நாம் எதிலே வலிமையானவர்களாக ஆக வேண்டும்?

third-eye.jpg

நாம் எதிலே வலிமையானவர்களாக ஆக வேண்டும்?

1.இயற்கையில் ஒரு அணு “தன் ஆற்றலை” எவ்வாறு பெருக்கிக் கொள்கின்றது?

இயற்கையில்.., “ஒரு அணுவை.., ஒரு அணு விழுங்கித்தான்.., ஆற்றல் பெருகி வரும்”.

இப்பொழுது நாம் அந்த வகையிலே ஆற்றல்மிக்க நிலைகள் ஒன்றை ஒன்று விழுங்கி.., “விழுங்கி விழுங்கித்தான்..,” ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மை அத்தனையும் வேலை செய்யும்.

இதைப் போலத்தான் கெட்டவன் நல்லதைச் செய்வான்.., நல்லவன் கெட்டதைச் செய்வான். இப்படி இரண்டும் ஒன்றுக்கொன்று செயல்படும் தன்மைகள் கொண்டது.

“ஒரு நல்லவன்” திடீரென்று பயந்தான் என்றால் விஷம் வந்து இவனை ஆட்கொண்டுவிடும். அப்படி இவன் விழுங்கிய நிலைகள் கொண்டு “நல்லது.., கெடுகிறது”.

“ஒரு முரடனானவன்” தாக்கும் நிலைகள் கொண்டு அசுர உணர்வின் தன்மை கொண்டு அவனுக்கு வலிமையான நிலைகளை அங்கே பெறுகின்றான்.

அந்த வலிமையின் தன்மை வரப்படப் போகும் பொழுது அவனுக்குள் விஷத்தைச் சேர்த்து அவன் உடலின் தன்மை விஷமாக மாறும். “மிருகமாகப் பிறப்பான்’.

2.“நல்லதை அழிக்கும் நிலைதான்” இன்று வலுவாக இருக்கின்றது

இன்று மனிதனுடைய நிலைகளில் இருக்கப்படும் பொழுது ஆத்திர புத்தியுடன் நாம் பேசினோம் என்றால் அந்த ஆத்திர புத்தியினுடைய நிலைகள் இங்கே அமிழ்த்தி அசுரத்தன்மையாக அதாவது மிருகத்தின் உணர்வுகள் அங்கே பதிந்துவிடும்.

ஏனென்றால், மிருகத்தின் தன்மை விஷத்தின் தன்மையை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டு இந்த உணர்வின் தன்மை இங்கே வந்துவிடும். இங்கே இரத்தக் கொதிப்பாக வந்துவிடும்.

இதைப் போல ஒவ்வொரு நிமிடமும் நம்மையறியாமலே பல நிலைகள் செயல்படும் தன்மையிலிருந்து இன்று உலகம் முழுவதற்கும் மனிதனுடைய நிலைகள் “இருள் சூழும் நிலைகளுக்கு” வந்துவிட்டது.

விஞ்ஞானத்தின் தன்மையில் மனித உடலில் ஒவ்வொருவரும் வெளியிட்ட மூச்சலைகள் அனைத்தும் இந்தக் காற்றிலே நச்சுத்தன்மையாக மாறிவிட்டது.

ஒன்றை ஒன்று விழுங்கும் நிலைகள் என்றால் ஒன்றை ஒன்று அழிக்கும் நிலைகளாக மனிதனுக்குள் வளர்த்து வந்தான்.

அன்றைய அரசர்களில் ஒருவன் தெளிவாக வருகிறான் என்றால் அவன் தெளிவான நிலைகளில் அடக்கிக் கொண்டு வருகிறான். அதைப்போல நாமும் நடத்த வேண்டுமென்று மற்ற அரசனும் நினைக்கின்றான்.

அவன் தெளிவான நிலைகளில் வந்துவிட்டால் நம்மைக் கவிழ்த்து விடுவான். “முதலில் அவனை எப்படிக் கெடுப்பது?” இப்படித்தான் இன்றும் உலகம் முழுவதற்கும் முன்னேற்றம் அடைய முடியாதபடி சென்று கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான முன்னேற்றம் அடைந்திருந்தாலும் இன்றைக்கும் இதைப் போலத்தான் ஆரம்ப நிலைகளிலிருந்து “ஒரு வலுக் கொண்டவன் வலுவற்றவனை அடக்குவது..,” என்ற நிலைகளில் செயல்படுகின்றனர்.

3.வலுவான மனிதர்களாக இருக்கும் நாம் எதை நமக்குள் வலுவாக்க வேண்டும்?

ஒரு அணுவின் தன்மை வலு கொண்டது வலுவற்றதைத் தனக்குள் அது வசியப்படுத்திக் கொள்கின்றது. இது தான் உலக இயல்புகள்.

வலுகொண்ட நாம் வலுவை எதிலே சேர்ப்பது?

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் அந்த மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானித்தல் வேண்டும்.

1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை

2.நம் உயிர் வழியாக நுகர்ந்து சுவாசித்து

3.நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.

இந்த வலுவான எண்ணத்தை நாம் சேர்க்கப்படும் பொழுது இந்த மனிதனின் உடலில் நாம் வெல்லுகின்றோம்.

ஒளியின் சரீரமாக நாம் பெறுகின்றோம். “ஒளிச் சரீரம் பெறும் வலுவின் தன்மைதான்.., நமக்குள் அது வளரவேண்டும்”.

இதுதான் குருநாதர் எமக்குக் காட்டிய மெய் வழி.

Leave a Reply