இரத்தக் கொதிப்பு வருவதற்குக் காரணம் என்ன…?

Tension.jpg

இரத்தக் கொதிப்பு வருவதற்குக் காரணம் என்ன..?

சில குடும்பங்களில் குழந்தைகள் மேல் மிகவும் பற்றாக இருப்பார்கள். குழந்தைகள் சொன்னபடி கேட்கவில்லையென்றால் வேதனைப்படுவார்கள்.

அவ்வாறு வேதனைப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவன் “அய்யய்யோ…” என்று சொன்னால் கூட ஆங்காரம் தாங்காது அடிக்கும் தன்மைக்கே வந்துவிடும்.

உதாரணமாக, புலி தன்னுடைய உணவுக்காகப் பாய்ந்து தன் இரையைத் தாக்கும் பொழுது அது துடிப்பதைக் கவனிக்கின்றதா? இல்லை. தனது பசியை ஆற்றுவதற்காக கொடூரமான நிலையில் தாக்குகின்றது.

1.சில குடும்பங்களில் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால்
2.கடினமாகத் தாக்கிப் பேசுவதும்
3.அவன் அலறினாலும் அதைப் பற்றிச் சிந்தனையே இருப்பதில்லை.
4.இந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டபின் உணர்ச்சிகள் நம் உடலில் அங்கங்களை இயக்குகின்றது. அந்த எண்ணம் வலுப்பெறுகின்றது.
5.அதே உணர்வுகள் நம் இரத்தங்களில் செல்கிறது.

உடல்.., அந்த இரத்தத்தில் வருவதைத்தான் உணவாக உட்கொள்கிறது.

தாக்கும் உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் கலந்து கொண்டபின் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து “சிந்தனையை இழக்கின்றோம்”.

இதைப் போன்று நம் உடலிலுள்ள இந்த அணுக்கள் கார உணர்ச்சிகளைத் தூண்டிய உடனே அது நமக்குள் துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

கோபம் வருபவர்களைப் பார்த்தால் “நடுக்கம்” அதிகமாக இருக்கும்.

இதைப் போன்று அந்த அணுக்கள் தாங்காது அந்த உணர்ச்சிகளை அதிகமாகச் சேர்த்து அது பெருக ஆரம்பித்தால் அடுத்து நமக்குள்ளும் வேதனை என்ற செயல்களைச் செய்ய வைத்துவிடுகிறது.

அவ்வாறு வேதனைப்படுத்தி அதனை ரசிக்கும் தன்மையும் வந்துவிடுகின்றது.

நம் உடலில் இந்த உணர்வுகளை மாற்றிவிட்டால் நம் உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும், புலி எப்படி வெறி கொண்டு தாக்கி ஒன்றை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்கின்றதோ அதுபோன்று வெறி கொண்டு பிறரைத் தாக்கிடும் உணர்வுகள்தான் வரும்.

1.பிறர் வேதனைப்படுவதைச் சிந்திக்காது
2.இத்தகைய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்தபின்
3.மனிதனாக உருவாக்கிய நிலைகளை இது மாற்றி
4.இதனுடைய உணர்வுகள் குறையக் குறைய இரத்தக் கொதிப்பாக மாறிவிடும்.

நாம் சிந்திக்கும் மூளையில் இதன் உணர்ச்சிகளைக் கூட்டி இதன் உணர்வுகள் அனைத்தும் உடலிலே இயக்கங்களை மாற்றிக் கொண்டயிருக்கும்.

1.நரம்பு ஓட்டங்களில் பச்சைப் பசேல் என்று இறுக்கமாகிவிடும் (டென்சனாகிவிடும்).
2.கண்களில் பார்த்தால் செக்கச் செவேல் என்று இருக்கும்.
3.நகங்களில் சிகப்பின் ஓட்டங்கள் வரும்.

ஏனென்றால் “இரத்த நாளங்களில்… வீரிய உணர்வு வரும்பொழுது” அத்தகைய நிலைக்குச் செல்லும்.

நம் உயிரிலே பட்டவுடன் இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகின்றது. அப்படிப் பரவப்படும் பொழுது “மிகப் பயங்கரமாகத் தாக்கவேண்டும்” என்ற உணர்ச்சிகள் தோன்றுகின்றது.

அப்பொழுது “எது” நம்மை இயக்குகின்றது?

நாம் “நுகர்ந்த உணர்வுகள்” உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சியின் வழியில் நம்மை இயக்குகின்றது.

அந்த உணர்ச்சிகள் நம் உடலிலே சேர்த்துக் கொண்டபின் உடலிலே உள்ள நல்ல அணுக்களிலும் இதை மாற்றி “இரத்தக் கொதிப்பு” நோயாக வந்துவிடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியம்.

Leave a Reply