வெள்ளிக் கோளைப் போன்று மின் கதிர்களை அகஸ்தியனும் அவன் மனைவியும் நுகர்ந்து ஒளிச்சுடராக துருவ நட்சத்திரமானார்கள்

அகஸ்தியன் துருவ நட்சத்திரம்

வெள்ளிக் கோளைப் போன்று மின் கதிர்களை அகஸ்தியனும் அவன் மனைவியும் நுகர்ந்து “ஒளிச்சுடராக… துருவ நட்சத்திரமானார்கள்”

27 நட்சத்திரங்களில் வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாக வருவதை அந்த மின் கதிர்களை ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் கவர்ந்து ஒளியாக மாற்றுகிறது.

“அதே ஆற்றலை.., அகஸ்தியன் பெறுகின்றான்”. ஒளியான உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்து இன்றும் துருவ நட்சத்திரமாக வாழுகின்றான்.

“அது எப்படி…?” என்று சற்றுப் பார்ப்போம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் தன் தாய் கருவிலே இருக்கும்போது விஷத்தினை வென்றிடும் ஆற்றலைப் பெற்றான்.

தன் தாய் விஷத்தை முறித்திடும் மூலிகைகளைப் பரப்பி வைத்ததனால் விஷத்தை முறித்திடும் உணர்வுகள் அந்தத் தாயின் இரத்தங்களில் கலந்து எத்தகைய விஷத் தன்மை இருந்தாலும் முறித்திடும் தன்மையும் சிந்திக்கும் ஆற்றலும் வலு கூடும் தன்மையும் பெறுகின்றது.

அதாவது மின்னல்கள் தாக்கப்படும்போது மின் கதிர்களின் வேகத்தைத் தடைப்படுத்தி அந்த உடலில் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து அந்த உடலில் உள்ள அணுக்களை மாற்றும் தன்மை பெறுகின்றது.

அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும்போது தாய் கருவிலே விளையும் “அகஸ்தியன்” என்று பின் கூறும் கருவில் வளரும் அந்தச் சிசு தான் இந்த உணர்வுகளை அது பெறப்பட்டு “எதனையுமே.., ஒளியாக மாற்றும் சக்தி” அந்தக் கருவிலே விளையும் குழந்தை பெறுகின்றது.

தாயின் இரத்தத்திலே கலந்தாலும் வடிகட்டும் உணர்வின் தன்மை இந்தக் கருவில் விளையும் குழந்தைக்குக் கிடைக்கின்றது. அதன் வழி பத்து மாதமும் நுகர்ந்தபின் குழந்தை அகஸ்தியன் பிறக்கின்றது.

பிறந்தபின் “மின்னல்கள் ஏராளமாக வந்தாலும்…, மின்னல்களை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்..,” வெள்ளிக் கோள் எப்படி ஒளிக்கற்றைகளை எடுத்துக் கொள்கிறதோ இதைப் போல உணர்வுகளை இவன் நுகரும்போது அறிவின் வளர்ச்சி அவனுக்குள் வருகின்றது.

எப்படி மின்னல்கள் வெகு தூரம் ஊடுருவிச் செல்லும்போது அந்த வெளிச்சத்தில் பொருள்களைக் காண முடிகின்றதோ அதைப் போல அறிவின் ஞானங்கள் இவனுக்குள் வளர்கின்றது.

அவன் நினைவாற்றல்.., “அகண்ட அண்டத்தில்” செல்கிறது.

இப்படி ஒன்றுடன் ஒன்று மோதி இவனுக்குள் உலகத்தின் தன்மைகளை அறிந்திடும் பேராற்றல் பெறுகின்றான்.

தாயின் கருவில் விளையப்படும்போதுதான் சிறு வயதிலேயே இத்தகைய ஆற்றல்களைப் பெறுகின்றான்.

ஆகவே, இதன் தன்மை வளர்ச்சி பெற்றபின் இவன் வானை நோக்கிப் பார்த்து மின்னல்கள் எவ்வாறு வருகிறது? என்றும் எதிலிருந்து மின்னல்கள் வருகிறது? என்றும் உற்று நோக்கினான்.

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவரும் அது நட்சத்திரங்களாக மாறி அது கவரும் உணர்வுகள் அதனதற்குத் தக்கவாறு பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதில் வரும் துகள்கள் தூசிகளாக மாறுவதைத்தான் நமது சூரியன் கவர்கிறது.

வரும் பாதையில் எந்தெந்தக் கோள் துருவப் பகுதியில் கவர்கிறதோ அதற்குத் தக்க எடுத்துக் கொள்வது இதைப் போல மின் கதிர்கள் வருவதை மற்றக் கோள்கள் எடுத்துக் கொள்வதும் அதற்குத் தக்கவாறு இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றது சூரியன்.

இதைப் போல நம் உயிர் இந்த உடலை ஒரு பிரபஞ்சமாக உருவாக்குகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் “சூரியன் எப்படி ஒளிக்கதிராக மாறியதோ” இந்தச் சூரியக் குடும்பத்தில் “வெள்ளிக் கோள் எப்படிப் பெற்றதோ” இதைப் போலத்தான் அகஸ்தியன் அதைப் பெறும் சந்தர்ப்பம்  கிடைக்கின்றது.

அதாவது, அகஸ்தியன் தாய் கருவிலே விளையப்படும்போது விஷத்தை வென்றிடும் உணர்வுகள் அவன் பெறுகின்றான். பிறந்தபின் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திலேயே வெள்ளிக் கோள் எடுப்பது போல இவனுக்குள் அந்த ஒளியின் உணர்வை அதிகமாக எடுத்துக் கொள்கிறான்.

அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைதான் அவன் எண்ணங்களை “எங்கே செலுத்தினாலும்.., அதன் உணர்வை எளிதில் அறிந்து கொள்ளும் ஞானத்தைப் பெறுகின்றான்”.

ஏனென்றால் விஷத்தின் தன்மை கடுமையானால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள்தான் தான் திருமணமான பின் தன் மனைவிக்கு எடுத்துக் சொல்கின்றான்.

மனைவியும் கண்ணுற்றுப் பார்த்து கணவன் சொல்லும் உணர்வை நுகர்ந்தறிந்து “தன் கணவனால்தான் இதை அறிய முடிந்தது” என்று கணவனைப் போற்றித் துதிக்கின்றது.

ஆனால், அதே சமயத்தில் தன் மனைவி சொன்னதை ஏற்று இந்த உணர்வின் தன்மையை ஏற்றுக் கொண்டது என்ற உணர்வுகளை இருவரும் ஒன்றாக்கப்படும் போது “இரு உயிரும் ஒன்றி” அந்த உணர்வின் தன்மையை உருவாக்கும் தன்மை பெறுகின்றனர்.

மனிதர்கள் உடலுடன் சேரும் போது தன் இனத்தை உருவாக்குகின்றனர். அந்த உணர்வின் தன்மை தான் பெறப்படும்போது இந்த ஆண் பெண் என்ற நிலைகளில் இந்த உணர்வின் தன்மை “ஒளியின் சரீரமாக” இங்கே மாறுகின்றது.

ஒளியின் உணர்வின் கருவாக மாற்றப்படும்போது இப்படி மின் கதிரின் உணர்வைத் தனக்குள் எடுத்து ஒளியின் சரீரமாகப் பெறக் கூடிய தகுதி பெறுகின்றனர்.

அப்பொழுதுதான் அகஸ்தியன் துருவத்தை நோக்கி எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எதன் பகுதியிலிருந்து வருகின்றதோ அதையே உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து அதையே உருவாக்கினான்.

இருவருமே ஒன்றென இணைந்து அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வால் இன்று எதை எல்லையாக அடைந்தனரோ எதை எல்லையாக உற்று நோக்கினார்களோ இந்த உடலைவிட்டுச் சென்றபின் அதையே எல்லையாக அமைந்து இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்கிறார்கள்.

அதை நாம் நுகர்ந்தால் நாமும் அவன் ஒளியாக மாற்றியது போல் ஒளியின் சுடராக மாற முடியும்.

Leave a Reply