நல்லவராக எண்ணும்போது அவரிடமுள்ள தவறையும், தவறானவராக எண்ணும்போது அவரிடமுள்ள நல்லதையும் அறிய முடியவில்லை

Good and bad.jpg

நல்லவராக எண்ணும்போது அவரிடமுள்ள தவறையும், தவறானவராக எண்ணும்போது அவரிடமுள்ள நல்லதையும் அறிய முடியவில்லை

உதாரணமாக இப்பொழுது ஒருவர் தன் மகன் மீது பாசமாகப் பிரியமாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவருடைய மகன் தீய பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பவனாக   இருந்தாலும்

1.அவன் மீது  பாசம்  வைத்திருந்ததால்,

2.அவன்  எந்தத் தவறு செய்திருந்தாலும்

3.தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்.

அதே சமயத்தில் அவருடைய இரண்டாவது மகன் நல்லவனாக இருப்பான். தந்தையே தவறு செய்திருந்தாலும் தவறு என்ற வகையில் மகன் தந்தையை வெறுக்கும் பொழுது தந்தையும் அவன் மீது வெறுப்பைக் காட்டுவார்.

“இவன் அயோக்கியன்.., நம்மையே குற்றம் சாட்டுகின்றானே.., இவன்  மோசமானவன்.., அப்பனையே எதிர்க்கிறான் பார்” என்று தந்தை மகனையே வெறுக்கத் தொடங்கிவிடுவார்.

1.அவன் நல்லதையே செய்தாலும்,

2.அவனுடைய தந்தை அவனைக் குற்றவாளி என்றுதான் எண்ணுவார்.

3.ஆனால், முதல் மகன் தவறு செய்கின்றான். தவறு செய்தாலும் “மகனே.., நீ நல்லவன்டா…” என்று அவனை ஆதரிப்பார்.

ஏனெனில், இந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றிக் கொள்ளும்.

மற்றவர்கள் முதல் மகன் செய்த தவறுகளைக் குற்றங்களாக அவன் தந்தையிடம் கூறினாலும் அவர் ஏற்றுக் கொள்ளாமல்.., “இவன் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டான்…, நல்லவன்” என்று சொல்வார்.

ஆனால், இரண்டாவது மகனைப் பார்த்து, “அயோக்கியன்.., இவன் தவறு செய்வான்” என்றுதான் கூறுவார்.

முதல் மகன் மீது பாசம் அதிகமாக இருப்பதால் அவன் செய்த தப்பை ஏற்றுக் கொண்டாலும் “தப்பு இல்லை…” என்றுதான் அவருக்குச் சொல்ல வரும்.

இது இயற்கையின் செயலாக்கங்கள்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின்  உணர்வை  நம்முடன் இணைக்கப்படும் பொழுது அதே  உணர்வின் தன்மை நமக்குள் செயல்படுகின்றது.

1.தம் பையனைக் கண் கொண்டு பார்த்து,

2.அவன் தப்பு செய்திருந்தாலும் கூட,

3.அவனை நல்லவன் என்று எண்ணும் பொழுது,

4.அந்த உணர்வு கொண்டு அவருக்குள் படமாக்கி,

5.அவனை அவரிடத்தில் நல்லவனாக்குகின்றது,

இதைத்தான் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்” என்று உரைக்கப்பட்டது.

தந்தை செய்த தவறுகளையெல்லாம் முதல் மகனும் செய்து வருவான். இந்த நஞ்சின் உணர்வின் தன்மை அவருக்குள் வளரப்படும் பொழுது அது அவரிடத்தில் “கடும் நோயாக” விளைகின்றது.

ஆனால் அந்த சமயத்தில், தந்தைக்கு உதவ வேண்டிய முதல் மகனோ தந்தையால் நல்ல பிள்ளை என்று பாராட்டுப் பெற்றவன் கடும் நோயில் தவிக்கும் தந்தையைப் பார்த்து…,

1.“நீ செய்த செயல்களுக்கு நீ அனுபவிக்கின்றாய்

2.நான் என்ன செய்யட்டும்…!” என்று சொல்வான்.

நல்ல பிள்ளை என்று எவனைச் சொன்னாரோ…, அவனைப் பார்த்து “அடேய்.., பாவி” என்று தந்தை தம் மகனைப் பார்த்துச் சொல்லும் நிலை பின் நாட்களில் வரும்.

இதை நாம் பார்க்கலாம். சில குடும்பங்களில் உணர்வின் இயக்கங்கள் இப்படி இருக்கின்றது.

எந்த உணர்வுகளைக் “காந்தம் கவர்ந்து” தன்னிடத்தில் இணைக்கின்றதோ அதனின் இயக்கமாகத்தான் அது இயக்கும் வேறொன்றையும் இயக்காது

“நாம் நுகரும் உணர்வுகள்” (கவர்ந்து சுவாசிக்கும்) நம்மை எப்படியெல்லாம் இயக்குகின்றது என்று இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply