சாதாரண ஆத்மாக்கள் புவிக்குள் சுழல்வதையும் ஒளிச் சரீரம் பெற்ற ஆத்மாக்கள் “சப்தரிஷி மண்டலங்களில்” வாழ்வதையும் காட்டினார் குருநாதர்

Polaris and sabdharisi mandalam

சாதாரண ஆத்மாக்கள் புவிக்குள் சுழல்வதையும் ஒளிச் சரீரம் பெற்ற ஆத்மாக்கள் “சப்தரிஷி மண்டலங்களில்” வாழ்வதையும் காட்டினார் குருநாதர்

உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் தெய்வங்களைப் பற்றிய உண்மைகளைக் காட்டுகின்றன.

அந்தந்த மதங்கள் காட்டிய வழி முறைப்படி வணங்கி வரும் தெய்வ வழிபாட்டில் உபதேசித்த அறநெறிகளையும் பல நற்பண்புகளையும் கடைப்பிடித்து உலக மக்கள் வாழ்கின்றார்கள்,

ஒவ்வொரு மனிதனும் தான் வணங்கி வரும் தெய்வங்கள் தங்களைக் காத்து வரும் என்ற நம்பிக்கையில்
1.எல்லா வழிகளிலும் நல்லதைச் செய்யவே
2.உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் எண்ணுகின்றார்கள்.

ஆனால் நான் உனக்குக் காட்டி உணர்த்திய படி
1.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் “தீய உணர்வலைகள்”
2.அவர்களை அறியாமல் அவர்கள் உடல்களில் எவ்வாறு சேர்கின்றன? என்பதனை உணர்த்தினேன் என்றார் குருநாதர்.

அதிலே நீயும் ஒருவன்.

தீய உணர்வுகளில் இருந்து உன்னை நீ எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளப் போகின்றாய்…! என்ற கேள்விக் குறியுடன் அவர் சொல்வதை நிறுத்திக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து என்னை விண்ணை நோக்கிப் பார்க்கும்படி சொன்னார்.

1.பல நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் ஒளி அலைகளைக் காண்பித்தார்
2.அதன் உண்மை நிலைகளையும் உணர்த்தினார்
3.பின்பு சப்தரிஷி மண்டலங்களைக் காண்பித்தார்

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்புக்குள் சிறு சிறு புள்ளிகளாக வலம் வந்து கொண்டு கோலிக் குண்டுகளைப் போன்று பல வண்ணங்களில் இருந்தன.

“அவை எல்லாம் என்ன…?” என்று என்னைக் கேட்டார்.

“நான் தெரியவில்லை…”என்று சொல்லியதும் மற்றவர்களிடம் பைத்தியம் பேசுவது போன்று பேசுவதைப் போல எனக்குப் புரியாத நிலையில் பேசிக் கொண்டே என்னை ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.

நான் திகைத்துப் போனேன் பிறகு அதன் நிலையை உணர வைத்தார்.

அதெல்லாம் சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்திய ஒளி சக்தியைப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் அவர்கள் தவத்தின் வலிமையால் புலன்களின் உணர்வால் அந்த ஒளி சக்தியை தங்களின் சுவாசங்களில் ஈர்த்துக் கொண்டனர்.

சுவாசித்த உணர்வுகளை இரத்த நாளங்களில் சேர்த்துக் கொண்டு, அவர்களின் அவர்களின் உடல்களில் சேர்த்துக் கொண்டதினால் மனிதனை மிருகமாக மாற்றவல்ல தீய உணர்வுகளை மாய்த்தனர்.

1.அதனின் வளர்ச்சியில் தங்களையே அறியும் ஞானிகளாக
2.ஞானத்தின் வழித் தொடரில் மெய்ஞானிகளாகி
3.அவர்களின் உயிரில் ஆத்மாவாக இயங்கிய அணு சிசுக்கள் ஒளியாக மாறி உயிருடன் உயிராகச் சேர்ந்து
4.ஒளியின் உணர்வு கொண்ட ஜடமாக மின்னும் நட்சத்திரங்களைத் தான் நீ பார்த்தது என்றார் குருநாதர்.

உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக இருக்கும் அணு சிசுக்கள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்ப அணு சிசுக்கள் மாறிக் கொண்டே இருக்கும்,

“மாறிய அணு சிசுக்களுக்கு ஒப்பத்தான்” அடுத்த உடலை அந்த உயிர் உருவாக்கும் என்று உணர்த்தினார் குருநாதர்.

சிறிது நேரம் மலைகளையும், காடுகளையும் சமவெளிகளையும் திரும்பிப் பார்க்கச் சொன்னார்.

திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பொழுது இளம் கருப்பு அடர்த்திக்கொப்ப இலேசான ஒளி பிரகாசமான ஒளி, இவ்வாறு பல வகையான வண்ணங்களில் சிறு புள்ளிகளாகத் தெரிந்தன.

அதன் விவரங்களை விளக்கி உபதேசித்துக் கொண்டிருந்தார் குருநாதர். “மின்னல் பாயும் பொழுது… கண்களை மூடிவிடாதே…!” என்றார்.

எனக்குப் பயம்… வந்துவிட்டது. கண்களை மூடவில்லை என்றால் பார்வை இழந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டேன்?

அவ்வளவுதான்… பைத்தியம் பிடித்தவர் போன்று எனக்குப் புரியாத பாஷையில் பேசிவிட்டுப் பிறகு என் உணர்வுகளில் “புரியும்படி” உணர்த்தினார்

நான் சொன்னதைச் செய்கிறேன் என்றாய் இப்பொழுது ஏன் தயக்கம்? என்று கேட்டுவிட்டு
1.“நீயாகவா பார்க்கிறாய்…!
2.நான் அல்லவா… பார்க்கச் சொல்லுகிறேன்…! என்றார்.

சிறிது நேரம் சமவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த மனிதர்களின் உடல்களிலிருந்து பிரிந்து வந்த உயிராத்மாக்கள்தான் சிறு சிறு புள்ளிகளாகத் தெரிவது என்று காட்டினார்.

அதில் பிரகாசமாகத் தெரிந்த புள்ளிகளைச் சுட்டிக் காட்டி சில கூடு விட்டுக் கூடு பாய்ந்து பல செயல்களைச் செய்து வந்து கடைசியில், கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி இழந்த உயிராத்மாக்கள் கரும் புள்ளிகளாக இருக்கின்றன என்றார்.

பல மந்திர தந்திரங்களைச் செய்து காட்டி வந்த உயிராத்மாக்களும், கரும் புள்ளியாக இருக்கின்றன. இவை அனைத்திலும் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக உள்ள அணுசிசுக்கள் தெரிகின்றன.

இன்னும் சிலர் ஒன்றையும் எதிர்பார்ப்பில்லாது பல துன்பங்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு நல்ல செயல்களைச் செய்து வந்து தெய்வமே துணை என்ற நிலையிலும் வளர்ந்து வந்த உயிராத்மாக்கள் இளம் சிவப்புப் புள்ளியாகத் தெரிந்தன.

இதையெல்லாம் சொல்லிவிட்டுச் சமவெளியைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொன்னார்.

அச்சமயம் எதிர்பாராது “பளீர்…பளீர்…ர்ர்” என்று மின்னல் பாய்ந்து கொண்டேயிருந்தது. அந்த மின்னலில் சிக்கிய பல வண்ணம் கொண்ட உயிராத்மாக்களின் அணுசிசுக்கள் செயல் இழந்து விட்டன.

ஆனால் உயிர்கள் அழியவில்லை அவை அழிவதில்லை.

“ஒளியாக இருந்த உயிராத்மாக்கள்” மின்னலின் கதிர்வீச்சில் சிக்கினாலும் எவ்விதப் பாதிப்புமில்லாது மின்னிக் கொண்டேயிருந்தன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்கள் மறு பிறப்பிற்கு வராமல் பூமியின் ஈர்ப்பில் சுழன்று கொண்டே தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவைகளாகின்றன.

காலத்தால் விண்ணைச் சென்றடைந்து விடுகின்றன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்களிலிருந்து வெளிப்படும் ஒளி அணுக்கள் சந்தர்ப்பவசத்தால் பிறிதொரு மனிதனின் உணர்வின் ஈர்ப்பில் சேர்ந்தால்
1.அந்த மனிதனின் ஆற்றல் பெருகி
2.ஞானத்தின் வழித்தொடரில் தன்னை அறியக்கூடிய மெய் ஞானியாகின்றான்.

இவ்வாறு நிகழ்வது எங்கோ ஒருவருக்குத்தான் என்று உணர்த்திவிட்டு மின்னலில் செயலிழந்த உயிராத்மாக்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

மின்னலின் தாக்குதலுக்குள்ளான உயிராத்மாவின் அணுசிசுக்களின் செயலிழந்த சத்துக்கள் உயிரில் இணைந்த ஆத்மாவாக இருக்கின்றன. அது மீண்டும் மனிதனாக உடல் பெறத் தகுதியற்றதாகிறது.

இத்தகைய உயிராத்மாக்கள் பூமியில் உள்ள தாவரங்கள் மீது படும் பொழுது உயிரின் துடிப்பினால் செயலிழந்த ஆத்மாக்கள் மீண்டும் அணுக்கருக்களாக உருவாகி “புது விதமான பூச்சிகளாக” உருப்பெறுகின்றது என்பதை உணர்த்தினார்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Leave a Reply