“இன்றைய தியானம்” நாளைய அழியா ஒளிச் சரீரம்

அழியா ஒளிச் சரீரம்

“இன்றைய தியானம்” நாளைய அழியா ஒளிச் சரீரம்

உயிரைக் கடவுளாக மதித்து உடலைக் கோவிலாக மதித்து உணர்வுகளைத் தெய்வமாக மதித்து நாம் தியானமும் ஆத்ம சுத்தியும் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:-

தியானத்தின் பலன்கள்

1.நமக்குள் சிந்திக்கும் தன்மைகளும் தெளிவான நிலைகளும் நமக்குள் வருகின்றன.

2.நமது ஆன்மா (உணர்வுகள்) தூய்மை அடைகிறது.

3.கண் கவர்ந்து பதிய வைத்த தீமைகளை “அதே கண் கொண்டு” அகற்றும் திறன் நாம் பெறுகின்றோம்.

4.தீமைகள் உட்புகாது தடுக்க முடிகின்றது.

5.மன வலிமை உடல் நலம் தொழில் வளம் பெருகுகின்றது.

6.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நமக்குள் “புயலெனப் பெருகி..,” ஜீவ அணுக்களாகி மற்ற தீய உணர்வுகளை வெளியேற்றிவிடும்

7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் ஜீவ அணுக்களாகி அது நமது  எலும்புகளுக்குள் இருக்கும் ஊன்களுக்குள் அருள்ஞான வித்துகளாகி நமது உயிராத்மாவின் செயலாக்கமாகி நம்மை ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

8.துருவ நட்சத்திரத்தின் பேரருள்  பேரொளியின் “காந்தப் பாதுகாப்பு வட்டத்திற்குள்” செயல்படும் நிலை பெறுவோம்.

9.கணவன் மனைவி இணைந்து எடுக்கும் தியானம் நம் ஆத்மாவை “வைரமாக.., ஜொலிக்க வைத்திடும்”.

10.மனிதனாக இன்று இருக்கும் நாம் பரிணாம வளர்சியான “ரிஷி நிலை” பெறும் தகுதியை அடைகின்றோம்.

11.நமக்குத் தீமை புரிபவர்களது உயிரையும் கடவுளாக மதிக்கும் பண்புகள் வளர்கின்றது. ஆகவே அந்த உயிரிலும் தீமை புகாது தடுத்திடும் நிலையை உருவாக்குகின்றோம்.

12.அதனால் இந்த உலக மக்களையும் நாம் காக்க முடியும். அவர்கள் படும் துயரங்களையும் நம்முள் புகாமல் தடுக்கவும் முடிகின்றது.

13.நம்மை அறியாது சேர்ந்துள்ள சாப வினைகள்  பாப வினைகள்  தீய வினைகள் பூர்வஜென்ம வினைகள் வலு இழந்து விடுகின்றன. இனி வரும் எத்தகையை வினைகளையும் மாற்றிடும் அருள்ஞானம் நமக்குள் வளர்கின்றது.

14”மெய்ப் பொருள் காணும் திறனும்” மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறுகின்றோம்.

பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறக்கூடிய வழிமுறை

1.அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகள் நம் சிந்தனைக்குள் இருக்க வேண்டும்.

2.ஞான குருவின் உபதேசங்களைத் திரும்பத் திரும்பப் படித்து அறிந்து உணர்ந்து அதை நம் நினைவிற்குள் கொண்டு வர வேண்டும்.

3.மகிழ்வான உணர்வுகளைக் குருவிற்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

4.“நம் எண்ணம் சொல்  செயல் வெளிப்படும் பொழுது..,” இவற்றில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் கண்டிப்பாக நுகர்ந்து “ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்.., அதை முன்னிலைப்படுத்த வேண்டும்”.

5.மற்றவர்களின் எண்ணங்கள் சொல் செயல்களால் நாம் நுகரும் எத்தகைய உணர்வுகளுக்கும் முன்பாக.., “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை உடனுக்குடன் நுகர்ந்து..,” அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.

6.சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம், இதைச் செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.

7.நாம் ஒவ்வொருவரும் இரவு தூங்கச் செல்லும் முன்  அரை மணி நேரமாவது குறைந்தது பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை நமக்குள் தியானித்து இணைக்க வேண்டும்.

8.அந்த உணர்வுடனே நாம் உறங்குதல் வேண்டும். அதே நினைவுடன் காலையில் ஒரு பத்து நிமிடமாவது அதைத் தியானித்தல் வேண்டும்.

9.உயிருடன் இணைந்த உணர்வுகளை “குரு காட்டிய வழியில்.., குருவின் துணை கொண்டு.., ஒளியின் சரீரமாக மாற்றும் சந்தர்ப்பங்களை உணர்ந்து.., அதைக் கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்”.

10.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை… சதா.., “முன்னிலைப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்”.

11.மருத்துவர் கொடுக்கும் மருந்தினை நாம் கட்டாயமாக்கி உட்கொள்வது போன்று விஞ்ஞானிகள் உயிரினத்தின் செல்களை இணைக்கும் நிலையில் (இரு உயிரணுக்களை) கட்டாயப்படுத்தி ஓர் புது ரூபத்தை மாற்றி உற்பத்தி செய்வதுபோல் “கட்டாயப்படுத்தி.., துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நமக்குள் இணைக்க வேண்டும்”.

12.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் ஒளி சுடராக மாற்றும் நிலையைத்தான்.., “நமது இன்றைய செயல்களாக அமைத்து.., நாளைய சரீரமாக நமது உயிராத்மாவை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்”.

ஓம் ஈஸ்வரா குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா…!

Leave a Reply