இந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை நம் மேல் பட்ட “தூசியைத் துடைப்பதுபோலத் துடைக்க வேண்டும்”

Divine cleaning of soul

இந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை – நம் மேல் பட்ட “தூசியைத் துடைப்பதுபோலத் துடைக்க வேண்டும்”

 

இன்று கலி என்ற நிலைகளில் எல்லாமே கடவுளாக உருவாக்குகின்றார்கள். எல்லாமே கடவுளாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். “இதுதான் கலி”.

 

நான் ஒரு தெய்வத்தை வைக்கின்றேன். அது இது மாதிரிச் செய்கின்றது. எனக்கு இந்தக் கடவுள் இதைச் செய்து கொடுத்தார். இது போன்ற நிலைகள் கலி என்ற பெயரில் எல்லோர் மத்தியிலும் உருவாகிவிட்டது.

1.நான் உருவாக்குகின்றேன்.

2.நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன் என்று எல்லோரும் சொல்கின்றார்கள்.

3.நானே உனக்கு உள் நின்று இயக்குகின்றேன் என்று சொல்கின்றார்கள்.

 

இப்பொழுது நான் கூட உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சொல்லுகின்றேன். அதனுடைய பொருள் என்ன?

 

யாம் உபதேசத்தின் மூலம் அருள் ஞானிகளின் ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். யாம் சொன்ன முறைப்படி இதை எடுத்ததுமே நான் கொடுத்த எண்ணங்களுக்கு வலுக் கூடுகின்றது.

 

பதிவாக்கிய வித்தை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால்தான் அது வேலை செய்யும்.

 

உங்கள் உதவி வேண்டாம் என்றால் ஒன்றும் இல்லை.

 

உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன் என்று நான் காப்பாற்றுகின்றேன் என்றால் நான் கடவுள் அல்ல.

1.நான் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்

2.நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள்.

3.சாமி நம்மைக் காப்பாற்றி விடுவார் என்று தான் எண்ணுவீர்கள்.

 

நீங்கள் நல்ல மருந்தைச் சாப்பிட்டால் அது உங்களைக் காக்கும்.

 

வேதனையை நீக்க வேண்டுமென்றால் வேதனையை உருவாக்கித்தான் அந்த வேதனையை நீக்க வேண்டும். அந்த மருந்து அதற்கு வேதனையை உருவாக்கும்.

 

சாதாரணமாக வேதனையை உருவாக்கும்போது அந்த அணு அங்கு உருவாகின்றது. இதை நல்லதாக்க வேண்டுமென்றால் விஞ்ஞான அறிவுப்படி நல்ல மருந்தைச் சேர்க்கின்றார்கள்.

 

இந்த நல்ல மருந்துடன் சேர்க்கப்பட்ட விஷம் உடலில் வேகமாக ஊடுருவி உடலில் அலைய ஆரம்பித்து விடும். நல்ல சத்தின் தன்மை வரப்படும்போது

1.மருந்தில் இருக்கும் விஷம் அதற்குள் போனவுடனே தேங்கி நின்று இது சேமிக்க ஆரம்பிக்கின்றது.

2.வேதனையால் உருவான நோய்க்கு (அந்த அணுக்களுக்கு) வேதனை ஆகின்றது.

 

அப்பொழுது மருந்து சாப்பிடும் பொழுது (ஏற்கனவே உருவான) வேதனையைக் கலைத்துவிட்டால் “அய்யோ..! அம்மா…! உடலெல்லாம் கலையுதே!” என்பார்கள்.

 

கலைந்த உணர்வின் தன்மை நீராக மாறும்போது சிறுநீராகப் போகும். அல்லது அந்த உணர்வின் தன்மை சீதமாக வெளியே போகும்.

1.அப்பொழுது உடம்பெல்லாம் வலிக்கும்.

2.அந்த மருந்தின் தன்மை அதனுடைய உற்பத்தியைக் குறைக்கும்.

 

“அய்யய்யோ…! எனக்கு இந்த மருந்து கொடுத்தார்… இப்படி ஆகிவிட்டது” என்று சொல்லிவிட்டு வேறு ஒரு மருந்து சாப்பிட்டால் என்ன ஆகும்?

 

இது இரண்டையும் ஏற்றுக்கொள்ளாத நிலைகளில் மீண்டும் நோயாக மாறும்.

 

இந்த விஷத்திற்கு இவ்வளவு பெரிய ஆற்றல். வாழ்க்கையில் நாம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

குருநாதர் மூன்று இலட்சம் பேர்களைப் பற்றி யாம் தெரிந்து கொள்வதற்காக எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் சொன்னார்.

1.காலில் செருப்பில்லாமல் நடக்கச் சொன்னார்.

2.வெயிலில் நடக்கச் சொன்னார்.

3.இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் உந்துகின்றது என்று காட்டினார்.

4.அதே சமயத்தில் உனக்குள் ஆசைகள் வரும்போது கஷ்டங்கள் வந்தால் அது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?

5.உன்னுடைய ஆசைகள் மனக்கோட்டைகள் எல்லாம் தகர்ந்து போகும் பொழுது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?

6.இதே மாதிரி ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தெந்த அளவிலே ஈர்க்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.

 

குருநாதர் மூலம் அனுபவ வாயிலாகப் பெற்ற கண்டறிந்த பேருண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டிக் கொண்டே வந்தால் வரும் இன்னல்களை நீக்கலாம்.

 

உடலுக்குப் பின் எங்கே போகவேண்டும் என்பது தெளிவாகும்.

Leave a Reply