டபின்  நம் குடும்பத்தில் நமது மூதாதையர்களையோ உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களையோ விண் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க முடியும்.

 

மூதாதையர்களின் உணர்வு நமக்குள் உண்டு.

 

அதன் துணை கொண்டு “எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த குலதெய்வமான உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் கலந்து உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து பெருவீடு பெருநிலை அடைந்து அழியா ஒளி சரீரம் பெறவேண்டும்”என்று பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும் இடம் அது.

 

1.சிறிது காலமே மனித உடலில் வாழ்கின்றோம்.

2.அதற்குள் இந்த மனித உடலில் “மனதைக் குவித்தல்” வேண்டும்.

3.அதாவது மனதில் எல்லாக் குடும்பங்களும் நல்லது பெறவேண்டும், என்று எண்ண வேண்டும்.

4.இதைத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாக இராமாயணத்தில் காட்டினார்கள்.

 

இராமேஸ்வரத்தில் “மனிதனுடைய பொக்கிஷம்” அத்தனையும் உண்டு.

 

27 நட்சத்திரங்களின் சத்தைச் சூரியன் எவ்வாறு பாதரசங்களாக மாற்றுகின்றதோ அதே போன்று 27 நட்சத்திரங்களின் சத்தைச் சூரியன் கவர்ந்து இயக்க அணுவாக மாற்றியதை  ஜீவ அணுவாக்கி இந்த  உடலை உருவாக்கியது உயிர்.

1.மனிதனான பின் 27  நட்சத்திரத்தையும் சேர்த்து

2.முழுமை அடையும் பக்குவத்தைத்தான் இராமேஸ்வரத்தில் காட்டினார்கள்.

 

இராமேஸ்வரத்தில் 27 கிணறைக் காட்டி இருப்பார்கள். எது எது உணர்வுகள் ஊற்றெடுத்து நமக்குள் ஒன்றாக்குகின்றது என்று இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது.

 

நம் மனதைக் குவிக்கும் இடம் இராமேஸ்வரம்.

 

அங்கு நம் மூதாதையர்களை எண்ண “எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த, மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள் அனைத்தும்

1.சப்தரிஷி மண்டலத்தில் கலந்து

2.உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து,

3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழவேண்டும்”

4.என அவர்களை விண் செலுத்தும் இடம் அது.

5.மனிதன் ஒருவன் தான் அதைப் பெறமுடியும். கடைசி முடிவு.

 

அணுக்களாகச் சேர்த்துச் சூரியனாகிப் பிரபஞ்சமாகிப்  பிரபஞ்சத்தில் உயிரணுவாகி உயிரணு தோன்றியபின் “ஒளியின் உடலாவதுதான்”  இறுதி நிலை.

 

ஆகையால்  முதாதையர்களை முறைப்படி விண் செலுத்தினால்  அவர்கள் பிறவி இல்லா நிலை அடைகின்றனர்.  அவர்கள் முன் சென்றால்  அவர்களைப் பின்பற்றி நாம் எல்லோரும் அங்கு சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்லலாம்.

Leave a Reply